Kindle Notes & Highlights
ஒரு தொழில் வெற்றியடைய சிறப்பான யோசனைகள் மட்டும் போதுமானவையல்ல.களத்தில் அந்த யோசனைகள் நிலைபெற செயலாக்கத்திறன் அவசியம்.
திட்டமிட்டப் பாதையில் தொழில் நகராதபோது, திட்டத்தில் சிறிய மாற்றம் செய்வது அல்லது திட்டத்தையே மாற்றிக் கொள்வது அவசியம்.
அணையா நெடுவிளக்காக, பிடித்தபடியாக நிற்பவர்கள் கடைசியில் தோல்வியடைந்து வெளியேறிவிடுகிறார்கள்.
போதிய வழிகாட்டுதல்கள் இல்லாமல், எந்த உயரிய லட்சியமும், புதுமை நாட்டமும் இல்லாமல் வெறுமனே முதலீட்டைத் திரட்டித் துவங்கப்படும் ‘ஸ்டார்ட்- அப்’களால் தனிமனிதனுக்கோ, நாட்டுக்கோ எந்தப் பலனும் இல்லை. இதனால் வேலை வாய்ப்புகளும் உருவாகப்போவதில்லை. மேலாக, நாடு முழுக்கக் கடனாளிகளின் எண்ணிக்கைதான் பெருத்துப் போகும். ‘பெரிதாகத் திட்டமிடு.. சிறிதாகத் தொடங்கு’ எனும் கனிந்தபனியாவின் சொற்கள் இந்த இளைஞர்களை எட்டுவதே இல்லை.
ஒரு நகரத்தின் இரண்டாயிரம் பேப்பர்ப் பையன்களிலிருந்து ஒரு இருபது தொழில் முனைவோர் உருவாகக்கூடும். இது நிச்சயமான சமூகப் பொருளாதார மாற்றத்தை உருவாக்கும்.
அனுபவமிக்க வெற்றியாளர்களின் நேரமும், அக்கறையான வழிகாட்டலுமே இளைஞர்களுக்குப் பெரிதும் தேவை.
வல்லிக்கண்ணன் கதை ஒன்றில் கிருஷ்ணாபுரத்து சிற்பத்தை வியந்து ஒரு வரி இருந்தது.
“கலையும் இலக்கியமும் மனிதனின் அன்றாட கவலைகளிலிருந்து, அலுப்பூட்டும் அபத்தத்திலிருந்து அவனைக் கண நேரமேனும் மீட்டு மேன்மையானதொரு உலகில் சஞ்சரிக்க வைக்கிறது”. அன்று நான் சபதம் கொண்டேன். இனி ஒருபோதும் எனக்குத் துக்கமில்லை. நான் திரும்பிப் பார்க்கப்போவதில்லை. என் மிச்ச வாழ்வை புத்தகங்களைச் சுற்றியே அமைத்துக்கொள்வேன். புத்தகங்கள் அடித்துச் செல்லும் திசையில்தான் நான் கரை ஒதுங்குவேன் என. அன்று தொட்டு இன்று வரை வாசிக்காத நாளென ஒரு தினம் என் வாழ்க்கையில் இருந்ததில்லை. வாசிக்கிறவர்கள்,
வாசிக்கிறவர்கள், எழுதுகிறவர்கள், சிந்திக்கிறவர்கள், பேசுகிறவர்கள், கலைஞர்கள் தவிர நண்பர்களென என எவரும் எனக்கு இல்லை.
வல்லிக்கண்ணனின் அந்த கதையை வாசித்திராவிட்டால் நான் பைத்தியம் பிடித்துச் செத்திருப்பேன். அந்த வரி இல்லாமல் நான் கிருஷ்ணாபுரத்துக்கு வந்திருக்கவே மாட்டேன். புதுமைப் பித்தனை வாசித்திருக்கா விட்டால் திட்டிவாசல் எனும் சொல்லையே நான் கேள்விப்பட்டிருக்க மாட்டேன். வண்ணதாசனை வாசித்திருக்காவிட்டால் குறுக்குத்துறை ஆற்றில் வெள்ளம் பந்தல் மண்டபத்தைச் சூழ்ந்து ஓடுகையில் அதன் மேற்கூரையில் மீது பதைத்தபடி நிற்கும் ஆட்டுக்குட்டியை நான் மனக்கண்ணில் பார்த்திருக்கவே முடியாது.
