Kindle Notes & Highlights
by
கி. வீரமணி
Read between
May 27 - May 27, 2023
நம் நாட்டின் சமூக பொருளாதார நிலையை நன்றாக அறிந்தபின்னும் பணக்காரனை மட்டுமே குறை கூறும் சமதர்மம் வெறும் பொறாமைச் சமதர்மமேயாகும். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், இந்த நாட்டின் சமுதாய அமைப் பானது, பிறவியின் காரணமாகவே, ஏழையையும் பணக்காரனையும் அதாவது, உழைப்பாளியையும் சுகபோகியையும் உண்டாக்கியிருக்கிறது. உதாரணமாக, இன்றைய சுகபோகிகள் பெரும்பாலும் மேல் ஜாதிக்காரர் களாகவும், பாட்டாளிகள் அல்லது உழைப்பாளிகள் அனைவரும் கீழ் ஜாதிக் காரர்களாகவும் இருப்பதைக் காணலாம்.
அதுவும் மதத்துக்கும், ஜாதிக்கும் பெயர்போன இந்த நாட்டு மக்களுக்குள் கல்வி அறிவற்று மூடநம்பிக்கையில் ஆழ்த்தி வைக்கப்பட்டிருக்கும் இந்த நாட்டுப் பாமர மக்களுக்குள் பிறவிபேதம் நீக்கப்படாதவரை எப்படிப்பட்ட பொருளாதார சமதர்மமும் கடுகளவு மாற்றத்தையும் உண்டாக்கி விடாது.
சமதர்ம வாசனையே சிறிதும் இல்லாதவர்களும் சமதர்மத்துக்குப் பிறவி எதிரிகளாய் இருப்பவர்களுமான பார்ப்பனர்கள் எவ்வளவு ஏழைகளாகவும் எவ்வளவு பாப்பர்களாகவும் இருந்தாலும், எவ்வளவு சோம்பேறிகளாகவும் எவ்வளவு உழைக்காதவர்களாகவும் இருந்தாலும் மக்களின் சராசரி வாழ்க்கையைவிட மேலாகவும் மனித சமூகத்தில் மேல் நிலையை உடையவர் களாகவும் தானே இருந்து வருகிறார்கள்.
இதனால்தான், பார்ப்பனர்கள் சமுதாய சமதர்மக்காரர்களைக் கண்டால் காய்ந்து விழுவதும் சமுதாய சமதர்ம இயக்கங்களைக் கண்டால் அவற்றை ஒழிக்கச் சூழ்ச்சி செய்வதுமாய் இருப்பதோடு, பொருளாதார சமதர்மக்காரர்கள் என்பவர்களை வரவேற்பது போலவும், பொருளாதார சமதர்ம ஸ்தாபனங் களை ஆதரிப்பது போலவும் காட்டிக் கொள்கிறார்கள்.
இந்த நாட்டில் ஜாதியும், மதமும் சிறப்பாக ஜாதி ஒரு கடுகளவு மீதியிருந்தாலும் எப்படிப்பட்ட சமதர்மமும் ஒரு நிமிட நேரத்தில் கவிழ்ந்து போகும் என்பதை சமதர்மிகள் என்பவர்கள் கருத்திலிருத்த வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். மற்றும், சமுதாய சமதர்மத்துக்கு, அதாவது ஜாதிகளை ஒழிப்பதற்கு என்றால் பணக்காரன் சேருவான். ஏனெனில், எவ்வளவு பணக்காரனாய் இருந் தாலும் 100க்கு 97 பேர் இன்றைக்குக் கீழ் ஜாதிக்காரர்களாகவே இருக் கிறார்கள். ஆதலால் அவர்கள் சேருவார்கள். ஆனால், பணக்காரனை ஒழிக்கப் பார்ப்பனர் சேரமாட்டார்கள். சேர்வதாய் இருந்தாலும், ஜாதி இருப்பதன் பலனாய் மீண்டும்
பணக்காரனை உண்டாக்கிக் கொள்ளலாம் என்று கருதியே சூழ்ச்சித் திறமாய்ச் சேருவான். இந்த நாட்டுக்கு, இந்த நாட்டு மக்களுக்கு நன்மை வேண்டும் என்று கருது கிறவர்கள், இந்த நாட்டின் நிலை என்ன என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றபடி நடக்க வேண்டுமே ஒழிய, மேல் நாட்டைப் பற்றிப் படித்துவிட்டுப் புத்தகப் பூச்சியாய் இருப்பது வீண் பிரயாசையே ஆகும். ஜாதியை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு ஜாதி முறையின் ஆணிவேராக இருக்கும் பார்ப்பானை ஒழிக்கும் முயற்சியே சமதர்மவாதிகளின் முதற் கடமை என்பது நமது அபிப்பிராயமாகும்.
