More on this book
Community
Kindle Notes & Highlights
Read between
July 17 - August 21, 2024
“தினமும் காலையில் வீட்டைவிட்டு வெளியே வந்து, 7.20லிருந்து 8.15வரை, பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியரிடம் நான், ‘ஹலோ,’ என்றும் ‘அப்புறம் சந்திக்கலாம்!’ என்று கூறுவேன். என்னைக் கடந்து காரில் செல்கின்ற ஒவ்வொருக்கும் நான் கையை அசைத்து, ‘எச்சரிக்கையாக ஓட்டுங்கள்!’ என்று கூறுவேன். எல்லோரும் போன பின் நான் வீட்டுக்குத் திரும்பிவிடுவேன்.”
அவசரமற்ற ஒரு வாழ்க்கையை வாழுங்கள் “எனக்கு நானே அவ்வப்போது, ‘மெதுவாகச் செய்!’ என்றும் ‘ஆசுவாசமாக இரு!’ என்றும் கூறிக் கொள்வதுதான் என் நீண்ட ஆயுளின் இரகசியம்.
“நீண்ட ஆயுளுக்கான இரகசியம் சீக்கிரமாகத் தூங்கி, சீக்கிரமாக விழித்து, கண்விழித்தவுடன் உடற்பயிற்சி செய்வது; அமைதியாக வாழ்ந்து கொண்டு, சின்னச் சின்ன விஷயங்களை ரசித்து மகிழ்வது;
எப்போதும் நன்னம்பிக்கையுடன் இருங்கள் “தினமும் எனக்கு நானே இப்படிக் கூறிக் கொள்வேன்: ‘இன்றைய நாள் ஆரோக்கியத்துடனும் ஆற்றலுடனும் இருக்கும். இன்றைய நாளை நான் முழுவதுமாக ரசித்துக் களிப்பேன்.”
80 சதவீத விதியை தினந்தோறும் கடைபிடிக்க முடியாதவர்களுக்கு ஒரு மாற்று வழி இருக்கிறது. வாரத்தில் இரண்டு நாட்கள் உண்ணாவிரதம் இருப்பதுதான் அது. உண்ணாவிரதம் இருக்கும் இரண்டு நாட்களிலும் முழுப் பட்டினி கிடக்க வேண்டிய அவசியமில்லை. 500 கலோரிக்குக் குறைவாக உண்ண வேண்டும், அவ்வளவுதான். மற்ற ஐந்து நாட்களில் வழக்கம்போலச் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
நோக்கம் ஒன்றுதான். அவை: அசைவின்மையின் மூலம் இயக்கத்தைக் கட்டுப்படுத்துதல் மூர்க்கமான ஆற்றலை நளினமான அசைவுகள் மூலம் வெற்றி கொள்ளுதல் இடப்பெயர்ச்சிக்குப் பின்னர் இயக்கம் உங்களையும் உங்கள் எதிரியையும் அறிந்திருத்தல்
ஏழு முறை விழுங்கள், எட்டு முறை எழுங்கள். - ஜப்பானிய முதுமொழி
ரெய்ன்ஹோல்ட் நிபுரின் உலகப் பிரசித்தி பெற்ற வைர வரிகள் இவர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்: இறைவா, என்னால் மாற்ற முடியாத விஷயங்களை அமைதியுடன் ஏற்றுக் கொள்ள எனக்கு வழிகாட்டு. மாற்றப்பட்டே ஆக வேண்டிய விஷயங்களை மாற்றுவதற்குத் தேவையான துணிவை எனக்குக் கொடு. இரண்டுக்கும் இடையேயான வேறுபாட்டைப் புரிந்து கொள்வதற்கான ஞானத்தை எனக்குக் கொடு.
அறிவார்ந்த மனிதன் வாழ்க்கையின் இன்பங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும்போதே, தான் அவற்றால் எவ்வளவு எளிதாக அடிமைப்படுத்தப்பட முடியும் என்பது குறித்த விழிப்புணர்வையும் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் கருதினார்.
சினிக் தத்துவம் தனக்கு நல்வாழ்வைத் தரவில்லை என்பதை உணர்ந்து ஜீனோ அதை உதறித் தள்ளிவிட்டு, ஸ்டோயிக் தத்துவத்தை உருவாக்கினார். வாழ்வின் இன்பங்கள் உங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராதவரை அவற்றை அனுபவிப்பதில் எந்தவிதமான தவறும் கிடையாது என்ற கருத்து ஸ்டோயிக் தத்துவத்தின் மையக் கருத்தாக விளங்குகிறது. அதே நேரத்தில், தங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றவர்களை அது நல்லொழுக்கவாதிகள் என்று அழைக்கிறது.
