Kindle Notes & Highlights
by
கி. வீரமணி
Read between
May 27 - May 27, 2023
இது மனு 10 ஆவது அத்தியாயம் 44ஆவது ஸ்லோகம் ஆகும். மற்றும் மிலேச்ச பாஷை பேசுகிறவர்கள் அனைவரும் தஸ்யூக்கள் என்று சொல்லப்படுவார்கள் என்று தெளிவாக விளக்கப் பட்டிருக்கிறது. இது 10 ஆவது அத்தியாயம் 45 ஆவது ஸ்லோகம். தஸ்யூக்கள் என்றால் திருடர்கள் என்ற கருத்தும் அதிலேயே கீழே காட்டப்பட்டிருக்கிறது.
இதில் மற்றொரு விசேஷம் என்னவென்றால் திராவிடன் என்கிற பெயரைப் போலவே ஆந்திரன் என்ற பெயரும் மனு தர்மத்தில் காணப்படுகிறது. அதாவது காட்டிற்குச் சென்று மிருகங்களைக் கொன்று நாட்டில் கொண்டு வந்து விற்பவன் ஆந்திரன் என்று கூறப்பட்டிருக்கிறது. (அத்தியாயம். 10, ஸ்லோகம்: 48) எனவே திராவிடர்கள், ஆந்திரர்கள் என்பது மாத்திரமல்லாமல் கீழான, இழிவான, தீண்டப்படாத, திருடர்களான ஜாதியார்கள் என்பதை மனுதர்ம சாஸ்திரம் நன்றாக வலியுறுத்துகிறது என்பது 10 ஆம் அத்தியாயத்தில் சங்கர ஜாதி என்ற தலைப்பில் நன்றாக விளக்கப்பட்டிருக்கிறது. மற்றும் இவர்கள் அனைவரும் பட்டணத்துக்கும் ஊருக்கும் வெளியில் மரத்தடி, தோப்பு, மயானத்திற்குச்
...more
சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்வதாலேயே பிராமணன் ஆகமாட்டான். எப்படி ஒரு பிராமணன் எந்தவிதமான இழிவான தொழிலைச் செய்தாலும் அவன் பிராமணனே ஒழிய, சூத்திர ஜாதி ஆகமாட்டானோ அதுபோல ஒரு சூத்திரன் எவ்வளவு மேலான பிராமணன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் ஆகமாட்டான். இது பிரம்மாவினால் நிச்சயிக்கப்பட்ட உண்மையாகும், தத்துவமாகும். (அத்தியாயம் 10, ஸ்லோகம்: 713)
மகாத்மா காந்தி தென்னாட்டு சுற்றுப் பிரயாணத்தில் தமிழ் மக்களுக்கு வர்ணாசிரமத்தைப் பற்றி சொற்பொழிவு செய்ததையும், விரிவுரை செய்ததையும் ஒப்புக் கொள்ளாததோடு, சூத்திரன் என்ற வார்த்தையை உபயோகித்ததையும் உரமாய்க் கண்டிக்கிறது.
இந்து சமூகத்திற்குச் சம்பந்தப்பட்டதென்று சொல்லப்படுகிற கோயில், குளம், சத்திரம் முதலிய எல்லா விடங்களிலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர் களென்று சொல்லப்படுகிற எல்லா மக்களுக்காவது சம உரிமை கொடுக்கப்பட வேண்டுமென்று இம்மகாநாடு முடிவு செய்கிறது. 8.கோயில்களில் கடவுளை வழிபடுகிறதற்கு இடையில் தரகர்கள் வேண்டியதில்லையென்றும், ஒவ்வொருவருக்கும் நேராகவே கடவுளை வந்தனை, வழிபாடு செய்து, பூசனை புரிவதற்கு உரிமையுண்டென்றும், அதனை இது முதலே ஒவ்வொருவரும் நடவடிக்கைக்குக் கொண்டு வர வேண்டுமென்றும் இம்மகாநாடு முடிவு செய்கிறது.
இந்துக் குடும்பங்களில் கணவர் இறந்த பிறகு மறுமணம் செய்து கொள்ள விருப்பமில்லாத பெண்மக்களுக்கு தங்கள் கணவர் பயன்படுத்தி வந்த சொத்துகளின் உரிமை கொடுக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்கிறது. 11.இந்து சமூகம் என்று சொல்லப்படும் குடும்பச் சொத்துகளில் பெண் மக்களுக்கும், ஆண் மக்களுக்கும் ஒத்த சொத்துரிமை கொடுக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்கிறது. 12.நாட்டில் ஜாதி மத வேற்றுமைகளிருந்து வரும் வரை ஒவ்வொரு ஜாதி மதத்தினருக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டுமென்று இம்மகாநாடு கேட்டுக் கொள்ளுகிறது.
அரசாங்க வைத்தியசாலைகளில் பார்ப்பனர்களுக்குத் தனி வார்டுகள் ஒதுக்கி வைப்பதை பலமாய்க் கண்டிக்கிறது.
இப்போது பிராமணத் துவேஷம் பரவும் ரீதியைப் பார்த்தால் பிராமணத் தத்துவத்திற்கே ஆபத்து வரும்போல் இருக்கின்றது.
இதை எண்ணியேதான் ஸ்ரீமான் சீனிவாசாச்சாரியார் பிராமண இயக்கத்தை ஆரம்பித்திருந்தார்.
