“கனவில் இருக்கும்போது கனவில் காண்கிற பொருள்களுக்கு மதிப்புண்டு; ஆங்கு உண்டாகிற இன்ப துன்பங்களுக்கும் மதிப்புண்டு. அத்தகைய கனவைவிட பெருநிலையாகின்றது நனவு. நனவுக்கு வந்தவுடனே கனவைப் பற்றிய மயக்கம் போய்விடுகிறது. கனவில் வந்த இன்ப துன்பங்களுக்குப் பிறகு மதிப்பில்லை. அங்ஙனம் கனவுக்கும் நனவுக்கும் மேம்பட்ட நிலையொன்று உண்டு. அது பிரம்ம நிர்வாணம் என்று பகரப்படுகிறது. அதை அடையப் பெற்றவனுக்குக் கனவு, நனவு ஆகிய அவஸ்தைகளைப் பற்றிய மயக்கம் கிடையாது.
பிரம்ம நிர்வாணம் என்பது அபரோக்ஷ அனுபூதி. மனம் மொழிக்கு எட்டாத பேரானந்தப் பெருநிலை அது. அப்பெரு நிலையினின்று கீழே இறங்கிவந்தவன் ஜீவன். திரும்பவும் அப்பெருநிலையை அடையப்பெற்றவன் முக்தன். நதிகளெல்லாம் கடலைப் போய்ச் சேர்ந்து கடலில் இரண்டறக் கலத்தல் போன்று பிரம்ம நிர்வாணம் அடைதல் ஜீவர்களின் குறிக்கோளாம். சாகும் தறுவாயில் அது வந்து அமைவதாயினும் அது முக்தியேயாம். விடுதலையென்றும் வீடுபேறு என்றும் அதைப் பகர்வதுண்டு.”
―
The Bhagavad Gita
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
The Bhagavad Gita
by
Krishna-Dwaipayana Vyasa81,142 ratings, average rating, 3,729 reviews
Open Preview
Browse By Tag
- love (101783)
- life (79788)
- inspirational (76199)
- humor (44484)
- philosophy (31149)
- inspirational-quotes (29018)
- god (26978)
- truth (24820)
- wisdom (24766)
- romance (24454)
- poetry (23414)
- life-lessons (22740)
- quotes (21216)
- death (20616)
- happiness (19110)
- hope (18643)
- faith (18509)
- travel (18058)
- inspiration (17464)
- spirituality (15800)
- relationships (15735)
- life-quotes (15658)
- motivational (15446)
- religion (15434)
- love-quotes (15430)
- writing (14978)
- success (14221)
- motivation (13345)
- time (12905)
- motivational-quotes (12657)