“உங்களுக்கு என்ன நடக்கிறது என்பது முக்கியமல்ல, அதை நீங்கள் எவ்வாறு கையாள்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்,” என்று எபிக்டெட்டஸ் கூறியுள்ளார்.
எதிர்மறை உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு புத்த மதத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மந்திரம் இதுதான்: ‘ஓம் மணி பத்மே ஹூம்.” இந்த ஆறெழுத்து மந்திரத்திலுள்ள ‘ஓம்,’ அகங்காரத்தைத் தூய்மையாக்கும் பெருந்தன்மையையும், ‘ம,’ பொறாமையைத் தூய்மையாக்கும் நன்னெறியையும், ‘ணி,’ இன்ப வேட்கையைத் தூய்மையாக்கும் பொறுமையையும், ‘பத்,’ பாகுபாட்டைத் தூய்மையாக்கும் துல்லியத்தையும், ‘மே,’ பேராசையைத் தூய்மையாக்கும் சரணாகதியையும், ‘ஹூம்,’ வெறுப்பைத் தூய்மையாக்கும் ஞானத்தையும் குறிக்கின்றன.
அழகைக் கச்சிதத்தில் தேடிக் கொண்டிருப்பதற்கு பதிலாக, நாம் அதை முழுமையற்ற, குறைபாடுடைய விஷயங்களில் தேட வேண்டும்.
இதற்கு ஆதரவான இன்னொரு ஜப்பானியத் தத்துவம் உள்ளது. அதன் பெயர் இச்சிகோ இச்சி. ‘இக்கணம் இப்போது மட்டுமே இருக்கும். மீண்டும் ஒருபோதும் திரும்பி வராது’ என்று இச்சிகோ இச்சி கூறுகிறது.
அடுத்தத் தலைமுறையினர் மீண்டும் அமைக்க வேண்டியிருக்கும். மனிதர்களின் நிலையாமையையும் அவர்கள் படைத்துள்ள அனைத்தின் நிலையாமையையும் ஜப்பானியக் கலாச்சாரம் ஏற்றுக் கொள்கிறது.
இது நண்பர்களுக்கும் பொருந்தும். அதாவது, ‘எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போட்டு வைக்காதீர்கள்’ என்ற பழமொழியைப் பின்பற்றுங்கள்.
அசாதாரணமான நிகழ்வுகள் சாதாரணமாக நிகழ்வதில்லை என்பதால், இவை காலவிரயம்போலத் தோன்றலாம்.
ஒரு நாளைக்கு 20 நிமிடங்களுக்கு மேல் ஃபேஸ்புக் தளத்தில் செலவழிக்காமல் இருப்பது மீண்டெழுதல் மனப்போக்கை உருவாக்கிக் கொள்ள முனையும்போது, இன்னல்கள் குறித்து அச்சப்படக்கூடாது. ஏனெனில், ஒவ்வொரு பின்னடைவும் வளர்ச்சிக்கான ஒரு வாய்ப்புதான். நாம் நம்முடைய இக்கிகய்யில் கவனத்தைக் குவித்து வைத்திருந்து, மனமுடையாமல் இருந்தால், எந்தப் பின்னடைவாக இருந்தாலும் அதிலிருந்து நம்மால் வெற்றிகரமாக மீண்டெழ முடியும். நாம் ஓரிரு முறை இன்னலுக்கு ஆளாகியிருந்தால், அதை நம் துரதிர்ஷ்டம் என்று கருதி ஒதுக்கிவிட்டுத் தொடர்ந்து முன்னே செல்லலாம் அல்லது அதிலிருந்து ஒரு படிப்பினையைக் கற்றுக் கொண்டு அதைப் பயன்படுத்தி நம்முடைய
...more
பணம், அதிகாரம், கவன ஈர்ப்பு, வெற்றி போன்ற ஆற்றல்மிக்க சக்திகள் தினந்தோறும் நம் கவனத்தைச் சிதறடிக்கின்றன. அவை உங்கள் வாழ்க்கையைத் தம்முடைய கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொள்ள அனுமதித்துவிடாதீர்கள்.
உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தமும் மகிழ்ச்சியும் கொடுக்கின்ற காரியங்களைச் செய்வதன் மூலம் வாழ்க்கையில் மும்முரமாக இருங்கள். அவை பிரம்மாண்டமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
நாம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் எந்த அளவு அவசரமாகச் செய்கிறோமோ, நம்முடைய வாழ்வின் தரம் அந்த அளவு மோசமாக இருக்கும். “மெதுவாக நடந்தால் வெகு தூரம் செல்லலாம்,” என்ற முதுமொழியில் பேருண்மை இருக்கிறது.