தமிழின் சிறந்த நூல்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளன. அல்லது மிகச்சிறந்த நூலகத்தில் நான் வசிக்கிறேன்.
“இலக்கியம் வாழ்க்கைக்குச் சோறு போடாது; ஆனால் சோற்றால் மட்டுமே நிரம்பி விடாத ஏதோ ஒன்று உனக்குள் இருக்குமாயின் அந்த இடத்தை இலக்கியம் நிரப்பும்”
புதுமைப்பித்தன், பிரமிள், நகுலன், சுந்தரராமசாமி
இன்றைய வாசிப்பிற்குப் பெரிதும் தடையாக இருப்பது நேரமின்மையும் கவனச்சிதறலும்தான். கூடுதலாக இன்னொன்றை சொல்வதானால் இலக்கற்று இருப்பதும் திட்டமிடுதல் குறைபாட்டையும் சொல்வேன்.
நூல்களின் மேப்
ஜெயமோகன், நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன்
ஜெயமோகன், ஐஸக்பாஸ்விங்கர், அசோகமித்திரன், புதுமைப் பித்தன், பஷீர்
ஒருபோதும் முகத்தாட்சண்ய வாசிப்பில் நேரத்தை வீணாக்காதீர்கள்.
நேரம் ஒதுக்கி, கவனம் குவித்து, அத்தனை நுட்பங்களையும் அள்ளும் ஆவேசத்துடன் வாசிக்க வேண்டிய ஒன்று. ஒருவகையில் அதுவும் வேலைதான். அதற்குரிய அக்கறையுடன் புத்தகங்களை அணுகுங்கள். எந்த நூலையும் முன்முடிவுகளற்று வாசியுங்கள், உங்களை முட்டாளடிக்க வேண்டுமெனும் நினைப்பில் எந்த மகத்தான படைப்பாளியும் கிளம்பிவரவில்லை என்பதை நம்புங்கள். இறுதியாக, வாசித்த புத்தகங்களைப் பற்றி சிறு குறிப்பெனும் எழுதுங்கள்.
எவ்வளவு கற்றுக்கொள்கிறோமோ அவ்வளவு பெற்றுக்கொள்கிறோம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
எல்லாவற்றிற்கும் மேலாக எலிகளைப் பெருமளவில் வேட்டையாடி, காற்றில் சாடி வெட்டுக் கிளிகளை அழித்து. நெற்பயிரை அழிக்கும்ஒருவகை தண்டுப்புழுக்களை உண்டு விவசாயிகளின் பெரும் தோழனாகவும் விளங்குவது வவ்வால். காடுகளில் சில வகைத் தாவரங்கள் பூச்சிகளால் அழியாமல் இருக்க வவ்வால்கள் உதவுகின்றன. வவ்வால்களின் எச்சங்கள் மூலம் மட்டுமே பரவக்கூடிய தாவரங்களும் அதிகம் உண்டு. சிலவகை வவ்வால்கள் கொசுக்களைக்கூடக் கட்டுப்படுத்துகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கடவுளின் படைப்பில் அமானுஷ்யமானது என்றோ தீமையின் வடிவம் என்றோ எந்த உயிரும் இல்லை. படைப்புச் சுவைக்காக படைப்பாளிகள் மேற்கொள்ளும் இத்தகு நரிதந்திரங்கள் கைவிடப்பட்டேஆக வேண்டும்.
லண்டனில் வசிக்கும் சிவாகிருஷ்ணமூர்த்தி, எனும் இளம் எழுத்தாளர் ஒரு சிறுகதை எழுதியுள்ளார். மறவோம் என்பது தலைப்பு. பகுதி நேரமாக பீட்ஸா டெலிவரி செய்யும் இந்திய மாணவனும் உலகப் போர்க்கால கவிதைகள் கடிதங்கள்மீது ஆர்வம் கொண்ட முதியவரும் உரையாடும் ஒரு சிறந்த கதை.
“அவர்களுக்கு என்றும் வயதாவதில்லை. எஞ்சி/மிஞ்சிய நமக்குத்தான் வயதாகப் போகிறது”
‘அடடே கவிதைகள் வாசிக்கிற தம்பியா நீ’
கோவைக்கு
விஜயாபதிப்பகத்தில்
வாசிக்கையில் கவிதைகள் உருவாக்கும் அந்தரவெளியும், அக்கணத்துத் தன்னழிவும், உள்ளத்தில் நிகழும் உணர்வு மாற்றங்களும் தொடர்ந்து கவிதைகள் மீது பெரும் வியப்பை உருவாக்கிக் கொண்டே
இருக்கின்றன
வாசிக்கையில் என்னை ஏதோ செய்கிற, நான் வளர்கையில் கூடவே வளர்கிற, வாழ்வின் உச்சத் தருணங்களில் நினைவில் வந்துக் குதிக்கின்றக் கவிதைகளைத் தேடித்தேடி சேகரித்து என் பிரியக் கவிதைகளாகக் கோர்த்துக் வைத்துக்கொள்ளும் வழக்கமுடையவன்.