இப்போது அது ஓர் உரிமையை ஸ்தாபித்துக் கொள்வதற்குக் கிளம்பி விட்டது. பிராமணர்கள் தங்களுக்குச் சட்டபூர்வமாக பதவி அளிக்கப்பட வேண்டுமென்று ஏற்படுத்திக் கொள்ளவில்லை. பிராமணரல்லாதார் இயக்கத்தினால் துவேஷ புத்தியை ஊட்டி வருகிறார்கள். மத விஷயத்திலும், கோவில் முதலிய விஷயத்திலும் பிரவேசித்து அடியோடு கவிழ்க்க முயற்சிக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வருஷங்களாய் நாம் அனுபவித்து வரும் பாத்தியதைகளைப் பலாத்காரமாய் பிடுங்கிவிட ஆரம்பித்திருக்கிறார்கள். சுயமரியாதை இயக்க மென்று சொல்லிக் கொண்டு சிலர் செய்து வரும் கொடுமைகளையும் அவமானங் களையும் ஊர் ஊராய்ப் போய் சுற்றிப் பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும். மேற்கண்ட துவேஷ
...more
இந்தியாவிலுள்ள சர்வகட்சி மகாநாடு, காங்கிரஸ் முதலானவைகள் தங்கள் ரிப்போர்ட்டை பார்லிமெண்டுக்குத்தான் அனுப்பப்போகிறார்கள். சைமன் கமிஷனும் தாங்கள் சேகரிக்கும் விஷயங்களைப் பார்லிமெண்டுக்குத்தான் அனுப்பப் போகிறது. நம்மை இங்கு ஒருவரும் பொருட்படுத்தாமல் இருக்கையில் நம் பாத்தியதையை யாரிடமேனும் வற்புறுத்தி வைக்கவே நமது கோரிக்கையைக் கமிஷன் முன் ஆஜர்படுத்த வேண்டும். நமது உரிமையை வற்புறுத்த வேண்டிய காலத்தில் நாம் சும்மா இருந்துவிடக் கூடாது. பெரும்பாலோர் சைமன் கமிஷனைப் பகிஷ்கரிக்காத காலத்தில் 100க்கு மூன்று பேர் ஆகிய நாம் மாத்திரம் ஏன் பகிஷ்காரம் என்று புத்தியில்லாமல் உளறிக் கொண்டிருக்க வேண்டும் என்று
...more
பிராமணர்கள் மெய்யாகவே தமிழர்களானால், தென்னிந்திய சிவாலயங்களில் முதலில் வேதபாராயணம் செய்ய வேண்டுமென்றும், அப்புறம்தான் தேவாரம் ஓதவேண்டுமென்றும் பிடிவாதம் செய்வதேன்? பிராமணர் தமிழர்களானால் சைவர்கள் மகாநாட்டில் அவர்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை? பிராமணர் தமிழர்களானால் அறுபத்தி மூன்று நாயன்மாரையும், பட்டினத்தார், தாயுமானவர், இராமலிங்கசாமிகள் முதலிய பெரியார்களையும் ஏன் வணங்கவில்லை. சைவ சமயாச்சாரியார்களை ஏன் கும்பிடவில்லை?
பிராமணர் தமிழரானால் - திராவிடரானால் பிராமண ஹோட்டல்களில் தமிழர்கள் எல்லாம் வேற்றுமையின்றி ஒன்றாக இருந்து சிற்றுண்டியருந்தும் போது பிராமணர்கள் மட்டும் தனியிடத்திலிருந்து உண்பதேன்? பிராமணர் தமிழரானால், தமிழ் நூல்களன்றோ அவர்களுக்கு முதல் நூல்களாக இருக்க வேண்டும். வேதத்தை பிராமணர்கள் முதல் நூலாகவும் ஆதாரமாகவும் கொள்வதேன்? பிராமணர் தமிழரானால் சமஸ்கிருதத்துக்கு அவர்கள் உயர்வு கற்பிப்பதேன்? தமிழ் நூல்கள் எல்லாம் வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவைகளே எனப் புனைந்து கூறுவதேன்? பிராமணர் தமிழர்களானால் அவர்கட்கு மட்டும் தனி சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்கள் ஸ்தாபித்திருப்பதேன்? அப்பள்ளிக்கூடங்களில் தமிழர்கட்கு
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழ்நாட்டையும் தமிழர் வீரத்தையும் கலையையும் நாகரிகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தனது மானத்தையும் ஞானத்தையும் பகுத்தறிவையும் உரிமையையும் இழந்தான். இப்போது தமிழன் தன்னை இந்தியன் என்பதையும் இந்து என்பதையும் மறப்பதாலேயே அக்கட்டுகளிலிருந்தும் விடுபட்டு விலகுவதாலேயே தன்னை ஒரு மனிதன் என்றும் ஞானத்துக்கும், வீரத்துக்கும், பகுத்தறிவுக்கும், மானத்துக்கும் உரிமை உடையவன் என்றும், இவைகளுக்கு ஒரு காலத்தில் உறைவிடமாக இருந்தவன் என்றும் உணருவானாவான்.
