More on this book
Community
Kindle Notes & Highlights
Read between
July 17 - August 21, 2024
இளம் வயதிலிருந்தே கூட்டு உழைப்பு என்று பொருள்படும் ‘யூய்மாரு’ என்ற கொள்கையை அவர்கள் கடைபிடித்து வருவதால், ஒருவருக்கொருவர் உதவுவது என்பது அவர்களுக்குப் பழக்கமாகி இருந்தது.
‘வேலையிலிருந்து நிரந்தர ஓய்வு’ என்று பொருள்படும் எந்தச் சொல்லும் ஜப்பானிய மொழியில் இல்லை. ஜப்பானியக் கலாச்சாரத்தில் வாழ்வின் நோக்கத்திற்குப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், அங்கு ’ஓய்வு பெறுதல்’ என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஜப்பானைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ள, ‘நேஷனல் ஜியோகிராஃபிக்’ பத்திரிகையின் நிருபர் டான் பியூட்னர் கூறுகிறார்.
ஓக்கினாவா, ஜப்பான் (குறிப்பாக இத்தீவின் வடபகுதி). இங்குள்ள மக்களின் உணவில் காய்கறிகளும் டோஃபுவும் அதிகமாக இடம் பெற்றிருக்கும். அவர்கள் தங்கள் உணவைச் சிறிய தட்டுகளிலேயே பரிமாறுவர். இக்கிகய் தவிர, ‘மொவாய்’ என்று அழைக்கப்படுகின்ற, மிக நெருங்கிய நண்பர்கள் வட்டமும் அவர்களுடைய நீண்ட ஆயுளுக்கு ஒரு முக்கியப் பங்கு ஆற்றுகிறது.
பலருடைய விஷயத்தில், மற்றவர்களுக்கு உதவுவது அவர்களை நீண்டகாலம் உயிரோடு வைக்கக்கூடிய அளவுக்கு மிக வலிமையான ஓர் இக்கிகய்யாக இருக்கக்கூடும்.
பொதுவாக ஜப்பானில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு சொற்றொடர் ‘ஹரா ஹாசி பூ’ என்பதாகும்.
நாம் அளவுக்கதிகமாகச் சாப்பிடும்போது, செரிமானத்திற்கு நீண்ட நேரம் ஆவதால் உயிரணுக்களில் ஆக்சிஜனேற்றம் அதிகரிக்கிறது. இது உடலுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது என்பதால் அவர்கள் இதைத் தவிர்க்கின்றனர்.
உணவு பரிமாறப்படும் முறையும் முக்கியமானது. உணவைப் பல சிறிய தட்டுகளில் பரிமாறுவதன் மூலம் ஜப்பானியர்கள் குறைவாக உண்கின்றனர். ஜப்பானிய உணவகங்களில் பொதுவாக உணவு ஐந்து சிறு தட்டுகளில் பரிமாறப்படும். அந்தத் தட்டுகள் ஒரு சிறு தாம்பாளத்தில் வைக்கப்பட்டிருக்கும். முக்கிய உணவு வைக்கப்பட்டிருக்கும் தட்டு மற்றத் தட்டுகளைவிடச் சற்றுப் பெரிதாக இருக்கும்.
ஓக்கினாவா மக்களின் உணவில், டோஃபு, சீனிக்கிழங்கு, மீன் (வாரத்திற்கு மூன்று முறை), மற்றும் காய்கறிகள் (தினமும் சுமார் 310 கிராம்) இடம் பெறுகின்றன. இது பற்றிப் பின்னர் நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மொவாய்: வாழ்க்கை முழுவதும் தொடரும் நட்பு வட்டம்
மொவாய் ஒரு கடினமான காலகட்டத்தில்தான் தோன்றியது. விவசாயிகளுக்கு விளைச்சல் குறைவாக இருந்த காலகட்டங்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டனர், தாங்கள் கடைபிடித்து வந்த சிறந்த வழிமுறைகளைப் பிறருடன் பகிர்ந்து கொண்டனர்.