இந்த நாட்டில் பார்ப்பனர் மீது பாமர மக்களுக்கு வெறுப்பு உண்டாகும்படி செய்துவரும் (என்னால் தோற்றுவிக்கப்பட்ட) சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றின் பிரச்சாரத்தால் பார்ப்பனர்கள் தங்களுக்கு உரிய வைதிக சம்பந்தமான ஏழ்மை வாழ்க்கையை விட்டுவிட்டு பாங்கி, வியாபாரம், இயந்திர முதலாளி முதலிய தொழில்களில் ஈடுபட்டு ஏராளமான பணம் சம்பாதித்து அவர்களில் அநேகர் செல்வவான்களாகவும், இலட்சாதிபதி களாகவும் ஆகிவிட்டார்கள். இதுதான் துவேஷப் பிரச்சாரத்தால், ஏற்பட்ட பயன் என்று பார்ப்பனர்கள் மீது வெறுப்புக் கொண்ட பலர் என்னைக் குற்றம் சொல்லுகின்றார்கள். எனக்கு, எனது சுயமரியாதை திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
பார்ப்பனர்கள் பாடுபடாமலும், எவ்விதக் குறைபாடில்லாமலும் வாழ்ந்து கொண்டும் மற்ற மக்களுக்கும் மேலானவர்களாக இருந்து கொண்டும் பொது உடைமைப் பிரச்சாரத்தில் காங்கிரசையும் பார்ப்பனியத் தையும் கண்டிக்காமல் அவற்றைக் கண்டிக்கும் ஜஸ்டிஸ் கட்சியையும் சுய மரியாதைக் கட்சியையும் ஏன் குறை கூறுகிறார்கள் என்றால், இந்த இரண்டு கட்சிகளும் வருணாசிரமக் காங்கிரசுக்கும் பார்ப்பனியத்திற்கும் விரோதமாக இருப்பதால்தானே ஒழிய, வேறில்லை. பார்ப்பனர்களுக்கு நன்றாய் தெரியும். என்னவென்றால், வருணாசிரமத் தையும் பார்ப்பனியத்தையும் பத்திரப்படுத்தி விட்டு எப்படிப்பட்ட பொது உடைமையை ஏற்படுத்தி விட்டாலும் திரும்பவும் அந்த உடைமைகள்
...more
ஆதலால், பார்ப்பனர் பேசும் பொதுவுடைமை கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதால் அவர்களுக்கு நட்டம் ஒன்றும் இல்லை என்பதோடு உடைபட்ட தேங்காயும் அவர்களுக்கே போய்தான் சேரும். அதனால்தான் பார்ப்பனர்களுக்குப் பொதுவுடைமைப் பிரச்சாரத்தில் அவ்வளவு உற்சாகமேற்படக் காரணமாகும்.
பொதுவுடைமை வேறு; பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும்; பொதுவுரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.
ஆங்கிலத்தில் கேஸ்ட், கிளாஸ் (Caste, Class) என்று இரண்டு வார்த்தைகள் உண்டு. அதாவது தமிழில் ஜாதி, வகுப்பு என்று சொல்வதாகும். ஜாதி பிறப்பினால் உள்ளது. வகுப்பு தொழில் அல்லது தன்மையினால் ஏற்படுவது. தொழிலும் தன்மையும் யாருக்கும் எதுவும் ஏற்படலாம். ஜாதி நிலை, அந்த ஜாதியில் பிறந்தவனுக்குத் தான் உண்டு பிறக்காதவனுக்குக் கிடைக்கவே கிடைக்காது. மேல் நாட்டில் ஜாதி (Caste) இல்லாததால், அங்கு பொது உடைமைக்கு முதலில் வகுப்புச் சண்டை (Class Caste) துவக்க வேண்டிய தாயிற்று. இங்கு ஜாதி (Caste) இருப்பதால் பொது உடைமைக்கு முதலில் ஜாதிச் சண்டை (Caste, Class) துவக்க வேண்டியதாகும்.
பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொதுவுடைமை மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம் தான் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது பொதுவுடைமைத் தத்துவத்திற்குப் பாலபாடம் என்பதை மக்கள் உணர வேண்டும். இன்றுள்ள கோவில், குளம், உற்சவம், சடங்கு, பண்டிகை சுபகாரியம், அசுப காரியம் என்பவைகள் எல்லாம் பிறவி காரணமாகவே சிலருக்கு அதிக உரிமை இருப்பதாலும் சிலர் சுரண்டுபவர்களாய் இருப்ப தாலும் ஏற்பட்டு இருந்து வருபவைகளை ஒழிய, அவர்களுக்காகவே இருந்து வருபவைகளை ஒழிய, இவற்றிற்கு வேறு காரணம் சுரண்டப்படும் ஜாதி யாரிடத்தில் உள்ள ஜாதி இழிவை, மடமையை ஒழிக்க முயற்சிப்பார்களா? அல்லது ஒழியத்தான் சம்மதிப்பார்களா? என்று
...more
இந்த நாட்டுக்கு ஏற்ற மாதிரியில் இந்த நாட்டுத் தன்மைக்கு ஏற்ற மாதிரியில் தொழிலாளர் பிரச்சினைகளை அணுக வேண்டும். மற்ற நாடுகளில் நடந்ததுபோல் இங்கும் நடத்த வேண்டும் என்பதும், அந்த முறை யிலேதான் போக வேண்டும் என்பதும் அவசியமற்றதாகும். மற்ற நாட்டிலே இருக்கிற நிலைமை வேறு; இந்த நாட்டு நிலைமை வேறு. அதாவது, இந்நாட்டில் தொழிலாளிகள் என்பவர் பிறவித் தொழிலாளிகள் ஆவார்கள். இப்படிப் பிறவித் தொழிலாளியாக்கி வைத்து, அவர்களைத் தலையெடுக்க வொட்டாமல் மாற்றமடையச் செய்யாமல் பார்த்துக் கொள்கிறவர்கள் மற்றொரு ஜாதியார். அந்த ஜாதிதான் இன்று ஆட்சியிலும் தொழிலாளர் தலைமையிலும் இருந்து வருகிறது. இன்று தொழிலாளர் நலமாக இருவரின்
...more
தொழிலாளி பேதம் மட்டுமல்லாமல் முதலாளித் தன்மையில் ஜாதி உயர்வு தாழ்வு பேதம் நடப்பு இருக்கிற போதும், அதைப் பாதுகாக்க ஒரு ஜாதி இருக்கிற போதும், அவர்கள் தொழிலாளர் கிளர்ச்சியை நடத்துகிற போது மார்க்ஸ் சொன்னபடிதான் செய்ய வேண்டும்; லெனின் என்ன சொன்னாரோ அந்தப்படிதான் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? இது சதிகார ஜாதிக்குத்தான் அனுகூலம், மார்க்ஸேதான் தொழிலாளர் பிரச்சினைக்கு முடிவானவரா? அல்லது லெனினே கடைசியானவரா? நாளுக்கு நாள் நடப்பும் கருத்தும் மாறிக் கொண்டே வருகின்றனவே! ஜாதியின் பேரால் தொழிலாளர் சமுதாயம் இருக்கக் கூடாது என்கின்ற கிளர்ச்சியே 1925இல் தானே துவக்கப்பட்டது ? கண்டு
...more
உழவுத் தொழிலாளியும், விஸ்வகர்மத் தொழிலாளியும் ஒன்று என்பதுதான் நமது அபிப்பிராயம். ஜாதிப் பிரிவால் பேதப்படுத்தப்பட்டு விட்டதல்லாமல் மனித சமூக வாழ்வுக்கு இவர்கள் யாவரும் சமுதாயத்திற்கு அஸ்திவாரம் போன்று இன்றியமையாதவர்கள். ஒரே விதமாகத் தொண்டாற்றுகிறவர்கள். இவர்களில் எதற்காகப் பேதம்காண வேண்டும்? சமயத்தில், சாஸ்திரத்தில் சொல்லும் பேதங்கள் அல்லாமல் பிரத்தியட்சத்தில் என்ன பேதம் காண முடியும்? ஆதலால், தொழில்களில் உயர்வு தாழ்வு களையும், தொழிலாளி சமூகங்களில் உயர்வுதாழ்வுகளையாக்கும் ஜாதி பேதங்களையும் அழிப்பதற்கு முயற்சிப்பதுதான் தொழிலாளர் முன்னேற்றமாகும். ஒரு தொழிலாளிக்கு மற்றொரு தொழிலாளி எவ்வளவு உயர்ந்த