இந்த உணர்ச்சி ஆரியர்களுக்கு விரோதமாகக் காணப்படுவதில் ஆச்சரிய மில்லை. அவர்களது கூலிகளில் பலர் இவ்வுணர்ச்சிகளைப் பரிகசிப்பவர்கள் போல் நடிப்பதில் அதிசயமில்லை. ஆனாலும் அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
ஏன் எனில், திராவிடரின் தன்மானம், அறிவு, மனிதத்தன்மை இன்று நேற்றல் லாமல் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் பறிக்கப்பட்டவைகளாகும். திராவிட அரசர்கள் மூவேந்தர்கள், நான்கு வேந்தர்கள், அய்வேந்தர்கள் காலத்திலேயே இந்த வேந்தர்கள் ஆரிய அடிமைகளாக இருந்தவர்கள். அவர்களது ஆரிய அடிமை ஆட்சியில் நாம் இருந்தவர்கள் என்பது மாத்திர மல்லாமல் அவர்கள் சந்ததியார்கள் என்றும் பெருமை பேசிக் கொள்ளு பவர்களா யிருக்கிறோம். இதன் இழிவை நம்மில் வயது வந்து வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் சிறிதும் உண ரார்கள். ஆகவே நமது வேலை அடியோடு புதிய வேலையாக இருக்கிறது. அதுவும் புரட்சி வேலையாக இருக்கிறது.
தமிழன், என்று ஆரிய மதமாற்றம் அடைந்தானோ, ஆரியனை தமிழன் என்று தன்னுடைய நாட்டான், தோழன் என்று கருதினானோ அன்றே தமிழனுக்கு உளமாந்தையும் பிளேக்கும் ஏற்பட்டு விட்டன. அன்று முதலே தமிழனுக்கு இருந்த கொஞ்ச நஞ்சமானமும் வீரமும் அறிவும் ஆற்றலும் அடியோடு அழிந்து ஆரியனுக்கு தமிழன் - ஆண்பெண் அடங்கலும் - அடிமை, வைப்பாட்டி மக்கள் ஆக இருக்கும்படி மத ஆதாரங்கள் ஏற்படுத்தப்பட்டன. அந்த ஆதாரங்களை தமிழனுக்கு அரசியல் சட்டமாகவும் ஆயின. அந்த -அதாவது தமிழன் ஏற்றுக் கொண்ட - ஆரிய மதமும் அவன் ஏற்றுக் கொண்டு நடக்கும் ஆரிய மதக் கொள்கையும்தான் இன்று ஆயிரக்கணக்கான ஆச்சாரிகளையும் டாக்டர் ராஜன்களையும், சத்திய மூர்த்திகளையும்
...more
ஆச்சாரியாரும் சத்தியமூர்த்தியாரும் எங்கிருந்து தொப்பென்று குதித்தார்கள்? அவர்கள் என்ன ராமன், கிருஷ்ணன் போல் ராக்ஷதர்களை (தமிழர்களை) அழிக்க அவதார மெடுத்தவர்களா? இல்லை இல்லை. அவர்கள் தகப்பன்மார்களுக்கு நாம் திதி, தெவசம், சங்கல்பம், அஷ்டோத் தரம், சகஸ்திரநாமம், அபிஷேகம், உற்சவம், கல்யாணம், சாந்திமுகூர்த்தம், எட்டு எழவு, கல்லெடுப்பு என்னும் பேரால் அழுத பணங்களும் காசுகளும் அரிசி, பருப்பு, செருப்பு புடவைகளும் அல்லவா இன்று ஆச்சாரியார், சாஸ்திரியார், அய்யங்கார், அல்லாடியார், மூர்த்தியார் என்கின்ற விஷக் கிருமிகளாக நம்மை அரித்து தின்கின்றன என்று கேட்கிறேன்.
தமிழர் கட்சியிலும் ஜஸ்டிஸ் கட்சியிலும் உள்ள அநேக தமிழர்களை எனக்குத் தெரியும். பார்ப்பனர்களைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சலாமா என்கின்ற ஆத்திரத்தோடு அநேகர் இருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அத்தமிழர்கள் தங்கள் வீட்டில் பெண்டு பிள்ளைகளுடன் பார்ப்பனர் காலைக் கழுவின நீரை உட்கொண்டால்தான் மோட்சம் உண்டு, அவன் காலில் தங்களது குடும்ப மக்களின் உச்சித்தலை பட்டால்தான் ஜன்ம சாபல்யம் ஆகும் என்று கருதி இருக்கிறவர்கள் அநேகர் இருக்கிறார்கள். இக்காட்சியை சென்னையில் அதிகமாகக் காணலாம். சனாதனப் பார்ப்பனர்களோடு நான் பேசினேன் என்பதற்காகவும், உண்மையான சனாதனிகள் தாங்கள் தங்கள் உள்ளத்தில் இருப்பதை
...more
எங்காவது ஒரு பார்ப்பா மதுரை வீரனையோ , காத்தவ ராயனையோ கும்பிடுவதைக் காண்கிறீர்களா? பச்சையம்மனையோ மாரியம்மனையோ பண்டிகை கொண்டாடுவதைப் பார்க்கிறீர்களா? நாம் ஏன் அவர்களுக்கு மாத்திரம் உயர்வையும் நமக்கு இழிவையும் கொடுக்கும் கடவுள்களையும் பண்டிகை களையும் சடங்குகளையும் கொண்டாட வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள்.