சொற்களால் எத்தனை விளக்கினாலும் கை நழுவிச் சென்று இன்னொருக் கிளையில் அமர்ந்து கொள்ளக்கூடியக் கவித்துவம் எனும் அம்சமுடையக் கவிதைகளைத்தான்.
அந்திக்கருக்கலில் இந்ததிசைதவறிய பெண் பறவை தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய் அலைமோதிக் கரைகிறது. எனக்கதன் கூடும் தெரியும் குஞ்சும் தெரியும் இருந்தும் எனக்கதன் பாஷை புரியவில்லை. - கலாப்ரியா
வாழ்ந்துக் கெட்டவனின் பரம்பரைவீடு, நினைவில் காடுள்ள மிருகம், சிறகிலிருந்து உதிர்ந்த இறகு, காலில்காட்டைத் தூக்கிக்கொண்டு அலையும் வண்ணத்துப்பூச்சிகள், யாரோ ஒருவனென எப்படிச் சொல்வேன், கல் வெள்ளிக் கொலுசு கற்பனையில் வரைந்த பொற்பாத சித்திரம்,
மெய் வருத்தம் பாராத, பசி நோக்காத, கண் துஞ்சாத உழைப்பு அவனுடையது.
‘லிவிங் டெக்ஸ்ட் புக்’
நாளிதழ்கள்அறிவைச் சுமந்து வருபவை. தினம் தினம் தன்னைப் புதிய விஷயங்களால் புதுப்பித்துக் கொள்பவை. நாளிதழைச் சுமந்து வருபவன் நமக்கு அறிவைச் சுமந்து வருகிறான். நாம் இந்த உலகோடுச் சமகாலப் பிரக்ஞையோடு உறவாட வகை செய்கிறவன் அவனே என்பது நம்மில் பலருக்குப் புரிவதில்லை.
'Rain: What a Paperboy Learned About Business'
எழுத்தாளன் க.சீ.சிவக்குமார்
வண்ண கலர் கோலப்பொடிகள், ஜிகினாக்கள், கோலப்புத்தகங்கள் சகிதமாக நடுஇரவில் வீட்டு முற்றத்தில் இறங்கி வெள்ளி முளைக்கும் வரை தெருவடைக்க கோலமிடுவார்கள். கோலத்தில் இறுதியில் இரண்டு பிழைகளுடன் ஹேப்பி பொங்கல் எழுதி ஒரு பயல் நடமாட முடியாதவாறு காவலுக்கு ஒரு சிறுமியையும் போட்டு விடுவார்கள்.
ஒரு பக்கம் பொங்கல், மறுபக்கம் பரப்பரிசி, இன்னொரு பக்கம் சுட்ட பனங்கிழங்கின் சுவைமணம்.
ஆஸ்டின் க்லீயானைப்
ஒரு கேலி சித்திரக்காரர் ப்ளஸ் எழுத்தாளர்.
கர்ட் வான்கர்ட், ஓ.வி. விஜயன், மதன் வரை உதாரணமாக சொல்லலாம்.
ஸ்டீல் லைக் அன் ஆர்ட்டிஸ்ட்
ப்ளாக் அவுட்
ஒரு செய்தித்தாள் செய்தியில் இருக்கும் தேவையான வார்த்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு மீத வார்த்தைகளை கறுப்பு மசியால் பூசி அழித்து கவிதைகளை உருவாக்குவது.
கலை என்பது திருட்டே
நீங்கள் எதில் ஈர்க்கப்படுகிறீர்களோ அதை இன்னொன்றாக மாற்றுங்கள். உங்கள் ரசனைக்கேற்ப அதை மேம்படுத்துங்கள். சுவாரஸ்யமான அம்சங்களைக் கொண்டு முற்றிலும் புதிய கலவையை உருவாக்குங்கள்.
அந்த ஸ்டைலின் பின்னேயுள்ள சிந்தனையை காப்பியடிக்க முயலுங்கள்.