Thangavel Paramasivan > Thangavel's Quotes

Showing 1-5 of 5
sort by

  • #1
    Selventhiran
    “நூல்கள் அளிக்கும் சுவாரஸ்யம் என்பது ஒரு வாழ்க்கைக்குள் ஓராயிரம் வாழ்க்கை வாழும் நிகர் அனுபவம். வாழ்நாள் முழுக்க உடன் வரக்கூடியது. வாழ்வில் உக்கிரமான தருணங்களில் மனதின் அடியாழத்திலிருந்து எழுந்து வருவது. நாம் வாழும் வாழ்க்கைக்கு மேலும் நுண்ணிய அர்த்தங்களைச் சேர்ப்பது. இந்த வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கும் பெருக்கிக்கொள்வதற்கும் வழிகாட்டுவது.”
    செல்வேந்திரன் Selventhiran, வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?

  • #2
    Ramesh Predan
    “இயல்பிலேயே தமிழ் மொழி அத்தனை கவித்துவமானது; என்னை உனக்கு அடையாளம் காட்டிவிட்டது. ஒழுங்காகத் தமிழ் பேசி வாழ்ந்தாலே நம் மக்களின் ஆயுள் கூடும். நல்ல தமிழ் பேசுபவர்க்கு ரத்த அழுத்தம்,”
    ரமேஷ் பிரேதன் Ramesh Predan, ஐந்தவித்தான் [Iynthavithan]

  • #3
    Ramesh Predan
    “ஒடுக்குதலுக்கு உள்ளாவதையே தனது உயிர்வாழும் ஆற்றலாக மாற்றிக்கொள்ளும் யுக்தி அறிந்த மொழி உலகில் தமிழ் போல் வேறில்லை. பிணமாக நடிக்கத் தெரிந்தவர் சாவதில்லை. தேவகி நான் உயிரோடு இருப்பதுபோல் நடித்துக்கொண்டிருக்கிறேன்; ஆதலால் எனக்கு மரணமில்லை.”
    ரமேஷ் பிரேதன் Ramesh Predan, ஐந்தவித்தான் [Iynthavithan]

  • #4
    Ramesh Predan
    “ஆணும் பெண்ணும் சேர்ந்து பிள்ளை பெற்றுக் கொள்ளலாம்; ஆனால், சேர்ந்தே இயங்க முடியாது. எதிர்காலத்தில் உலகப்போர் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே அணி பிரிந்து மூளுவதாக இருக்கும்.”
    ரமேஷ் பிரேதன் Ramesh Predan, ஐந்தவித்தான் [Iynthavithan]

  • #5
    Ramesh Predan
    “சங்ககாலச் சிற்றரசர்கள் தங்களிடம் பிச்சை பெற்ற புலவர்களின் பாடல்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். உண்மையைச் சொல்கிறேன், தமிழிலக்கியம் பிச்சைக்காரர்களாலானது; சங்ககாலம் முதல் இன்றைய பின்நவீன காலம்வரை செம்மொழியில் பிச்சைக்காரர்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். படைப்பாளர்களைப் பிச்சைக்காரர்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்ச் சமூகம் திட்டமிட்டு நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. பரிசில் வாழ்க்கை. இந்தியாவில் தலித்தாகப் பிறப்பதைவிடத் தமிழ்க் கவிஞனாகப் பிறப்பது சாபக்கேடானது. திருவள்ளுவர் உணவருந்தும்போது அவருடைய பத்தினி வாசுகி அம்மையார் ஒரு குவளைவில் நீரும் ஊசியும் அருகே வைப்பாராம். அம்மையார் சோறு பரிமாறும்போது இலைக்கு வெளியே சிந்துவதையும், தான் சாப்பிடும்போது கீழே சிந்துவதையும் வள்ளுவர் ஊசியால் குத்தியெடுத்து நீரில் அலசி மீண்டும் இலையிலிட்டுச் சாப்பிடுவாராம். வறுமை அவரைப் பருக்கைகளைப் பொறுக்கித்தின்ன வைத்திருக்கிறது. பாரதியார் சோறு சோறு என எத்தனை இடங்களில் பேய்க்கூச்சல் போட்டிருக்கிறார் என்பதைத் தேடியெடுத்துப் பட்டியலிட்டு, பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளலாம்.”
    ரமேஷ் பிரேதன் Ramesh Predan, ஐந்தவித்தான் [Iynthavithan]



Rss