More on this book
Kindle Notes & Highlights
by
நிர்மல்
Read between
July 6 - August 19, 2021
கொலை   செய்யப்பட்டது   யுகோஸ்லாவியா
யுகோஸ்லாவியா என்றால் தெற்கு ஸ்லாவிய மொழி பேசும் மக்கள் என அர்த்தம். இவர்கள் ஒரு பெரிய இனக் குழுவாக கருதப்படுகிறவர்கள். இவர்களுக்குள் சிறு சிறு மொழி குழுக்களும் உண்டு. அதாவது தென் ஸ்லாவியர்களுக்குள் செர்பிய மொழிக் குழு, குரோஷிய மொழிக் குழு, ஸ்லாவிய மொழிக் குழு, மாண்டினீக்ரிய மொழிக் குழு, போஸ்னிய மொழிக் குழு, மாசிடோனிய மொழிக் குழு என்பது போன்ற சிறு மொழிக் குழுக்களும் உண்டு. இவர்களுக்கென தனித் தனி மொழிகளும் உண்டு, அவர்களுக்கென தனி நிலப்பரப்பும் உண்டு. இவர்கள் சரித்திரப் பூர்வமாக மிக நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்.
இவர்களுக்குள் இஸ்லாம், கத்தோலிக்கம், ஆர்தடாக்ஸ் கிறுஸ்துவம் என்கிற மூன்று மதங்களும் உண்டு. இந்த மொழிக் குழுக்கள் அனைத்தும் தென் ஸ்லாவிய மொழிக் குடும்பம் என அழைக்கப்படும்.
இந்த ஆறு இனங்களை ஒன்று சேர்த்து தன் முழு திறமையாலும், ஆற்றலாலும், ஒரே தேசமாக்கியவர் தான் மார்ஷல் ஜோசப் டிட்டோ.
மார்ஷல் ஜோசப் டிட்டோ, கம்யூனிஸ்ட் கொள்கையால் ஈர்க்கப்பட்டு சோவியத் யூனியனை மாதிரியாகக் கொண்டு போஸ்னியா மற்றும் ஹெர்ஜிகோவினா, குரோஷியா, மாசிடோனியா, மாண்டினீக்ரோ, ஸ்லோவேனியா, செர்பியா இனக் குழுக்களின் பகுதியை இணைத்து அதோடு வோஜ்வோடினா மற்றும் கொசோவா ஆகிய சுயாட்சி பகுதிகளை ஒன்று சேர்த்து ஜனவரி 31, 1946இல் "ஃபெடரல் பீப்புள்'ஸ் ரிபப்ளிக் ஆஃப் யுகோஸ்லாவியா" என்கிற தேசத்தை உருவாக்கினார். சோவியத் யூனியனும் இப்படித்தான் பல தேசிய குழுக்கள் ஒன்றிணைந்த ஒன்றியமாக உருவானது.
மிலோரட் பாவிச்(Milorad Pavić) எழுதிய 'The Dictionary of Khazar'
கருத்து ஒற்றுமை இல்லாத வெவ்வேறு இனத்தினரை சட்டத்தாலோ வேறு ஏதாவது உக்தியாலோ இணைத்தால் அந்த உக்தி காலாவதியாகும் பொழுது ஏற்படுகிற பிரிவு  துயரமாகவே இருக்கும்.
Memorandum of the Serbian Academy of Sciences and Arts என்கிற குறிப்பாணைதான் யுகோஸ்லாவியா சிதறுண்டதற்கும், அப்போது நடந்தேறிய வன்முறைக்கும் மூலகாரணம் என சொல்கிறார்கள்.
மாற்றங்கள் இப்படித்தான் உருவாகும். கலை, கலாச்சார பண்பாட்டின் மூலமே முதலில் மாற்றங்கள் நிகழும். அதை அறிவுதளத்தில் உள்ளவர்கள்  வடிவமாக்குவார்கள். அரசியல்வாதிகள் அந்த மாற்றத்தின் மீதான நிலைப்பாட்டைத்தான் முன்னெடுப்பார்கள்.