...more
யானால், கல் தச்சனும், நெசவாளியும் பிராமணனாக முயற்சித்தால் மற்றொரு தொழிலாளி ரிஷியாக முயற்சிக்கிறான். இதன் பயனாய், பிராம ணன் என்பவன் உயர்ந்தவன் என்பதும், ரிஷிகள் என்பவர்கள் உயர்ந்தவர்கள் என்பதும், தேவர்கள் என்பவர்கள் உயர்ந்தவர்கள் என்பதும்தான் நிலைநிறுத்தப் பாடுபட்டதாக ஆகுமேயல்லாமல், தொழில் முறைக்கோ, தொழிலாளி ஜாதி இழிவு என்பதற்கோ யாதொரு பயனும் ஏற்படப் போவதில்லை.
ஆரியர்களையும் திராவிடர்களையும் ஒத்திட்டுப் பாருங்கள். ஆரியன் தெரு கூட்டுகிறானா? மூட்டை தூக்குகிறானா? வண்டி ஓட்டு கிறானா? பியூனாய் இருக்கிறானா? உழுகிறானா? அறுப்பு அறுக்கிறானா? சரீரத்தில் இருந்து ஒரு துளி வேர்வையோ நகத்தில் கடுகத்தனை அழுக்கோ, படியும்படி ஏதாவது உடலுழைப்புச் செய்கிறானா? ஆனால், அவன் வாழ்வையும் திராவிடன் வாழ்வையும் ஒப்பிட்டுப் பாருங்கள். திராவிட சூத்திரன். திராவிடப் பெண் சூத்திரச்சி. ஆரியர் வீட்டு வேலைக் காரர்கள், அத்தனை பேரும் திராவிட (சூத்திர)ர்கள். மற்றும் திராவிடப் பழம் பெருங்குடி மக்கள் ஈயத்தில், கண்ணாடிக் கல்லில் நகைபோடுவது; ஆரியர்கள் இன்றைக்கும் பிச்சை எடுத்தாலும்
வைரம், செம்பு, பொன் நகைகள் போடுவது. திராவிடர்கள் 100க்கு 90 பேர்கள் தற்குறி; ஆரியர்கள் 100க்கு 90 பேர்கள் படித்தவர்கள், மகாபண்டிதர்கள். திராவிடர்கள் உத்தியோகத்தில் 100க்கு 90 பேர்கள் பியூன்கள், போலீசு, காவலர்கள், தோட்டி தலையாரிகள்; ஆரியன் பிச்சை எடுத்தாலும் அய்.சி.எஸ். ஆரியர்கள் 100க்கு 90 உத்தி யோகங்களில் கலெக்டர்கள், சூப்பிரண்டுகள், ஹைகோர்ட் ஜட்ஜுகள் முதலிய பெரும் பெரும் பதவிகள் ஆகிறான். திராவிடன் ஜமீன்தாரனாய் இருந்தாலும் அவன் மகன்
தெருவில் காவாலியாய்க் காலியாய், ஆரிய அடிமையாய், தற்குறியாய், மடையனாய்த் திரிகிறான். திராவிட மிராசுதாரர்கள் மக்கள் எல்லாம் தற்குறியாய் மூட்டை தூக்குகிற நிலைமைக்குப் போகிறார்கள். இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? திராவிடன் சிந்திக்க வேண்டாமா என்று கேட்கிறேன். கடவுள் பக்தியென்று கொட்டையும் சாம்பலும் மண்ணும் அணிந்துகொண்டு பார்ப்பான் பின்பாகத்தைப் பார...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
போல், பார்ப்பானுக்குப் பின்னால் நின்று கொடியைப் பிடித்து அவனுக்கு ஜே போட்டு தேசபக்தனாகக் காட்டிக்கெள்ளும் மானமற்ற திராவிடனைக் கேட் கின்றேன். இதோ, மேடை...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
பிராமணர்களுக்கு மட்டும் சாப்பாடும் என சில கிளப்புகளில் போர்டு போட்டிருப்பதைப் போல் பிராமணர் களுக்கு மட்டும் உத்தியோகம் என கோர்ட் வாசல்களில் போர்டுதான் போடாத குற்றம். போர்டு போட்டிருந்தால் பிராமணரல்லா தாரில் சிலர் இதில் நுழைந்து கஷ்டப்பட்டு வாழ்நாளை வீண் நாளாக ஆக்கி இருக்க மாட்டார்கள்.
