Kindle Notes & Highlights
எப்போதும் வாசித்துக்கொண்டே இருங்கள். வாசிக்க நேரம் வாய்க்காவிட்டாலும் உங்களைச் சுற்றி எப்போதும் புத்தகங்கள் இருந்துகொண்டே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஏதேனும் மிக சுவாரஸ்யமாக உங்களைக் கவர்ந்தால் அதை ஒரு ஸ்க்ராப் ஃபைலில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். ஒரு துண்டுச் சீட்டு, நாளிதழ் கிழிசல், பஸ் டிக்கெட்டின் பின்புறம் கிறுக்கியது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், சேமித்துக்கொள்ளுங்கள். பிற்பாடு நீங்கள் ஸ்க்ராப் ஃபைலை புரட்டும்போது உங்களுக்குள் புதிய திறப்புகள் உருவாகலாம்.
உங்களுக்கென்று தனித்த ஸ்டைல் உருவாகும் வரை நீங்கள் சற்று போலி செய்வதில் தவறொன்றுமில்லை.
போலி செய்வதில் இருக்கும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் எந்த ஒரு நல்ல கலையையும் முழுமையாக காப்பி செய்து விட முடியாது என்பதுதான். நீங்கள் ஒன்றினால் ஈர்க்கப்பட்டு அதை போலி செய்யும்போதே அது வேறொன்றாக இறுதியில் உருவாகி நிற்கும். உடனடி
உதாரணமாக, ஹாரிபாட்டரின் அடுத்த பாகத்தை தங்களுக்கு பிடித்தமாதிரி தாங்களே எழுதிக்கொள்ளும் வாசகர்கள் உண்டு. இது படைப்பூக்கத்திற்கு நல்ல பயிற்சி. எதை எழுதினாலும் அல்லது உருவாக்கினாலும் இதை இன்னும் மேம்படுத்த என்ன வழி என சிந்தியுங்கள்.
நீங்கள் நெருங்கிப் பழகும் ஐந்து நபர்களின் சராசரி வருமானம்தான் உங்களின் வருமானமாக இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட
நீங்கள் நெருங்கிப்பழகும் நண்பர்கள், புத்தகங்கள், ரசனைகள் ஆகியவற்றின் மீது கவனமாக இருங்கள். விரும்பிய உலகில் நீங்கள் வாழ வாய்க்கவில்லையெனில் உங்களுக்கேற்றபடி உங்கள் உலகை வடிவமைத்துக்கொள்ளும் உரிமையும் வசதியும் உங்களுக்குள்ளதை மறக்கவேண்டாம். ஓர் அறையிலுள்ள மனிதர்களில் மிகச் சிறந்தவர்களைக் கண்டுபிடியுங்கள். ஒருவேளை அது நீங்களாக இல்லாதபட்சத்தில் அந்த சிறந்த மனிதனோடே இருந்து விடுங்கள் என்றார் ஹெரால்ட் ராம்ஸ். ஒருவேளை நீங்கள் தேடும் சிறந்த மனிதர் அந்த அறையில் இல்லையெனில் அடுத்த அறைக்கு அடுத்த அறைக்கு என உங்கள் தேடலைத் தொடருங்கள்.
எப்போதும் இரண்டு வகையான மேஜைகளைப் பயன்படுத்துங்கள். ஒரு மேஜையில் புத்தகங்கள், தாள்கள், பென்சில்கள், வர்ண பேனாக்கள் உள்ளிட்டவைகள் மட்டும் இருக்கட்டும். எக்காரணம் கொண்டும் எலெக்ட்ரானிக்ஸ் டிவைஸ்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இது ஐடியாக்களை உருவாக்கும் மேஜை. இங்கே நீங்கள் சிந்தித்தவற்றை பேப்பரில் கிறுக்கவோ, வரையவோ செய்யுங்கள். யோசிக்கும்போது ஒருபோதும் கவனச்சிதறல் ஏற்படுத்தும் செல்போனோ, லேப் டாப்போ அந்த மேஜையில் இருக்கக்கூடாது. இன்னொரு மேஜை டிஜிட்டல் மேஜை. நீங்கள் சிந்தித்தவற்றிற்கு எழுத்து வடிவம் கொடுக்க கணிணியைப் பயன்படுத்துங்கள்.
தஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், துர்கனேவ்லாம்
நாஞ்சில்நாடன், புதுமைப்பித்தன், ஜேகேல்லாம்
புதுமைப்பித்தன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன், தி.ஜானகிராமன், அழகிரிசாமி, ராஜநாராயணனெல்லாம்
வாசிக்கும் பழக்கம் உள்ளவன் எந்த சபையிலும் தன் தலையை தொங்கவிட்டு அமர்ந்திருக்க வேண்டியதில்லை.
உலகிலேயே மிக அதிகம் வாசிக்கும் பழக்கம் உள்ள நாடு இந்தியா.