யுகோஸ்லாவியம் எனும் தேசியக் கொள்கை செர்பியர்களுக்கே சாதகமாக இருக்கிறதென மற்றவர்கள் நம்பினார்கள். ஆனாலும் மார்ஷல் டிட்டோ அனைவரையும் சமமாக நடத்தப்படுவதாக கூறி வந்தார். இந்த நிலையில், உள் நாட்டில் நடந்த சிறு சிறு கிளர்ச்சிகளை அடக்கினாலும் அது யுகோஸ்லாவிய எதிர்காலத்தை குறித்த சந்தேகத்தை விதைத்தது. யுகோஸ்லாவிய தேச முழக்கமான 'Brotherhood and Unity' (சகோதரத்துவமும் ஒற்றுமையும்) என்பது சாத்தியமில்லை என மெல்ல உணர துவங்கிய மார்ஷல் டிட்டோ, 1968ஆம் ஆண்டு யுகோஸ்லாவிய அரசியல் அமைப்பில் மாற்றங்களை கொண்டு வந்தார். மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டது. அதிகாரப் பகிர்வு அமலானது. சந்தைப் பொருளாதாரமும் கூட
  
  ...more
யுகோஸ்லாவிய சிதறல் என்பது இப்படி பல தேசமாக பிரியும் முறையில் பலவிதங்களில் மாறுபட்டது. இது எந்த ஒரு வெளிநாட்டின் உந்துதல் இன்றி நடந்தேறியது. தனியாக இதற்காக போராட என ஆயுதம் ஏந்திய போராட்ட இயக்கங்களும் கிடையாது. குறிப்பிட்ட வளங்களை முன்வைத்து அதை சொந்தம் கொண்டாட நடந்ததும் இல்லை. இது முழுக்க முழுக்க அதிகாரத்தில் உள்ளவர்களாலேயே அரங்கேற்றப்பட்டது. ஆளும் அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டு மாற்றத்தாலே நடந்தது. இதையெல்லாம் பார்க்கும் பொழுது, இந்த அளவுக்கு சகிப்புத் தன்மையும், மற்ற இன குழுக்கள் மீது வெறுப்பும் துவேசமும் மனிதர்களுக்குள் சாத்தியமா என்கிற அதிர்ச்சியையும் தருகிறது.
டிட்டோவின் மரணத்திற்கு பிறகு செர்பிய தேசியவாதம் வெறித்தனமாக மேலோங்கியது. அவர்கள் சிறுபான்மையினராக இருக்கும் இடங்களில் தாங்கள் நசுக்கப்படுகிறோம் என்பதை ஊதி பல மடங்கு அளவில் பெரியதாக காட்டினார்கள்.
மிலோசெவிக் “இனி உங்களை யாரும் அடிக்க முடியாது” என செர்பிய மக்களிடம் பயம் கலந்த தொனியில் சொன்ன ஒற்றை வாக்கியம்  பிரளயமாக வெடித்தது. செர்பிய மக்கள் ஒன்றிணைந்து போராட ஆரம்பித்தனர். ஒவ்வொன்றாக மற்ற மாகாணங்களில் பிரிந்து போக ஆரம்பித்தார்கள். யாருக்கு எவ்வளவு இடம் என்கிற போட்டியில் சண்டையிட்டார்கள். வளம் கொண்ட இடங்கள் மீது ஆதிக்கத்தை நிலை நிறுத்த போர் புரிந்தார்கள். நகரங்களை முற்றுகையிட்டு வதைத்தார்கள், நகர மக்களை நேர்த்தியாக ஒதுக்கி இன ஒழிப்பு கொலைகள் செய்தனர். ஆயிரமாயிரம் மக்களை இடம்பெயரச் செய்தார்கள். கூட்டம் கூட்டமாக கொலைகள், இன அழிப்பு, கும்பல் பாலியல் பலாத்காரங்கள் அரங்கேறின.
  
  ...more
நொறுங்கிப் போன கவிதைகளின் தேசம் சோமாலியா
பண்டைக் காலம் முதல் கடல் வணிகத்தின் இணைப்புச் சங்கிலியாக இந்த நிலப்பரப்பு இருந்திருக்கிறது. இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான வர்த்தகத்தில் சோமாலியா நிலப்பரப்பு மிக முக்கியமானது. அக்காலத்தில் சோமாலியாவை அரேபியர்கள் நிர்வகித்து வந்தனர். பின்னர் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் இத்தாலி இந்த நிலப்பரப்பை தங்களுக்குள் பிரித்து காலனியாக்கி சக்கையாக்கினர். 