கல்வியின் அளவும் செலவும் குறைக்கப்படுவது மாத்திரமல்லாமல், கல்வித் திட்டத்தையும் தலைகீழாக மாற்றி பிள்ளைகளுக்கு விஷய ஞானப்படிப்பு சொல்லிக் கொடுப்பதற்குப் பதிலாக தங்கள் தங்கள் கையினால் தொழில் செய்து வெறும் ஜீவனம் மாத்திரம் நடத்தி விட்டு மிருகங்கள், பூச்சி, புழுக்கள் போல் செத்து மடியும்படியான மிருகத்தன்மை தொழில்முறைகற்றுக் கொடுப்பதையே பள்ளிக்கூடப் படிப்பாகச் செய்யத்தக்க திட்டம் போடப்பட்டு வருகிறது. இது அமலுக்கு வருகிறது காலதாமதமாகுமானால் அதற்குள் புராண உணர்ச்சியை மக்களுக்குள் புகுத்த இந்தி கட்டாயப் பாடமாக ஆக்குவதற்குத் திட்டமும் பலாத்கார முயற்சியும் வெகு வேகமாக நடைபெறுகிறது.
உதாரணமாக அவினாசிலிங்கம் செட்டியார் என்கின்ற ஒரு திராவிடர் கல்வி மந்திரியானார். அவர் சொல்கிறார், பார்ப்பனர்கள் போல் திராவிடர் களுக்குத் தகுதித் திறமை இல்லை என்று. எதற்கு? உத்தியோகத்திற்கு கூட அல்ல; பள்ளியில் படிக்க சேர்த்துக் கொள்வதற்கே இப்படிச் சொல்லி அநேக திராவிடப் பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தகுதி, திறமை பேரால் அநேகப் பார்ப்பனப் பிள்ளைகளுக்கு இடம் கொடுத்தார்.
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கூடாது என்பவர்களில் யாரும் இதுவரை அது கூடாது என்பதற்கு சரியான காரணமோ அல்லது எல்லா மக்களுக்கும் சமத்துவமும் சம சந்தர்ப்பமும் கிடைக்கும்படியான வேறு மார்க்கமோ எடுத்துச் சொன்னவர் யாரும் இல்லை.
இது நிரந்தரமென்று நாம் சொல்ல வரவில்லை. எதுவரையும் ஜாதிப் பிரிவும், அவைகளுக்கு ஏற்றத்தாழ்வு உணர்ச்சிகளும் ஆதாரங்களும் காக்கப்படுகின்றனவோ அதுவரையில் கண்டிப்பாய் மேல்கண்ட கொள்கை இருந்தே ஆகவேண்டும் என்று சொல்லுகின்றோம்.
