காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை
Rate it:
78%
Flag icon
திண்டுக்கல்லில் கன்னடம் பேசும் திப்பு சுல்தானின் ஆட்சி. புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள், தஞ்சாவூரில் மராட்டியர் ஆட்சி. வேலூர் பகுதியில் உருது பேசும் ஆற்காடு நவாப்பின் ஆட்சி. நாகப்பட்டணத்தில் டச்சுக்காரர்கள், தரங்கம்பாடியில் டேனிஷ் பேசும் டேனிஷ்காரர்கள். இதைத் தவிர்த்து எங்களது சீமையின் எல்லையில் மலையாளம் பேசும் திருவாங்கூர் ராஜா, எங்கள் பகுதியிலுள்ள அறுபத்தி இரண்டு பாளையங்களின் ஆட்சியாளர்கள் பேசுவது தெலுங்கு. லெப்டினென்ட் உங்களுக்குத் தெரியுமா? நான் சொன்ன இத்தனை ஆட்சியாளர்களும் அவரவர் மொழியில்தான் அரசாங்கம் நடத்துகிறார்கள். கடிதத் தொடர்பு கொள்ளுவார்கள்.”
92%
Flag icon
“ஊரில் இந்நேரம் எங்களையடக்கி ஒடுக்கிவிட்டதாகக் கொக்கரித்துக் கொண்டிருப்பார்கள் வெள்ளையர்கள். ஆனால் வெள்ளையன் ஒருவனே எனக்குக் காவலாக, என் காலடியிலேயே, என் கழிவுகளைச் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்று பதில் சொல்லவே இந்த நாய்க்கு வெள்ளையன் என்று பெயர் வைத்தேன். ஒவ்வொருமுறை என் ஏவலுக்கு இந்த நாய் கட்டுப்படும் போதெல்லாம் எனக்குள் ஒரு மகிழ்ச்சி, திருப்தி பரவுகிறது.”