சமுதாய அமைப்பிலே, ஜாதி பேதங்களும் மேல் கீழ் படிகளும் இருப்பதோடு நம்நாட்டிலே எங்கும் இல்லாத கொடுமை, ஒரு ஜாதிக்கு மற்றையோர் குற்றவேல் புரிந்து வாழ்வதுதான் முறை - தருமம் என்று மதச்சட்டம் வகுக்கப்பட்டு, அதன்படி சமுதாயமுறை உயர்ஜாதிக்காரரால் அமைக்கப்பட்டு இருக்கிறது. எனவே, எவ்வளவு நல்ல சீர்திருத்தம் அரசியலில் செய்யப்பட்டாலும், பலன் ஒரு வகுப்புக்கே சென்று, மற்றைய துறைகளிலே ஒரு வகுப்பு உயர்ந்து வாழ்வதைப் போன்றே அரசியலிலும் அவர்களுக்கே உயர்வும், செல்வாக்கும் ஏற்பட ஏதுவாகிறது. ஆபத்து அத்துடன் நிற்பதில்லை. எங்ஙனம் அந்த நாளில் வகுக்கப்பட்டு பல நூற்றாண்டுகளாகக் காப்பாற்றப்பட்டு வரும் சமுதாயப் பாகுபாடு ஒரு
...more
எனவேதான் நீதிக்கட்சியார், வகுப்புகளுக்குள் சந்தேகமும் கிலேசமும் அதன் பலனாக சஞ்சலமும் ஏற்படாதிருக்கும் நிலை ஏற்பட்டால்தான் அரசியலிலே நாம் பூரண சுதந்திரம் பெற முடியும்; பெற்று அதன் நன்மைகளை அடைய முடியும் என்று கூறி வந்தனர். அதற்காகவே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற சிறந்த நீதியை இம்மாகாணத்தில் வழங்கினார்கள். அதனை வாழ்த்தி வரவேற்று வளர்த்து, அதைப்பற்றி வம்புந்தும்புமாகப்பேசிய தேசியவாதிகளுக்கு ஆணித் தரமான பதிலளித்த அரசியல் சண்முகம், திவான் சண்முகம் ஆனவுடன், அதே நீதியை கொச்சிக்குத் தந்தார். குரோதக்கும்பல் குளறிக் கொட்டின. சர். சண்முகம் சீறினாரில்லை; சிரித்தார் - அவர்களின் எரிச்சலைக் கண்டு.
கல்வித் துறையில் அரசாங்கம் பெரிய பார்ப்பனியம் செய்து வருகிறது. அடுத்த ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேருவதற்கு நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளதாம்! எதற்காக? பாஸ் செய்த சர்ட்டிபிகேட்டில், காலேஜில் சேர சேர்த்துக் கொள்ளத் தகுதி உடையவன் (Eligible for College Course) என்று எழுதிக் கையெழுத்துச் செய்து கொடுத்துவிட்டு, காரியத்தில் மார்க்கு பார்த்து, திறமை பார்த்துப் புகுமுகப் பரிட்சை வைத்து சேர்க்க வேண்டும் என்று உத்தரவு போடுவதும், தராதரம் பார்க்காமல் சேர்க்கக் கூடாது என்பதும் பார்ப்பனியமா, அல்லவா? ஏனென்றால், இவை பார்ப்பானின் மூளையில் தோன்றியவைதானே?
...more
கல்வி விஷயத்தில் இந்த ஆட்சியைவிடக் காமராசர் ஆட்சி மிக்க தேவலாம் என்று ஆகிவிடக் கூடாது. பாஸ் செய்த பின்பு தகுதி, திறமை, தரம் எதற்காகப் பார்க்கப்படுகின்றது. அது எதற்காக வேண்டும்? அதன் அர்த்தம் என்ன? அதன் பலன் என்ன? மந்திரி சபையில், பெரிய பதவியில், அதிகாரத்தில் தரமுள்ளவர்களால், திறமை உள்ளவர்களால் ஏற்பட்ட நன்மை, பெருமை என்ன? தகுதி, திறமை, தரம் அற்றவர்களால் ஏற்பட்ட கெடுதி என்ன? அதிகாரம், உத்தியோகங்களிலும் வகுப்பு, உள்வகுப்பு, உட்பிரிவு ஜாதி வகுப்புரிமை வேண்டும். சர்க்காருக்கு 50 கோடி ரூபாய், மது இலாகா மூலம் வருவாய் கிடைத்திருக்கிறது. இது யார், எந்த வகுப்பார் தந்த பணம்? இந்த வருவாய் கொடுத்தவர்களை
...more
வைத்தியக் கல்லூரியில் பிள்ளைகள் சேர்க்கும் விஷயத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவப்படி சேர்க்கப்பட வேண்டும் என்கின்ற உத்தரவைப் பாழாக்க வென்று ஒரு புதிய முறை கண்டுபிடித்து இருப்பதேயாகும். அந்த முறையாவது சேர்க்கப்பட வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பாக மாணவர்களை வகுப்புப் பிரிவு பார்க்காமல் தகுதி பார்த்து அதாவது அதிக மார்க்கு வாங்கின மாணவர்களுக்குக் கொடுத்துவிட்டு, மூன்றில் இரண்டு பாகமுள்ள எண்ணிக்கையை வகுப்புப்படி கொடுப்பது என்பதாகும். கீழ் பரிட்சையில் தேறி வைத்திய வகுப்பில் சேர்க்கப்பட தகுதியாக சர்ட்டிபிகேட் பெற்ற பிறகு மற்றொரு முறை தகுதி பார்ப்பது என்பது எதற்கு என்று
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
உங்களுக்குத் தகுதி இல்லை, திறமை இல்லை, நீங்கள் அடிமை வேலைக்குத் தான் தகுதி என்று சொல்லவுமான நிலை எதனால்? எது எதனால் ஏற்பட்டதோ அதை அதையெல்லா அவைகளையெல்லாம் வேரோடு கண்டுபிடித்து அழித்து ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கிளர்ச்சி தோன்றியதாகும்.