வகுப்பு வாதமும், வகுப்புத் துவேஷமும் நம்மிடம் எங்கே இருக்கிறது? பிராமணர் பிராமணரல்லாதார் என்கிற பிரிவினை யாரிடமிருந்து உண்டா யிற்று? கோவில்களிலும், தீர்த்தங்களிலும், நதிகளிலும், பள்ளிக்கூடங்களிலும், வாசம் செய்யும் தெருக்களிலும், ஓட்டல்களிலும், காப்பிக் கடைகளிலும் பிராமணர், பாகுபாடுகளும் பார்ப்பனரல்லாதாராகிய நம்மால் ஏற்பட்டதா? நம்மை யாராவது வகுப்புத் துவேஷி என்றோ வகுப்புவாதக்காரர் என்றோ சொல்ல முடியுமா? பார்ப்பனர்கள் தங்கள் உயர்வையும் ஆதிக்கத்தையும் உண்டாக்கிக் கொள்வதும், நம்மைத் தாழ்ந்த நிலையிலும் இழி தன்மையிலும் இருக்கும்படி செய்வதும் கொஞ்சமாவது குற்றம் என்று அவர்கள் நினைப்பதில்லை. ஆனால்,
...more
அரசியல் விஷயங்களில் நமது தற்கால யோக்கியதை என்ன என்பதைக் கவனித்துப் பாருங்கள். பார்ப்பனர்கள் உத்தியோகம் சம்பாதிப்பதற்காக ஏற்படுத்திக் கொண்ட இயக்கத்தை அவர்கள் தேசிய இயக்கம் என்பதாகப் பெயரை வைத்துக் கொண்டு நம் பேராலே நமது நாட்டிற்கும் நமது வகுப்பிற்கும் கேடான காரியங்களைச் செய்து அரசாங்கத் தாருக்கு அனுகூலம் செய்து கொடுத்து 1000, 2000, 5000, 7000 ரூபாய்கள் சம்பளமுள்ள உத்தியோகங்களையும் சம்பாதித்துக் கொண்டும், கோர்ட்டுகள் என்றும், பள்ளிக்கூடங்கள் என்றும் அரசாங்கத்திற்கும் தங்களுக்கும் அனுகூலமான ஸ்தானங்களையும் அரசாங்கத்திற்குள் உளவாயிருந்து ஏற்பாடு செய்து கொண்டு அதன் மூலமாய் பிழைத்து வருகிறார்கள்.
...more
ஹோட்டல்களின் பஞ்சமர் போர்டை ஒழிப்பாரா?
குழந்தைக்கு தலைவலி என்றால் கிரகதோஷம் என்று புரோகிதனும், சாமிதோஷம் என்று அர்ச்சகனும் சொல்லிக் கொள்ளையடித்துக் குழந் தையைக் கொல்லுவது போல் இந்தியாவில் வகுப்புச் சச்சரவு - வகுப்புக் கொடுமை இருக்கிறது. இதற்கு ஒரு வழி சொல்லு என்றால் சுயராஜ்ய மில்லாததால் என்று காந்தியாரும் அந்நிய அரசால் என்று நேருவும் சொல்லி மக்களை ஏமாற்றி தலைவர் பட்டம் பெற்று தேசத்தைப் பாழாக்குவதென்றால், இதை அறிவுள்ள யார்தான் பொறுத்திருக்க முடியும்? என்று கேட்கின்றோம். மற்றும் இவ்வளவு ஜாக்கிரதையாக ஒவ்வொரு வகுப்பாருக்கும் அவரவர்கள் மதம், பழக்க வழக்கம், ஆச்சார அனுஷ்டானம், தொழில் ஆகியவைகளைக் காப்பாற்ற உத்தரவாதம் ஏற்றுக் கொண்ட
...more
நாம் எதை வெறுக்கிறோம்? எதைத் தடுக்கும்படியும் வெறுக்கும் படியும் மக்களை வேண்டுவதோடு, வெறுப்பதிலும் தடுப்பதிலும் நமது முழு முயற்சியைக் காட்டி, கிளர்ச்சி செய்து அதனால் வந்ததையும் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லுகிறோம் என்றால், இம்மாதிரியான அதாவது படிப்பு, உத்தியோகம், பதவி, தொழில், செல்வம் முதலியவை ஏற்படுவதற்கு நம்மைவிட பார்ப்பனருக்கு உள்ள அதிகப்படியான நீதியற்ற இயற்கைக்கு விரோதமாக நாம் செய்து கொடுத்துள்ள - தனியான அதிகப்படியான - சலுகையை சவுகரியத்தை (Special Previleges) நிறுத்த வேண்டும். அவை அழிக்கப்பட வேண்டும் என்று தான் சொல்லுகிறோம். உதாரணமாக இன்று பார்ப்பனர்களில் வாழ்க்கையின் சகல துறையிலும்
...more
பார்ப்பனர் இல்லாத ரஷ்யாவிலும், ஆப்பிரிக்காவிலும் எஞ்சினீயர் வேலை, வைத்திய வேலை சரியாக நடக்கின்றதா - இல்லையா? என்றும் கேட்கிறோம்.
வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் உள்ள பல நூற்றுக் கணக்கான வேற்றுமை களில், திராவிடத்தில் குடியேறிப் பார்ப்பனர்களால், இந்நாட்டில் பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டு வரும் ஜாதிகள் அமைப்பு வடநாட்டில் காண முடியாது. இதன் கொடுமையை அங்குள்ளவர்களால் உணர்ந்து கொள்ளவும் முடியாது. அங்கு இந்து, முஸ்லிம், தாழ்த்தப்பட்டோர், சீக்கியர் வேற்றுமை பிளவு என்று சொல்லப்படுவதைப் போல, பிளவுணர்ச்சி காணப்படலாமே ஒழிய, திராவிடத்தில் உள்ள இந்துக்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்களுக்குள்ளாகவே காணப்படும் ஜாதித் திமிரை அங்குக் காண முடியாது. காரணம், அங்குக் குடியேறிய பார்ப்பனர்கள், ஓரளவாவது சமத்துவமாக நடந்து கொள்ள வேண்டும் என்கிற
...more
நான் பிரதிநிதியாக வந்துள்ள பிரதேசத்தில் ஹிந்து - முஸ்லிம் பிரச்சினையைவிடப் பெரிய பிசாசு இருக்கிறது. அது தான். பிராமணர் - பிராமணரல்லாதார் பிரச்சினை. உத்தியோகங்களில் மாத்திரம் சலுகை காட்டப்பட்டிருந்தால் இப்பிரச்சினையைப் பற்றிப் பேச நான் விரும்பியிருக்க மாட்டேன். ஒரு வகுப்பினர் அதிக ரேஷன் உணவு பெற்றாலும் எனக்கு அக்கறையில்லை. ஆனால், என் மாகாணமான சென்னையில் சர்வகலா சாலைகளில் மாணவர்களை அனுமதிப்பதிலும் பாரபட்சம் காட்டச் சட்டம் உதவுகிறது. திறமை முக்கியமல்ல; ஜாதியே முக்கியம். கலை, விஞ்ஞானம், என்ஜினியரிங், தொழில் முதலிய காலேஜ்களில் வகுப்புவாரியாக ஸ்தானங்கள் ஒதுக்கப்படுகின்றன. சட்டத்தின் பேரில்
...more
100க்கு 3 பேராய் இருக்கும் பார்ப்பனர்கள், இந்த நாட்டுப் பெருங்குடி மக்களை - உழைப்பாளிகளை - தொழிலாளர்களை, பல ஜாதியினராக்கி, ஜாதிக்குள் பல உட்பிரிவினர்களாக்கி, பல மதத்தினர்களாக்கி மதத்திற்குள் பல உட்பிரிவினர்களாக்கி, மதமோ, ஜாதியோ கலந்துவிடக் கூடாது, ஒழிந்துவிடக் கூடாது என்ற போக்கிலேயே கண்ணும், கருத்துமாயிருந்து சாஸ்திரத்தையும், சட்டத்தையும் காண்பித்து, அச்சுறுத்தி அடக்கி வருவதையும், அதனால் இந்த ஒரு மாகாணத்தில் மட்டும், நானூறுக்கு மேற்பட்ட ஜாதிக்காரர்களும், மதக் காரர்களுமாகப் பாட்டாளித் திராவிட மக்கள் பிரிந்து, ஒருவரோடொருவர் கொள்வினை, கொடுப்பினை இல்லாமல், ஒருவர் பார்க்க ஒருவர் உண்ணாமல், ஒவ்வொரு
...more
தங்களுக்கே ஏகபோக உரிமையாயிருந்த கல்வித்துறை, உத்தியோகத் துறைகளில் விகிதாச்சாரம் என்பதைக் கேட்ட மாத்திரத்திலே அந்த விகிதாச்சாரம் தங்களுக்கு 7,8 மடங்கு அதிகமாகவே இருக்கிறது என்பதைத் தெரிந்தும்கூட அநியாயம்! அக்கிரமம்! அநீதி! என்று கூப்பாடு போட்டார்கள். நீதி, நியாயம், கிரமம் என்பதைத் தாங்கள் பரம்பரையே அறிந்ததில்லை என்பதைத்தான் இந்தச் சம்பவத்திலிருந்து காண்பித்துக் கொண்டார்கள். இது முந்திய நிகழ்ச்சி.