குழுவின் நிதி நிலைமையைப் பொறுத்து இந்த நடைமுறை சிறிது மாறுபடலாம் என்றாலும், ஒருவரையொருவர் சார்ந்திருத்தல், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருத்தல் போன்றவை ஏற்படுத்திக் கொடுக்கும் பாதுகாப்புணர்வு அவர்களுடைய வாழ்நாள் நீள்வதற்கு உதவுகிறது.
உடல், மனம் ஆகிய இரண்டுமே முக்கியமானவை என்றும், அவை ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றும் அது நமக்கு நினைவுபடுத்துகிறது. மாறுகின்ற சூழலுக்கு ஏற்பத் தன்னைப் பொருத்திக் கொள்கின்ற துடிப்பான மனத்தைக் கொண்டிருப்பது இளமையைத் தக்கவைத்துக் கொள்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
நாம் நம்முடைய இருபதுகளில் இருக்கும்போதே நம்முடைய நரம்பணுக்கள் மூப்படையத் தொடங்குகின்றன. ஆனால் அறிவுக்குத் தீனி போடும் நடவடிக்கைகள், ஆர்வம், புதியவற்றைக் கற்றுக் கொள்வதற்கான விருப்பம் போன்றவை இந்த மூப்படையும் செயல்நடவடிக்கையைத் தாமதப்படுத்துகின்றன. புதிய சூழல்களை எதிர்கொள்ளுதல், தினமும் புதிது புதிதாக எதையாவது கற்றுக் கொள்ளுதல், விளையாடுதல், பிறருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்றவை மூளை மூப்படையாதபடி பார்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளாகும். அதோடு, இவற்றைக் குறித்து ஒரு நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டிருப்பது கூடுதல் பலனளிக்கும்.
மன அழுத்தம் உயிரணுக்களில் இருக்கும் டெலோமியர்கள் என்ற அமைப்புகளை பலவீனப்படுத்துவதன் மூலம் உயிரணுக்கள் மூப்படைவதைத் துரிதப்படுத்துகின்றன என்பதை அந்த ஆய்வு கண்டுபிடித்தது. உயிரணுக்களின் புத்துயிராக்கத்தில் டெலோமியர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நம்முடைய மன அழுத்தம் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதிகமாக உயிரணுக்கள் உருக்குலையும் என்பதைத்தான் அந்த ஆய்வுகள் வெளிப்படுத்தின.
நிகழ்கணலயிப்பு மனநிலையை அடைவதற்கு தியானம் ஒரு வழி. வெளியுலகிலிருந்து நம்மை வந்தடையும் தகவல்களை வடிகட்ட தியானம் நமக்கு உதவுகிறது. யோகா, மூச்சுப் பயிற்சி போன்வற்றின் மூலமாகவும் அதை அடைய முடியும்.
ய மனநோயாளிகளோடு தன் ஊழியர்களையும் சேர்த்துக் கொண்டார். அந்த ஆய்வு வெளிப்படுத்திய முடிவுகள் இவைதான்: அதில் கலந்து கொண்டவர்களில் 80 சதவீதத்தினர், உயிர் வாழ்வதற்கு மனிதர்களுக்கு ஏதாவது ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும் என்று நம்பினர்.
“மனிதர்களிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துவிட முடியும் - ஒன்றே ஒன்றைத் தவிர! மனிதச் சுதந்திரங்களில் இறுதிச் சுதந்திரம் அது. புறச்சூழல் எதுவாக இருந்தாலும் தன்னுடைய சொந்த மனப்போக்கையும் சொந்த வழியையும் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம்தான் அது.”
“தான் வாழ்வதற்கான ஒரு காரணத்தைக் கொண்டுள்ள ஒருவரால், தன் வாழ்வில் தான் எதிர்கொள்ளக்கூடிய அனைத்தையும் தாங்கிக் கொண்டு அவற்றைக் கையாள முடியும்.”
தன் வாழ்வின் நோக்கத்தைக் கண்டுபிடிப்பது ஒருவரின் இருத்தல் குறித்த வெறுமையைக் களைய உதவும் என்று லோகோ சிகிச்சை நம்புகிறது.