நான் சொல்கிறேன், நம்முடைய தொழிலாளர்களுக்கு ஒன்றும் பெரிய வேலை கொடுக்கப்படா விட்டாலும், கொடுக்கிற சம்பளமாவது அதிகமாகக் கொடுக்கக் கூடாதா? நல்ல வசதியான அறையிலே Fan க்குக் கீழே உட்கார்ந்து கொண்டு, மேஜை நாற்காலியோடு வேலை செய்து குமாஸ்தாவுக்கு 100 ரூ.சம்பளம், நெருப்பிலே உழன்று சம்மட்டி அடிக்கிற தொழிலாளிக்கு 30,50 ரூபாய்தானா? கொடுக்கிற வேலைக்குத்தான் தகுதி, திறமை பார்க்கிறாய்! வாழ்க்கைக்குக் கூடவா தகுதி திறமை? சம்பளத்திலாவது சரி சமன் செய்யக்கூடாதா? தகுதி, திறமை உடையவன் அதிகமாகச் செலவழிக்கவும், தகுதி, திறமை இல்லாதவன் குறைவாகவுமா செலவழிக்கிறான்? எதற்குச் சொல்கிறேன் என்றால், ஒரு பெரிய சமுதாயத்தை
...more
சூழ்ச்சியில் அடைந்த வெற்றி மனிதனை சதா சூழ்ச்சியிலேயே இருக்கச் சொல்லுமே ஒழிய, வெற்றியை அனுபவிக்கக் கூட நேரமளிக்காது. (அதாவது வெற்றியும் பயன்படாது) அதாவது சூதாடி சம்பாதிக்கும் பணம் சூதுக்கு அழுகவே சரியாய் இருக்கும் அல்லது சாகும்வரை சூதே ஆடச் சொல்லும்.
ஒரு நாட்டிலே அந்த நாட்டுப் பழங்குடி மக்கள் ஏராளமான பேர்கள் தற்குறிகளாய் இருப்பதும், அதே நாட்டிலே குடியேறிய வேறு ஒரு கூட்டத்தார் 100-க்கு 100 பேர் படித்திருக்கவும் காரணம் ஏன் ஏற்பட்டது? அவர்கள் ஏன் அப்படி? நாம் ஏன் இப்படி? இதைத் தான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்குக் காரணம் என்ன? மதத் தத்துவத்தின்படியும், சாஸ்திரத் தத்துவத்தின்படியும் நாம் இழிவான ஜாதியாக, அதாவது சூத்திரனாக இருக்கிறோம். இந்து மத சட்டத்தில் சூத்திரன், பஞ்சமன், பறையன், பார்ப்பான் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சமர் ஜாதி என்பது மிகவும் கீழான ஜாதியாக மதிக்கப்படுகிறது. சாஸ்திரத்திலே எப்படி எழுதி வைத்திருக்கிறார்கள்
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
1918, 16, 14 வருடங்களில் கல்லூரிகளிலே பரீட்சைக்குப் போனவர்கள் நம்முடைய ஆள் பத்து பேர்கள் இருப்பார்கள். ஆனால், பார்ப்பனர் நாற்பது பேர்கள் பரீட்சைக்குப் போயிருப்பார்கள். நம்முடைய ஆள்களில் 10-க்கு ஆறு பேர்கள் தேறி இருப்பார்கள். பார்ப்பனர்கள் 40-க்குப் பதினெட்டு பேர்கள் தேறி இருப்பார்கள். அவர்களைவிட திறமையிலே நாம் கூடுதல் தான். பொதுவாக எந்த விஷயங்களிலும் நாம் குறைந்தவர்கள் அல்ல; ஆனால், படிக்க முடியாத நிலைமைதான் ஏற்பட்டு விட்டது.
நம் நாட்டுக்குப் பிழைக்க வந்தவன் பார்ப்பான். அவனுக்கு என்றைக்குமே நாடு கிடையாது. ஜிப்சிக்கள், லம்பாடி மக்கள் போல் இந்த ஊரிலே இருந்து அந்த ஊருக்குப் போவான். அன்றியும் அவனுக்குத் தந்திரம் தவிர அறிவே கிடையாது. அவனுக்கு மூளையே இல்லை. செத்துப் போன சமஸ்கிருதத்தை வைத்துக் கொண்டு அழுவான். காட்டுமிராண்டித்தனமான ஆபாசப் புராணங்களைக் கொண்டு நம்மை ஏய்ப்பான். இவர்கள் நம் தமிழை ஒழித்துக் கட்ட தீவிர வேலை செய்து நம் தமிழை நாசமாக்கி விட்டார்கள். இவர்கள் தமிழ் பேசுவது மிகக் கேடானது. வடமொழியைப் புகுத்தி மீதியையும் கெடுத்துவிட்டார்கள். இவர்களைத்தான் நம்மவர்களும் பின்பற்றி பார்ப்பனத் தமிழை நம்மவர்களும்
...more
நம் கிளர்ச்சி எல்லாம் நம் சென்னை இராஜ்யம் வடநாட்டானிடம் இருந்து ஒரு தனி நாடாகப் போக வேண்டும். அதாவது பர்மா, கொழும்பு, பாகிஸ்தான், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் போன்று வாழ வேண்டும். இல்லாம லிருந்தால் பார்ப்பானுடைய ஆதிக்கத்திலிருந்து நீங்க முடியாது.