ச்சூ - என்றல் போ (ச்சூ என நாம் விலங்கினத்தை விரட்ட பயன்படுத்தும் ஒலி), மால் என்றால் பால் அதாவது போய் பால் கற என்கிற அர்த்தம். இந்த 'சூமால்' தான் பின்னர் சோமாலியா ஆனதாம். கால் நடைகள் வளர்க்க தகுந்த நிலப்பரப்பு. இன்னும் அகண்ட பாலைப் பகுதி. செங்கடலும் இந்தியக் கடலும் தரும் வளமான மீன்கள், காலம் காலமாக இந்த இயற்கை வளத்தை அளவாக பகிர்ந்து வாழத்தெரிந்த  அறிவான, வலுவான மக்கள். The most tall and handsome people எனக் குறிப்பிடப்பட்ட இனக்குழுக் கூட்டமே சோமாலி மக்கள்.
கால்நடை வளர்ப்பு, அவைகளை ஏற்றுமதி செய்வதில் புரட்சி செய்தனர். முக்கியமாக சோமாலியா ஆடுகள், மாடுகள் மற்றும் ஒட்டகங்களின் இறைச்சி சவுதி, துபாய், ஓமன் போன்ற மத்திய ஆசிய அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது சோமாலியா.
இங்கு எல்லாமே கவிதைகள்தானாம். நிகழ்வுகளை கவிதைகளாக்கி உணர்வுகளை வார்த்தைகளுக்குள் பூட்டி கவிதைகளையே வரலாற்று ஆவணமாக்கிக் கொள்வார்களாம். 
ராணுவத்தின் உதவியோடு  ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த சாத் பர்ரெ, சோமாலியா இனி சோஷியலிச நாடாக மாறும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து புதிய சோமாலியா பிறந்தது. பல்வேறு இனக்குழுக்களாக பிரிந்திருந்த சோமாலியாவை, இனக்குழு உணர்வை ஒதுக்கி ஒற்றை சோமாலியாவாக மாற்ற பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார் சாத் பர்ரெ.
அகண்ட சோமாலியாவின் கனவு என்பது மன்னர் காலத்து அல்லது புராண காலத்து எல்லை பகுதிகளை மீட்டெடுக்க எடுக்கும் முயற்சி ஆகும். இதைப் போல பல நாடுகளிலும் இந்த கனவு உண்டு.
நிலங்களையும் வளங்களையும் குறித்த ஏற்றத்தாழ்வு நிலவும் நாடுகளில் அமைதி நிலவுவதில்லை, அப்படியே நிலவினாலும் அவை நீடிப்பதில்லை.
சோமாலியாவில் எல்லாமே கவிதைகள் தான். திட்ட, மகிழ, அழ, காதலிக்க ... அதிலும்  போத்தேரி என்கிறவன் தன் காதலி ஹோதானுக்கு எழுதிய காதல் கவிதைகள் அவ்வளவு புகழ் பெற்றதாம்.  Bodheri தன் காதலி  Hodhan க்கு எழுதிய காதல் கவிதை
எந்த நாட்டிலும் அடுத்து தலை தூக்க போவது சிறு குழுக்களின் ஆதிக்கமே. எனக்கு சொர்க்கமே கிடைத்தால் கூட என் இனத்தை விட்டு விட மாட்டேன் என்பதே அவர்களின் உணர்வாக மாறியது. இனக்குழுக்கள் உலகெங்கும் எல்லா சமூகங்களிலும் இருப்பதுதான். அதனால் இனக்குழு என்பது பிரச்சனை அல்ல. அரசியல் அதிகாரத்தின் மூலம் சில குறிப்பிட்ட இனக்குழுக்களுக்கு காட்டும் தனி முக்கியத்துவமும் மற்றவர்களை ஓரம் கட்டுவதுமே முக்கிய பிரச்சனை. அதிகாரத்தை வைத்து நில வளங்கள் மற்றும் வேலை வாய்ப்பை தங்களுக்குள் வைத்துக் கொண்டு சிலரை ஒதுக்குவதே இனக்குழு பிரச்சனையின் மூலம். இதுதான் பகை உணர்வுகளும் வன்முறைகளும் உருவாவதற்கு காரணங்கள்.
இப்படியான பகை உணர்வை அகற்றி ஒரே சோமாலி என்கிற உணர்வுக்குள் கொண்டு வர  கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தையும் குரானையும் கலந்த Scientific Socialism என ராணுவ சர்வாதிகார அரசு முயன்றது. அந்த அரசு தன் தவறான புரிதலாலும், கொள்கையை செயல்படுத்திய விதத்தினாலும் அதில் அங்கம் வகித்தவர்களின் பேராசையினாலும் அவர்கள் முன்னெடுத்த நிர்வாக, பொருளாதார மற்றும் வெளியுறவு முடிவுகளாலும் அரசாட்சியை தொடர முடியாமல் வீழ்ந்தனர். 