எந்த விஷயம் நடந்துவிடக்கூடாது என்று நாம் பயந்து கொண்டிருக்கிறோமோ, துல்லியமாக அந்த விஷயத்தைக் கவலை நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பதைப்போல, ஒரு விருப்பத்தின்மீது நாம் அளவுக்கதிகமான கவனம் செலுத்தும்போது, அந்த அதீத கவனம், அவ்விருப்பம் நிறைவேறுவதைத் தடுத்துவிடுகிறது.
நாஜி வதைமுகாம்களிலும், பின்னர் ஜப்பானிலும் கொரியாவிலும் நிறுவப்பட்ட வதைமுகாம்களிலும் அடைக்கப்பட்டிருந்தவர்களில், வதைமுகாம்களுக்கு வெளியே பலவற்றைச் சாதிக்க ஆசைப்பட்டவர்களும், அங்கிருந்து உயிருடன் வெளியே செல்வதற்கு வலுவான காரணங்களைக் கொண்டிருந்தவர்களும் மட்டுமே அந்த முகாம்களிலிருந்து தப்பிப் பிழைப்பதற்கு அதிக சாத்தியக்கூறுகளைக் கொண்டிருந்ததாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். இது
அதே நேரத்தில், வளர்வதற்கும் சாதிப்பதற்குமான வாய்ப்புகள் இங்கு கொட்டிக் கிடக்கின்றன என்பதையும் நீங்கள் மறக்கக்கூடாது.
எம்ஐடி மீடியா லேபின் இயக்குநரான ஜோய் இட்டோ, நிச்சயமற்றத் தன்மையுள்ள நம்முடைய உலகில் பயணிப்பதற்கு, ‘வரைபடத்தைவிடத் திசைமானிக்கு முக்கியத்துவம் கொடுத்தல்’ என்ற கொள்கையைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கிறார்.
தெளிவான நோக்கத்தைக் கொண்டிருத்தல் திளைத்திருக்கும் நிலையை அடைவதற்கு இன்றியமையாதது என்றாலும், நாம் காரியத்தில் இறங்கியதும் அதை எப்படிப் பின்னால் விட்டுவிட வேண்டும் என்பதை அறிந்திருப்பதும் முக்கியமானதுதான். பயணம் தொடங்கியதும் அந்த நோக்கத்தைப் பற்றித் தேவைக்கு அதிகமாக நினைத்துக் கொண்டிருக்காமல் வெறுமனே அதை நம் மனத்தில் வைத்திருக்க வேண்டும், அவ்வளவுதான்.
“மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு மனிதன் நிகழ்காலம் குறித்துப் பெரும் திருப்தியுடன் இருப்பான். எதிர்காலத்தில் வாசம் புரிய அவன் விரும்ப மாட்டான்,” என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியுள்ளார்.
தொழில்நுட்பம் சிறப்பானதுதான், அதன் குடுமி நம் கையில் இருக்கும்வரை மட்டுமே! அது நம்மைக் கட்டுப்படுத்தத் தொடங்கிவிட்டால், அதைச் சிறப்பானது என்று அழைக்க முடியாது.
வாரத்தில் ஒரு நாள் ‘தொழில்நுட்பம் தொடா விரதம்’ இருங்கள்.
ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொள்பவர்களுக்கு முதலில் அறிமுகமாகும் ஒரு சில வார்த்தைகளில் ‘கன்பாரு’ என்ற வார்த்தையும் இருக்கும். விடாமுயற்சி என்பது அதன் பொருள்.
ஜப்பானியக் கைவினைஞர்கள், பொறியாளர்கள், ஜப்பானியத் தத்துவம், ஜப்பானிய உணவு ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் ஒற்றுமை எது? எளிமையும் பூரணத்துவமும்தான் அது.