எங்களின் விகிதாசாரப்படி எங்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்றால் மத்திய சர்க்காருக்கு உட்பட்ட அவர்களின் ஆட்சிக்குட்பட்ட ரயில்வே, தந்தி, தபால், சுங்கம், இன்கம்டாக்ஸ் போன்ற பெரிய வரிகள், இன்னும் வேறு பல சில்லறை இலாகாக்கள் எல்லாம் நம் கைக்கு வரும் வரையில் நமக்கு விகிதாசாரம் கிடைக்க வேண்டும்.
வளர்ச்சி எப்படி என்றால், கல்வித் துறையில் பார்ப்பான் ஆதிக்க காங்கிரஸ் காலத்தில் தமிழ்நாட்டில் ஒட்டு மொத்தம் நாம், மூன்றே கால்
கோடி மக்களில் (16 இலட்சம்) பதினாரு இலட்சம் மக்களே படித்துக் கொண்டிருந்த நம் மக்கள் இன்று (64 இலட்சம்) அறுபத்து நான்கு இலட்சம் மக்கள் படிக்கும்படியாகவும், மற்றொரு கணக்குப்படி, ஜனத்தொகையில் 100க்கு 10 விகிதமே (நூற்றுக்கு பத்து விகிதமே) படித்திருந்த மக்கள் இன்று 100க்கு 40 விகித (நூற்றுக்கு நாற்பது விகித)த்திற்கு மேல் படித்திருக்கிறவர் களாக ஆக்கப்பட்டு இருக்கிறது என்பதுடன் இனி அய்ந்து வருட காலத்திற் குள் 100க்கு 100 மக்களையும் எழுத, படிக்க கற்பித்த பிறகே உறங்குவேன் என்று நம் இரட்சகர் காமராஜர் திட்டம் வகுத்த பின், நம் நாட்டுக்கு குஷ்ட ரோகம் போல் புகுந்து - இருக்கிற பார்ப்பனர்கள் பலர் வயிறெரிந்து
...more
இந்த தகுதி - திறமை பேசும் யோக்கியர்கள் பல ஆண்டுகளாக அரசியலில் ஆதிக்கம் செலுத்திவந்த பன்னூற்றாண்டு ஆதிக்கத்தில், தாங்கள் மாத்திரம் 100க்கு 100ம் படித்தவர்களாகி, தமிழர்களாகிய நம்மை 100க்கு 10 பேர்களுக்கு மேல் எழுத, படிக்க, கையெழுத்துப் போடத் தெரிந்தவர்களாகக் கூட செய் யாமல், தற்குறிகளாகவே, வைத்திருந்ததுடன் நம்மை கீழ் மக்களாக பாமர மக்களாக வைத்திருப்பதையேக் குறிக்கோளாகக் கொண்டிருந்த யோக் கியர்கள், நாம் 100க்கு 40 பேர் படித்தவர்களானவுடன் இன்று கல்வியில் தகுதி - திறமை குறைந்து போய் விட்டது என்றால் இது வடிகட்டின அயோக்கியத்தனமல்லவா என்று சிந்திக்க வேண்டுகிறேன். முதலாவது அறிவுள்ள மனிதனானால், யோக்கியமான
...more
நம்மைச் சூத்திரர்களாகவே நீடிக்க வைக்கும் ஆயுதமே தகுதி - திறமை
100க்கு நூறு பேரும் எழுதப் படிக்கச் செய்வதே நம் இலக்கு நமக்கு - எனக்கு, நம் மக்களுக்குக் கல்வி வேண்டும் என்பதல்லாமல், கல்வியில் தகுதி, திறமை, வெங்காயம் என்பது எனது இலட்சியம் அல்ல! தகுதி திறமைக்காகப் பொதுக் கல்வி அல்ல. எனக்கு வேண்டியது நம் மக்கள் 100க்கு 100 வீதம் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நம் மக்கள் பட்டப் படிப்பில் பார்ப்பனர், அவர்கள் எண்ணிக்கையில் 100க்கு எத்தனை வீதம் பட்டம் பெற்றிருக்கிறார்களோ அத்தனை வீதம் பரீட்சை பாஸ் முத்திரை பெற்றிருக்க வேண்டும். தகுதி - திறமைக் குறைவு என்று பேசுவதாலும், கண்டுபிடிப்பதாலும் பொதுவான உத்யோகங்களுக்கு அதனால் எந்த விதமான குறைவோ, குற்றமோ ஏற்பட்டு
...more
உதாரணமாக ஒரு அய்.ஏ.எஸ். படிக்காத திரு.காளிதாஸ் நாயுடுவைவிட ஒரு அய்.ஏ.எஸ். படித்த திரு.வேதநாராயணன் கலெக்டர் வேலையில் எந்த விதத்தில் அதிகம் தகுதி, திறமை, ஒழுக்கம், நாணயம், அனுபவம் உடையவராவார்? இன்ன இன்ன உத்தியோகத்திற்கு இன்னின்ன பட்டம் பாஸ் செய்த தகுதி வேண்டும் என்று ஏற்பாடு செய்துகொண்ட பிறகு, மேலும் தகுதி - திறமை என எந்த ஏற்பாட்டின்படி குறை சொல்லப்படுகிறது?