Somalia as a Nation has ended in a failed state. ஒரு தேசம் என்பது நிலப்பரப்பல்ல, அது அங்கு வாழும் மனிதர்களின் கனவு. அந்த கனவை மிக நேர்த்தியாக எடுத்துச் செல்ல முடியாமல் உடைந்து போனது சோமாலியா.
மதத்தாலும் சோஷியலிச சிந்தனைகளாலும் உந்தப்பட்டு சோமாலியாவின் வரலாற்று புரிதல் இல்லாமல் முன்னெடுத்த எல்லா மாற்றங்களும் தோல்வியில் முடிந்தது. 
சோமாலியாவின் கடற்பகுதிக்குள் பன்னாட்டு மீன் பிடி கப்பல்கள் உட்புகுந்து சோமாலியாவின் மீன்களை வாரிச் சென்றன. அரசு இல்லாத நிலையில் மீனவர்களும் ஆயுதங்களை எடுத்தார்கள். தங்கள் எல்லைக்குள் வரும் கப்பல் ஒன்றை சிறை பிடித்தனர். கப்பலை மீட்க பன்னாட்டு நிறுவனம் பணம் தந்தது. இதுவே மெல்ல மெல்ல சோமாலியர்கள் கடற்கொள்ளையர்களாக உருவாகக் காரணமானது.
மரம் அழித்தல், புல்வெளிகள் அழித்தல், கடல் வளம் பறிபோதல் என சோமாலியாவின் இயற்கை வளங்கள் எந்த முறையுமின்றி சூறையாடப்பட்டன. சோமாலியர்கள் இருப்பை ஏகே 47களும் சிறு இனக்குழுக்களுமே முடிவு செய்தன. மழைப்பொழிவு இன்னும் இன்னும் குறைந்தது வறட்சியை எதிர் கொள்ள முடியாமல் திணறினர். இதன் விளைவு பட்டினிச் சாவுகள் அதிகரித்தன. பட்டினி சாவுகளுக்கும் உள் நாட்டு போருக்கும் இடையில் சிக்கி, தீர்க்க முடியாத சுழற்சியில் சிக்கிக் கொண்டனர். 
சோமாலியாவை உடைத்து சோமாலி லேண்ட் என்கிற புதிய நாடு பிறந்தது. அகண்ட் சோமாலிய கனவு, கனவாகி போனது, சுதந்திரம் அடைந்த பின் இருந்த சோமாலியா நிலப்பகுதியை காட்டிலும் மிக குறைவான நிலப்பகுதிகளை கொண்ட சோமாலியாவாகி போனது. 
கொசோவா - செர்பியர்களின் போர்க்களம்
1912ல் நடந்த முதலாவது பால்கன் போரில் செர்பியர்கள் துருக்கிய சாம்ராஜ்யமான ஒட்டமான் சாம்ராஜியத்தினரை விரட்டி அடித்தனர். பால்கன் பகுதியிலிருந்து துருக்கியர்களை வெளியேற்றிய பின் நடந்த பேச்சுவார்த்தையில் பால்கன் நிலப்பரப்பை பல நாடுகள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். பால்கன் பகுதியில் வாழும் பல்வேறு இனக்குழுக்களும் அந்த நிலப்பகுதியில் தங்களுக்கென சுய ஆட்சியோடு கூடிய நிலப்பரப்பை பிரித்துக் கொண்டனர். அல்பேனியர்கள் அவர்களுக்கென  தனி நாட்டை உருவாக்கினார்கள். ஒட்டமான் சாம்ராஜ்யத்தில் இருக்கும் பொழுது அல்பேனியர்கள் பெரும்பாலானோர் இஸ்லாமியத்தை தழுவி இருந்ததால், அல்பேனியா ஐரோப்பாவின் இஸ்லாமிய நாடாகியது.