தாக்குமி
உணவகங்களுக்கு வழங்கப்படும் விருதுகளிலேயே உயரிய விருதான மூன்று நட்சத்திர மிச்செலின் விருதைப் பெற்றப் பிறகும்கூட அவர்கள் தங்களுடைய தொழிலை விரிவுபடுத்திக் கொள்ளவோ அல்லது புதிய கிளைகளைத் திறக்கவோ விரும்பவில்லை. அவர்களுடைய சிறிய உணவகத்தில் ஒரு நேரத்தில் பத்துப் பேர்தான் அமர்ந்து சாப்பிட முடியும். ஜிரோவின் குடும்பம் செல்வத்தைச் சேர்ப்பதில் குறியாக இல்லை. தங்களுக்குப் பிடித்த வேலையைச் செய்வதற்கு ஏற்ற ஒரு நல்ல சூழல், திளைத்திருக்கும் நிலையில் இருத்தல் ஆகியவற்றில்தான் அவர்களுக்கு விருப்பம் இருக்கிறது. அதைக் கொண்டு அவர்கள் உலகிலேயே மிகச் சிறந்த ஸுஷி உணவைத் தயாரித்துத் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு
...more
அடையும் அந்த ஐக்கியம், ஜப்பானில் ஒரு தனித்துவமான பெயரில் அழைக்கப்படுகிறது. ஷின்டோ மதத் தத்துவத்தின்படி, காடுகள், மரங்கள் மற்றும் பொருட்களுக்குக் ‘காமி’ (ஆன்மா) இருக்கிறது.
அச்செயல்முறையின்போது அதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கலைஞர் அதோடு ஐக்கியமாகிறார், திளைத்திருக்கும் நிலையை எய்துகிறார். இரும்பு வேலையில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் அந்த உலோகத்திற்கு ஜீவன் இருக்கிறது என்று கருதுவார். பீங்கான் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் களிமண்ணுக்கு ஜீவன் இருக்கிறது என்று கூறுவார். இயற்கையையும் தொழில்நுட்பத்தையும் ஐக்கியப்படுத்துவதில் ஜப்பானியர்கள் வல்லவர்கள். இது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே நடக்கும் போராட்டமல்ல, மாறாக அவ்விரண்டின் சங்கமம் அது.
‘ஓயாகோ’ (ஹல்லோ) என்று கூறுவார்.
இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஜப்பானிய எழுத்தாளரான ஹருகி முரகாமி. அவர் தன் நெருங்கிய நண்பர்களை மட்டுமே சந்திப்பார், ஒருசில ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.
இவரைப் போன்ற கலைஞர்கள், தாங்கள் தங்களுடைய இக்கிகய்யில் திளைப்பதும், தங்களுடைய தனிப்பட்ட இடத்தைப் பாதுகாத்துக் கொள்வதும், சுற்றுச்சூழலைக் கட்டுப்படுத்துவதும், கவனச்சிதறல்களுக்கு ஆளாகாமல் இருப்பதும் எந்த அளவு முக்கியம் என்பதை நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்.
தியானப் பயிற்சியில் ஈடுபடும்போது நாம் கற்றுக் கொள்ளும் பாடங்களில் ஒன்று, நம்முடைய மனத்திரையில் அலைபாய்ந்து கொண்டிருக்கும் எதைக் குறித்தும் நாம் அலட்டிக் கொள்ளக்கூடாது என்பதாகும். நாம் தியானத்தில் இருக்கும்போது, நம்முடைய மேலதிகாரியைக் கொல்ல வேண்டும் என்ற யோசனை தலைதூக்கலாம். ஆனால் அதை எடைபோடாமலும் மறுதலிக்காமலும், அதை மற்றோர் எண்ணமாக வரையறுத்து, வானில் ஒன்றன்பின் ஒன்றாக வரும் மேகம்போல அது கலைந்து போக நாம் அதை அனுமதிக்க வேண்டும். அது வெறுமனே ஓர் எண்ணம் மட்டுமே. சில வல்லுநர்களின் கருத்துப்படி, நம் மனத்தில் அன்றாடம் அறுபதாயிரம் எண்ணங்கள் தோன்றுகின்றன.
நீக்கமற நிறைந்துள்ளன.
