Kindle Notes & Highlights
வாசிப்பு என்பது ஒப்புக் கொடுப்பதல்ல எதிர்கொள்வது. ஏற்பதிலிருந்தல்ல, மறுப்பதிலிருந்தே வாசிப்பு தொடங்குகிறது. மறுப்பதற்கான உத்திகளை நாம் பலவகையில் உருவாக்குகிறோம். நமது அனுபவ மண்டலத்துக்கு அதைக் கொண்டு வந்து பரிசீலிக்கிறோம். நம் அறிதல்களை போட்டுப்பார்க்கிறோம். நமது கோட்பாடுகளை செயலாக்கிப் பார்க்கிறோம். இதில் பல சமயம் நம் நேர்மையின்மை வெளிப்படலாம். அப்படைப்பை நிராகரிக்க, நமது உதாசீனத்தை, தந்திர புத்தியை நாம் பயன்படுத்தலாம். எல்லா காலத்திலும் இலக்கியப் படைப்புகள் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளன; திரிக்கப்பட்டுள்ளன; அவமதிக்கவும், வசை பாடப்படவும் செய்யப்பட்டுள்ளன. அவற்றை மீறி படைப்பு நம் ஆழ்மனதுடன்
...more
ஆனால் நடை முறையில் தன்னை ஒரு கருத்தியலுடன், அல்லது அமைப்புடன் பொருத்திக் கொண்டு அதன் துளியாக நின்று வாசிக்கும் வாசகர்கள் மிக அதிகம். அத்துடன் அந்தரங்க வாசகர்களை விட இவர்களே அதிகமாகப் பேசி, எழுதி தங்களை வெளிக்காட்டுகிறார்கள். நாம் வாசக எதிர்வினையாக காண்பது அதிகமும் இவர்கள் குரலையே. அந்தரங்கமான வாசிப்பு கொண்டவர்களுக்கு அவர்களின் எதிர் கொள்ளல் மிக அந்தரங்கமானதே. இவர்களில் மிக மிகச் சிலரே அந்த எழுத்தாளனிடமாவது தங்கள் வாசிப்பை தெரிவிப்பவர்கள்.
இன்னுமொரு விஷயம், கருத்தியல் அல்லது அமைப்பு சார்ந்த வாசகர்களுக்கு அவர்களின் கூட்டுச் செயல்பாட்டு தளம் சார்ந்து ஒரு வெளிப்பாட்டு முறையும், தர்க்கமும், மொழியும் அமைந்து விடுகிறது. ஆனால் அந்தரங்க வாசகனால் தன்னை தெளிவாகச் சொல்லி விட முடிவது இல்லை. அவன் வாசகனே ஒழிய எழுத்தாளனோ கருத்தியல் செயல் பாட்டாளனோ அல்ல. அவனுக்கு தன் மொழியில் உள்ள போதாமை குறித்த அச்சமும், தயக்கமும் அதிகம். எந்த எழுத்தாளனும் இப்படிப்பட்ட அந்தரங்க வாசகர்களையே வாசகர்களாக எண்ணுவான். பொருட் படுத்துவான்.
ஒரு படைப்பாளியிடம் அவன் எழுதிய அனைத்துப் படைப்புகளும் உங்களுக்கு சரிசமமாக பிடிக்கும் என்று சொன்னால் வசைபாடப்பட்டதாகவே எண்ணுவான். ஒப்பீடு இல்லாமல், ஏற்பும்- நிராகரிப்பும் இல்லாமல் இலக்கிய இயக்கமே இல்லை. எழுதிய அனைத்தையும் ரசிப்பவன் மன நோயாளியாகவே இருக்க முடியும்.
என்ன இங்கே சிக்கல் என்றால் வைர முத்துவையோ மு. கருணாநிதியையோ ஏற்க ஒருவனுக்கு சுதந்திரம் உண்டு; மறுக்க சுதந்திரம் இல்லை என்ற மூர்க்கமே. மறுப்பதை மட்டும் காலத்துக்கு விட்டுவிட வேண்டும் என்ற ஜனநாயக கோரிக்கையே.
நல்ல ஒரு வாசகரிடம் எப்படி வாசிக்க ஆரம்பித்தீர்கள் என்று கேட்டால் ஒரு தற்செயலை, ஒரு மனிதரை சுட்டிக்காட்டுவார். இயல்பான அறிமுகம் நிகழ அனேகமாக வாய்ப்பே இல்லை, தற்செயலே ஒரே திறப்பு. ஆகவேதான் இலக்கியமும் கலைகளும் இன்னும் விரிவாக அறிமுகம் செய்யப்படவேண்டும் என்று வாதிடுகிறோம்.
