தமிழ் discussion

9 views

Comments Showing 1-4 of 4 (4 new)    post a comment »
dateDown arrow    newest »

message 1: by Prem (new)

Prem | 2 comments வணக்கம்!

இந்தக் குழுவின் நோக்கம் தமிழ் புத்தக வாசிப்பின் பகிர்வு என்ற மேலான எண்ணம். அதை நான் வரவேற்கின்றேன். ஆனால் எனக்குள் ஒரு கேள்வி. அதை இங்கே பகிர்ந்து கொள்கின்றேன். GoodReads தளத்தில் எனக்கு தெரிந்து பல தமிழ் குழுக்கள் இருக்கின்றன. மீண்டும் புதிதாக தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதன் நோக்கம் என்ன? ஏன் ஏற்கனவே பலரும் உறுப்பினர்களாய் இருக்கும் ஒரு குழுவை அக்குழுக்களின் தற்போதைய தலைவர்களுடன் கலந்துரையாடி புதுப்பிக்க முயற்சி செய்ய முயற்சிக்கக் கூடாது? இதன் மூலம் இன்னும் நிறைய GR உறுப்பினர்களை உரையாடல்களில் பங்கு பெற வைக்க முடியும் அல்லவா?

உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன். கீழே மற்ற தமிழ் புத்தகக் குழுக்களின் இணைப்பும் அந்த குழுக்களில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையும் மேற்கோளுக்காக தந்துள்ளேன்.

குழுக்கள்:
Tamil Books (566 Members)
தமிழ் வரலாற்றுப் புத்தகங்கள் - Tamil History Books (516 Members)
Tamil Historical Novels - தமிழ் வரலாற்றுப் புதினங்கள் (149 Members)
Tamil Book Readers - தமிழ் நூல் வாசகர்கள் (175 Members)
Goodreads Tamil Librarians Group (8 Members)
தமிழ் (7 Members)
வாசகசாலை (7 Members)
புத்தக கடை (Book Shop) (3 Members)

உரையாடல் களம்:
Tamil Books Discussion - தமிழ் புத்தக விவாதங்கள் (Indian Readers குழு)

நன்றி
பிரேம்!


message 2: by Prem (new)

Prem (toprem) | 4 comments Mod
நீங்கள் ஒரு சிறந்த கேள்வியைக் கேட்டீர்கள்.
சரி, நான் எனது பார்வையைப் பகிர்ந்து கொள்கிறேன். இது சரி அல்லது தவறாக இருக்கலாம்.
ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு நோக்கம் உள்ளது, இந்த குழுவின் நோக்கம்
1.) புதிய அல்லது அரிதாகவே தெரிந்த புத்தகங்களை அறிமுகப்படுத்துகிறது மற்றும் தமிழ் வாசகர்களிடையே அதிக தொடர்புகளை செயல்படுத்துகிறது.
2.) எல்லோரும் ஒப்புக்கொண்டால், இந்த குழுவில் தமிழ் கவிதைகள் மற்றும் தமிழ் கவிதை புத்தகங்களை மட்டுமே விவாதிப்போம்.
எல்லோருடைய பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்


message 3: by Prem (new)

Prem | 2 comments மிகவும் நல்லது... இவையே குழுவின் முக்கிய நோக்கமாக இருக்கும்பட்சத்தில் அதை தெளிவாக குழு பற்றிய குறிப்பில் கொடுக்கலாம். என்னிடம் கேட்டால் இந்த இரண்டு நோக்கங்களும் தமிழ் புத்தகங்கள் என்ற பெரிய பிரிவின் கீழ் வரும் சிறு பிரிவுகள். இவைகளை நாம் மற்ற குழுக்களிலும் பேச முடியும், மற்ற உறுப்பினர்களும் ஆர்வம் இருக்கும் வகையில் பங்கு பெற வைக்க முடியும் என்றுதான் தோன்றுகிறது. தனியாய் குழு அமைத்து பேசப்பட வேண்டுமா என்ற கேள்வி எழாமல் இல்லை. மற்ற உறுப்பினர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.


message 4: by Prem (new)

Prem (toprem) | 4 comments Mod
There is error in broadcasted message instead of "Since there is no activity in this group. Do we really needs this group? Please share your thoughts" .
I sent Since there is activity in this group. Do we really needs this group? Please share your thoughts. Apologies for sending wrong info.


back to top