மக்களுடைய வரிப்பணத்திலிருந்து நடப்பதுதான் இன்றைய அரசியல மைப்பிலுள்ள மாகாண சர்க்காரும், மத்திய சர்க்காரும், மக்களிடமிருந்து பெற்ற செல்வத்தைக் கொண்டுதான் இன்றைய ஆட்சியாளர் எவரும் வயிறு வளர்க்கிறார்கள்.
நீங்கள் பார்ப்பனன், பிராமணன் புரோகிதன் என்று சொல்லிக் கொள்வதிலே, அழைக்கப்படுவதிலே வெட்கப்பட வேண்டும் என்று நினைக்கிறோமே தவிர, உங்களைக் கொன்றெரிந்து விட வேண்டுமென்ற எண்ணம், அதற்கான நடவடிக்கை எங்களிடத்தில் ஒரு காலத்திலும் இருந்ததுமில்லை; இருக்கப் போவதுமில்லை! இந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வதாயிருந்தால், முதலில் பார்ப்பனியத்திற்குப் பாதுகாவலிருக்கும் எங்கள் தாய்களையும், தந்தைகளையும் மனைவிகளையும் கொலை செய்ய வேண்டியவர்களாவோம். ஏன்? நாங்கள் அழிய வேண்டுமென்று விரும்புவது பார்ப்பனர்கள் அல்ல; பார்ப்பனியமே.
தனித்தனி வகுப்புகளாக பார்ப்பனர்களுக்கு ஓர் இடம், பார்ப்பனரல்லாதாருக்கு ஒரு இடம்; பார்ப்பனர் குடிக்கும் தண்ணீர் வேறு, பார்ப்பனரல்லாதார் குடிக்கும் தண்ணீர் வேறு; பார்ப்பனர் சாப்பிடும் இடம் வேறு என்று தனித்தனிப் பிரிவினைகள் இருந்து வருவதும், அதைக் குறித்து ஒரு வார்த்தையும் பேசாமல் இருந்து வருவதும், அதை எதிர்க்கிறவர் களைக் கண்டித்துக் கிளர்ச்சி செய்து வருவதும் நியாயம். இவை வகுப்பு வாதம் அல்ல. இவ்வாறு வேற்றுமைகள் ஒழிக்கப்பட வேண்டும், பேதங்கள் கூடாது, சமத்துவம் வழங்க வேண்டும், அடிமைத் தன்மையொழிய வேண்டும், தன்மானம் பெற வேண்டும் என்று கூறுவது, இதற்காகப் போராடுவது வகுப்புவாதம். உண்மையிலே இதை
...more
நம் நாட்டிற்கு இன்று முதல் ஜாதி பேதங்கள் ஒழிந்து, மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாயிருக்கிறது. ஜாதி பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தால்தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும். பொருளாதார பேதத்துக்கும் சமூக - ஜாதி பேதமுறைகள் பெரிதும் காரணமாய், காவலாய் இருந்து வந்திருக்கின்றன. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதிபேதமே பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக் கூட இடம் தராமல் அடக்கி வருகின்றதுடன் பொருளாதார பேதத்துக்கு இடமளித்தும் வருகிறது. எந்தக் காரணத்தைக் கொண்டாவது இன்று நாட்டிலுள்ள பொருள்களை யெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து
...more
விகிதாசாரம் கொடு என்று கேட்பது வகுப்புவாதமானால் விகிதத்துக்கு மேல் அனுபவிப்பது என்ன ஆகும்? அது வகுப்புத் திருட்டு, வகுப்புக் குற்றம், வகுப்பு அயோக்கியத்தனம் தானே ஆகும்? இந்த நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வந்த தமிழ் மகனின் இந்நாட்டு ஆட்சியை பல்லாயிரம் ஆண்டாக ஆண்டு வந்த தமிழ் மகனை, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்நாட்டில் தன் உடலுழைப் பால் இந்நாட்டையே இந்நிலைக்கு அமைத்து இந்நாட்டு மக்களுக்கு உணவு, உடை, வீடு முதலிய உற்பத்தி செய்து மக்களுக்கு அளித்த தமிழ்மகனை இந்நாட்டு ஆட்சி அமைப்பில் தன் விகித உரிமை தனக்கு வேண்டும் என்று அவன் கேட்பது வகுப்புவாதம் என்றால் இந்நாட்டில் அந்நியனின்
...more