மகிழ்ச்சி என்பது செயல்முறையில்தான் அடங்கியுள்ளதே அன்றி, விளைவுகளில் அல்ல.
மகிழ்ச்சியாக இருப்பவர்கள் சாதனையாளர்கள் அல்லர். திளைத்திருக்கும் நிலையில் அதிகமான நேரத்தைச் செலவழிப்பவர்கள்தான் அதிக மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
மிசாவோ ஒகாவா (117) “நன்றாகச் சாப்பிடுங்கள், நன்றாக உறங்குங்கள், நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பீர்கள். ஆசுவாசமாக இருப்பது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.”
ஒரு துணி வியாபாரியின் மகளான அவர் 1898ம் ஆண்டு பிறந்தார். அதே ஆண்டில்தான் ஸ்பெயின் கியூபாவிலும் பிலிப்பைன்ஸிலும் தன் காலனிகளை இழந்தது; அமெரிக்கா ஹவாய் தீவைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது; பெப்சி கோலா அறிமுகப்படுத்தப்பட்டது.
மரியா காப்போவில்லா (116) “நான் என் வாழ்நாளில் இறைச்சியை உண்டதே கிடையாது.”
“நான் மெத்துசெலாவுடன் போட்டி போட்டேன்,” என்று நகைச்சுவையாகக் கூறினார் (பைபிளில் இடம் பெற்றுள்ள மெத்துசெலா 969 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது).
“நீங்கள் உங்களுடைய உடலையும் மனத்தையும் சுறுசுறுப்பாக வைத்திருந்தால், நீண்டகாலம் இங்கு உலாவிக் கொண்டிருப்பீர்கள்.”
யன்பாரு காடுகளில் உலவும் புனகயா ஆவிகள்
ஓக்கினாவா கடவுளர் ஓக்கினாவாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் முக்கியமான மதம் ருக்யூ ஷின்டோ என்று அழைக்கப்படுகிறது. ஓக்கினாவா தீவுக்கூட்டங்களின் பூர்விகப் பெயர்தான் ருக்யூ. ஷின்டோ என்றால் கடவுளை அடைவதற்கான வழி. சீனத் தாவோவாதம், கன்பூசியவாதம், புத்த மதம், ஷின்டோ மதம், ஷாமன் முறைகள், ஆன்மவாதம் போன்றவற்றின் கலவைதான் அது.
பாரம்பரியச் சடங்குகளின் மூலம் ஆவிகளுடன் தொடர்பு கொள்வதற்கு அவர்களுடைய சமூகத்திலிருந்து ஒரு பெண்மணி தேர்ந்தெடுக்கப்படுவார். அவருக்கு யுடா என்று பெயர். மூதாதையர் தொழுகை என்பது ஓக்கினாவாவிலும் ஜப்பான் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வரும் மற்றொரு பழக்கம்.
மாபுய் எல்லோருக்கும் ஒரு சாராம்சம் அல்லது மாபுய் இருக்கிறது. அதுதான் நம்முடைய ஆன்மா. அதுதான் நம் உயிராற்றலின் மூலாதாரம். அதற்கு அழிவே கிடையாது. நாம் யார் என்பதை அதுதான் தீர்மானிக்கிறது. சில சமயங்களில், இறந்து போன ஒருவரின் மாபுய் உயிரோடு இருக்கும் ஒருவரின் உடலில் மாட்டிக் கொள்ளும். அதைப் பிரிப்பதற்கு ஒரு சடங்கு இருக்கிறது. ஒருவர் திடீரென்று இறந்துவிட்டால், குறிப்பாக இளம் வயதில் இறந்துவிட்டால், அப்படி இறந்தவர்களின் ஆவி, இறந்தவர்களின் உலகைச் சென்றடைய விரும்பாது.
“இந்த வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க விரும்பினால், அதற்கு, நீங்கள் செய்வதற்கு ஏதாவது ஒன்று இருக்க வேண்டும், நீங்கள் நேசிப்பதற்கு ஒருவர் இருக்க வேண்டும், நீங்கள் நம்புவதற்கு ஏதாவது ஒன்று இருக்க வேண்டும்.”