தகுதிக்குக் குறிப்பிட்ட அளவு பாஸ் சர்ட்டிஃபிகேட்டும் திறமைக்கு, கை, கால், கண், காது, மூளை சரியாய் இருக்கிறதா என்று பார்க்க வேண்டியதைத் தவிர, வேறு என்ன வேண்டும்? இதைத் தவிர வேறு என்ன இல்லாவிட்டால் குறிப்பிட்ட எந்த...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
இந்த விளக்கம் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் நான் சொல்லவில்லை. படியேறி விட்டோம், உச்சத்திலிருக்கிறோம் என்று கருதிக்கொண்டு தகுதி - திறமை பேசும் பார்ப்...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
சமூகத் துறையில் நமது நிலைமை என்ன? நமது அடிமைத்தனத்தின் கொடுமை எவ்வளவு? இவைகளுக்குக் காரணம் என்ன? என்பதை நினைத்துப் பார்த்தால் அறிவும் மானமும் உள்ள மனிதன் அரசியல் தன்மையைக் கொஞ்சமும் பெரிதாகக் கருதி லட்சியம் செய்யமாட்டா னென்றே கருதுகிறேன். உங்களில் யார் எப்படி நினைத்துக் கொண்டாலும் சரி, என்னைப் பொறுத்தவரை நமது நாட்டு மத சம்பந்தமான, சமூக சம்பந்தமான, அடிமைத்தனத்தால் தான் நாம் சுதந்திரமிழந்து, மானமிழந்து இழிஜாதியாய் வாழ்கின்றோமேயொழிய, அரசியல் அடிமைத்தனத்தாலல்ல என்பதே எனது அபிப்பிராயம். நான் இப்போது அரசாங்க ஆட்சியின் சுதந்திரத்தை முதன்மை யானதாக விரும்பவில்லை. உத்தியோகத்தை பிரமாதமானதாகக் கருத
...more
இன்றைய தினம் இந்த திருச்செங்கோட்டில் ஒரு பறையன் இட்லி சுட்டானானால் அது எவ்வளவு பெரிதாயிருந்தாலும் மற்றவர்கள் நாயிக்கு வாங்கிப் போடக்கூட அவனிடம் இட்லி வாங்க மாட்டார்கள். ஒரு பார்ப்பனன் இட்லி சுட்டால் அது எவ்வளவு சிறிதாயிருந்தாலும் எவ்வளவு மோசமாயிருந் தாலும் சாமி சாமி என்று கெஞ்சி ஒன்றுக்கு ஆறு விலை கொடுத்து வாங்குவார்களென்றால் இது அரசியல் சுதந்திரமில்லாத காரணத்தாலா? சமூக சுதந்திரமில்லாத காரணத்தாலா? என்று தயவு செய்து யோசித்துப் பாருங்கள். பறையன் இட்லி வயிறு நிறையாதா? அது விஷம் கலந்ததா? மதமும் ஜாதியுமல்லவா இப்படி செய்கின்றது?
ஏழை ஜனங்களையும் சரீரத்தால் பாடுபடும் தொழிலாளிகளையும் கீழ் ஜாதி என்றும், தொடக்கூடாதவர்கள் என்றும் கொடுமைப்படுத்தி தாழ்த்தி வைத்திருக்கும் ஜனங்களையும் கவனித்து, அவர்களை அவர்களுடைய கஷ்டங்களில் இருந்து விடுதலை செய்ய முடியாத அரசியல் திட்டம் யாருக்கு வேண்டும்? என்று கேட்கின்றேன். மேல் ஜாதிக்காரனுக்கும் முதலாளிகளுக்குமல்லவா அது பயன்படும். தொழிலாளிகளுக்கு எவ்வளவு கூலி கொடுப்பது என்பதை யோசிப்பது தான் அரசியல் திட்டத்தில் ஒரு கொள்கையாய் இருக்கின்றதே தவிர, முதலாளி எவ்வளவு லாபத்திற்கு மேல் சம்பாதிக்கக் கூடாது என்பதாக யாராவது திட்டம் போடுகிறார்களா? பாருங்கள்.