கதைகளை வாசிப்பதற்கு சிறந்த முறை அவற்றின் மாயத்துக்கு உங்களை ஒப்புக்கொடுப்பதே. கதைகேட்கும் குழந்தையின் எளிமையான கற்பனையுடன் கதைகள் முன் அமர்ந்திருப்பதே. வடிவம், உள்ளடக்கம், தத்துவம் என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் ஒரு துண்டு வாழ்க்கை உங்கள் முன் வைக்கப்படுகிறது என உணர்ந்து அவ்வாழ்க்கையை அகத்தில் கற்பனை மூலம் விரித்தெடுத்துக்கொண்டு அதை நாம் நம்மளவில் வாழ்ந்து பார்ப்பதே. அந்தக்கதையை நம் வாழ்வனுபவங்கள் நம்முடைய சொந்த அகக்கனவுகளை மட்டும் கொண்டு மதிப்பிடுவதே. அதைச்செய்வதற்கு தடையாக ஆகும் பிரக்ஞைபூர்வமான வாசிப்பு ஆபத்தானது. கதைகளை நம்மிடமிருந்து மறைத்து வெறும் மூளைப்பயிற்சியாக ஆக்கிவிடும் என நான்
...more
நம்முடைய வாசிப்பு பலசமயம் கவனக்குறைவானதாக இருக்கும். ‘நானெல்லாம் முழுசா படிக்கறதில்லை சார், சும்மா அப்டியே ஸ்கிப் பண்ணிட்டே போவேன். ஆனா கரெக்டா செண்டரை புடிச்சிருவேன்’ என்று சொல்லும் பல வாசகர்களை நான் சந்தித்திருக்கிறேன்.
எளிமையாகச் சொல்லப்போனால் சிறுகதை முடிவில் உச்சம்கொள்ளும் ஒரு வடிவம். முடிவு திருப்பமாக இருக்கலாம், மௌனமாக அடிக்கோடு போட்டிருக்கலாம், கவித்துவமான ஓர் எழுச்சியாக இருக்கலாம். ஆக முடிவை வாசகன் மிகவும் கவனிக்கவேண்டும். எந்த இலக்கியவடிவமும் வாசக இடைவெளிகள் வழியாகவே தன்னை வாசகனுடன் தொடர்புபடுத்திக் கொள்கிறது. வாசகன் நிரப்பியாகவேண்டிய இடைவெளிகள் அவை [பார்க்க ‘நாவல்’ என்ற நூல். கிழக்கு பதிப்பகம்] கவிதை அதன் சொற்களுக்கு இடையேயான இடைவெளிகளால் தன்னைத் தொடர்புறுத்திக்கொள்கிறது. நாவல் அதை நிகழ்வுகளுக்கு இடையேயான இடைவெளிகளால், சிறுகதை முதன்மையாக அதன் முடிவுக்குப்பின் உள்ள மௌனமான இடைவெளியால்தான் தன்னைத்
...more
சோற்றுக்கணக்கு கதை விடும் இடைவெளி கெத்தேல்சாகிப் அத்தனை பணம் கொண்டு போட்டும் தன்னை பார்க்கவேயில்லை, என் அன்னை இந்த கை மட்டுமே என கதைசொல்லி உணரும் இடத்துக்கும் ‘அடுத்தவாரமே ராமலட்சுமியை மணந்துகொண்டேன்’ என்று சொல்லப்படும் வரிக்கும் நடுவே உள்ளது. அங்கே பல விஷயங்கள் சொல்லப்படவில்லை. அவன் ஏன் அந்த முடிவை எடுத்தான் என. அதை ஊகிப்பதே வாசகனுக்கான சவால். அதைச் செய்யும்போதே வாசகன் கதையை அடைகிறான். அங்கே இப்படி சொல்லியிருக்கலாம். ‘நானும் ஒரு சோற்றுக்கணக்கில் அல்லவா இருக்கிறேன். நான் போடப்படாத சோற்றை கணக்கு வைத்துத்தானே மாமியை வெறுக்கிறேன். பிரியத்தை சோற்றுக்கணக்குக்கு அப்பால் சென்று பார்க்க எனக்கு ஏன்
...more
ஒரு சிறுகதையில் அதன் தலைப்பு, அதன் தொடுப்பு வாசகம், அதன் முடிப்பு வாசகம், அதன் மையச்சுட்டியாக அமையும் சொற்றொடர்கள், அது முன்வைக்கும் மையப்படிமம் ஆகியவை மிக முக்கியானவை. கெத்தேல் சாகிப்பின் கை ஆரம்பம் முதலே சொல்லப்படுகிறது. கதைமுழுக்க அன்னம், சோறு என்ற வர்ணனை வந்துகொண்டே இருக்கிறது.
அவை ஆசிரியனின் தேடலில் இருந்து உருவானவை அல்ல, வாசகனின் தேவை நோக்கி அவன் வந்தமையால் உருவானவை.
நாம் எப்படி இலக்கியப் படைப்புகளுடன் நம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறோம்? நாம் வாழும் அன்றாட யாதார்த்தம் அதில் இருப்பதனால் என்றுதான் முதலில் தோன்றுகிறது. ஆனால் அது உண்மையல்ல. நம் அன்றாட யதார்த்தம் ‘அப்படியே’ ஓர் இலக்கிய ஆக்கத்தில் இருந்தால் நமக்கு அது பெரும் சலிப்பையே ஊட்டும். அந்த யதார்த்தத்தை மீறவே நாம் வாசிக்கிறோம்.
அதைவிட முக்கியமான உத்தி அது அந்நகரை காட்சி வடிவமாக காட்ட முயல்கிறது என்பதே. காட்சிசார்ந்த விவரணைகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒரு சிற்பம் கீழிருந்து பார்த்தால் எப்படி இருக்கும், மேலே நின்றால் எப்படி இருக்கும், தூரத்தில் எப்படி தெரியும், அண்மைக்குச் செல்லச் செல்ல எப்படி மாறும் என அது காட்டிக்கொண்டே இருக்கிறது. இந்த உத்தி காரணமாக கொஞ்சநேரத்தில் வாசகன் விஷ்ணுபுரத்தை ‘பார்க்க’ ஆரம்பித்துவிடுவான். இதுவும் நம்பவைக்கும் உத்தியே.