மனிதன் ஏன் சமுதாயத்தில் தாழ்மையாய் இருக்கிறான் என்றால் மதத்தி னால் இழி ஜாதியாய், இழி பிறப்பாய் இருக்கிறான். அதாவது ஜாதி என்றால் பிறப்பு என்றுதான் அருத்தம் (ஜாதி என்பதெல்லாம் பிறப்பு என்பதைப் பொறுத் தேயாகும்) பிறப்பினால் ஜாதிக்கு உயர்வு தாழ்வுக்கு ஆதாரம் மதமேயாகும். எந்த மதம் என்று கேட்பீர்கள். ஜாதியினால் (பிறப்பால்) கீழ் ஜாதியாய் இருக்கிற மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற மதம் எதுவோ அந்த மதம்தான். இன்று நீங்கள் கீழ்ஜாதியாய் இருக்கிறீர்கள் என்றால் எதனால்? நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற மதமாகிய இந்துமதம் என்பதுதான் உங்கள் இழிவுக்கு ஆதாரமாய் இருக்கிறது. எனவே, இந்துமதம் ஒழியாமல், இந்து மதம்
...more
ஆதலால்தான், நான் மனித பேதம் ஒழிய வேண்டுமானால் மதம் ஒழிய வேண்டும், என்கின்றேன். அன்றியும் மதம் ஒழிந்த இடத்தில்தான் மனிதன் பிறப்பு பேதம் புதைக்கப்படுகின்றது.
அதுபோலவேதான், பொருளாதார ஏழ்மை, செல்வம், பேதம் ஒழிய வேண்டுமானால் அவைகளின் உற்பத்தி ஸ்தானம், அதாவது தோன்று மிடமும், காப்பு இடமும் ஒழிக்கப்பட வேண்டும். ஏழ்மைக்கும் செல்வத் திற்கும் கர்த்தாவும், காவலும் கடவுளாய் இருக்கிறது. அப்படிப்பட்ட கடவுளைக் காப்பாற்றிக் கொண்டு அல்லது அக்கடவுள் ஆணைக்கு அடங்கி னவனாய் இருந்துகொண்டு கடவுள் தன்மையை, செயலை, கட்டளையை நீ எப்படி மீற? சமாளிக்க? தாண்ட முடியும் என்று சிந்தித்துப் பார். அதனால்தான் மனித சமுதாய சமத்துவத்திற்கு மதம் ஒழிக்கப்பட வேண்டியது எப்படி அவசியமோ அதுபோல் பொருளாதார சமத்துவத்திற்கும், அதாவது பொருளா தார சமத்துவம் வேண்டுமானால் பொருளாதார பேதத்துக்கும்
...more
இந்த நாட்டிலே பார்க்கிறோம் முதலாளி - தொழிலாளி மற்றும் இதுபோன்ற பேதங்கள் இருப்பதை இந்தப் பேதங்கள் மாத்திரமல்லாமல், இன்னும் இதைவிடக் கொடுமையாய், இந்த நாட்டிலே, பார்ப்பான், சூத்திரன், பறையன் என்பதான பிரிவுகள் இருக்கின்றன. மற்ற நாடுகளில் ஏழை - பணக்காரன் என்ற பேதம் இருந்ததே தவிர, பார்ப்பான் - பறையன் என்ற பேதம் அங்கு எல்லாம் இல்லை. ஆனால், இங்கு பணக்காரன் - ஏழை என்கிற பேதத்தோடு மட்டும் இல்லாமல் பிறவியிலேயே உயர்ஜாதிக்காரப் பார்ப்பானும், இழி ஜாதிக்காரப் பறையனும் இருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல், ஏழை பணக்காரன் என்பது, எப்படிக் கடவுள் அமைப்பு என்று சொல்லப்பட்டு வந்ததோ, அதைப் போலவே இந்த ஜாதி உயர்வு
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
1000 முத்தையா செட்டியார்களும் சரி, ஒரு சங்கராச்சாரிப் பார்ப்பானும் சரி. நாளை எல்லோருக்கும் நிலம் பொதுவானது என்று பிரித்துக் கொடுத்து விடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். வருஷம்தோறும் சிரார்த்தம், திவசம் என்பவைகளின் பேரால் பார்ப்பான் கறந்துகொண்டுதானே இருப்பான்? கடவுளின் பெயரால் அர்ச்சகப் பார்ப்பான் சுரண்டிக்கொண்டுதானே இருப்பான். எனவே, இந்த நாட்டுப் பேதங்கள் நிலைநிறுத்தப்பட்டிருப்பதற்குக் காரணம் எல்லாம் கடவுள், மதம், சாஸ்திரம் என்பவைகளும், அவைகளின் பேரால் வாழுகிற கூட்டமும்தான் என்பதை உணர்ந்து இவைகளை ஒழித்தால்தான், எல்லார்க்கும் எல்லாமாய் என்று சொல்லுவார்களே அந்த நிலைமை இங்கு ஏற்படும்.
ஒருவன் சமதர்மத்துக்கு உழைப்பதானால் அவன் முதலில் ஓர் உண்மையை அடிப்படையாகக் கொள்ள வேண்டும். உழைப்பதற்கென்றே பிறந்திருக்கும் வகுப்பு ஒன்று, இவர்களது உழைப்பின் பயனை அனுபவித்துக் கொண்டு சுகபோகியாய் வாழ்வதற்கென்றே பிறந்திருக்கும் வகுப்பு ஒன்று என்று இருப்பதை ஒழிக்க வேண்டும்; கிள்ளி எறிய வேண்டும் என்பதே அந்த அடிப்படை நிலை. இதைச் செய்யாத வரையில் எந்தவிதப் பொருளாதார சமதர்மத் திட்டமும் இந்த நாட்டில் அரை வினாடி நேரமும் நிலைத்து நிற்காது என்பதைச் சமதர்மம் பற்றிப் பேசுவோர், நினைப்போர், ஆசைப் படுவோர் மனதில் கொள்ள வேண்டும்.