செர்பியாவும் தனி தேசமானது. இதே போல் கிரேக்கம், போஸ்னியா, மாண்டினீக்ரோ மற்றும் பல்கேரியாவும் தங்களின் நிலப்பகுதியை உறுதி செய்து கொண்டனர். இந்த நிலப்பகிர்வின் பொழுது கொசாவாவை செர்பியர்கள் தங்களுடன் எடுத்துக் கொண்டனர் - அல்லது அளிக்கப்பட்டது. அல்பேனிய இஸ்லாமியர்கள் அதிகமாக இருந்தாலும் கூட கொசோவா நிலப்பகுதியை செர்பியர்கள் தங்களதாக்கினர். அதாவது அல்பேனியர்களுக்கென தனி நாடு, அது அல்பேனியா. ஆனால்  அதன் அருகிலே இருக்கும் நிலப்பரப்பில் வாழும் அதே அல்பேனியர்கள் அதிகம் உள்ள கொசோவா செர்பியாவிடம் இணைக்கப்பட்டது. இதுதான் சிக்கலின் ஆரம்பம்.
கொசாவாவில் அல்பேனிய இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்ந்து வந்ததாலும், ஒட்டமான் சாம்ராஜ்ய படையெடுப்புக்கு முன் அது செர்பியர்கள் வாழ்ந்த பூமியே. 12 ஆம் நூற்றாண்டுகள் வரை கொசாவாவில் வாழ்ந்த  செர்பியர்களின் மத அடையாளங்கள், மொழி, இன அடையாளச் சின்னங்கள் பல கொசோவாவில் இருக்கிறது. செர்பியர்களுக்கோ கொசோவா தன் பண்டைய பாரம்பரியத்தின் நினைவிடம், தன் அடையாளத்தின் முக்கிய நிலப்பரப்பு.
For every Nationalism there will be a counter Nationalism. ஏனென்றால் தேசிய உணர்வு என்பது மிக எளிதில் மக்களை ஒன்றுபடுத்தக் கூடிய உணர்வு. அது மிக எளிதாக முன் பின் தெரியாத நபர்களை இணைக்கும், போராட வைக்கும்.... அந்த இணைப்பு சிலரையோ, பலரையோ தனிமைபடுத்தக் கூடும். அதேதான் கொசோவாவிலும் நடந்தது.
பெரும்பான்மை செர்பியர்களுக்கு எதிராக அல்பேனிய மக்களை ஒன்றுபடுத்தியது அல்பேனிய தேசிய உணர்வு. அவர்களை செர்பியர்களுக்கு எதிராகப் போராட வைத்தது அல்பேனிய தேசியவாதம். எந்த வகையிலும் செர்பிய அதிகாரம் வளரக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர் அல்பேனியர்கள். செர்பியர்களுக்கோ அது பறிபோன நிலம். ஆனால் கொசோவாவில் வாழும் அல்பேனிர்களுக்கோ அது தாங்கள் அரசியல் அதிகாரத்தோடு வாழக் கூடிய பாதுகாப்பான ஒரு இடம். அல்பேனிய தேசத்துக்கோ கொசோவா அகண்ட அல்பேனியக் கனவை நினைவாக்கும் நிலம்.
1920ஆம் ஆண்டில் பால்கன் பகுதியிலிருந்து ஓட்டமான் சாம்ராஜ்யத்தை விரட்டியடித்த பின் அல்பேனியர்கள் நிலப்பகுதியை செர்பியர்களுக்கும் பல்கேரியர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வந்த போது - அமெரிக்க ஜனாதிபதி Woodrow Wilson அல்பேனிய நிலப்பகுதியை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர், அல்பேனியர்கள் ஐரோப்பாவின் மூத்த இனக் குழு அவர்களுக்கென தனி நாடு வேண்டுமென வாதாடி அல்பேனியா எனும் நாடு உருவாகக் காரணமாக இருந்தார் என்பதால் அல்பேனியர்களுக்கு அமெரிக்கா மீது எப்போதும் செம காதல் இருந்து கொண்டே இருந்தது. தங்களுக்கென ஒரு நாடு உருவாக்கி தந்தது அமெரிக்கா என்கிற பாசம் உண்டு
  
  ...more
செக்கஸ்லோவாக்கியா - வெல்வெட் விவாகரத்து
செக்கஸ்லோவாக்கியா காணாமல் சென்று இரு புதிய தேசங்களாக பிரிந்த அந்த நிகழ்வைத்தான் வெல்வெட் டிவோர்ஸ் என்கிறார்கள்.
இணைப்பால் காணாமல் போன கிழக்கு ஜெர்மனி
முதலாம் உலகப் போர் 1919ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அமெரிக்கா, பிரான்சு, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து கூட்டணி ஜெர்மனிய கூட்டணியை தோற்கடித்தது. தோற்கடித்த ஜெர்மனியை என்ன செய்யலாம் ? எப்படி இன்னோரு முறை ஜெர்மனியர்கள் ஐரோப்பாவை கைப்பற்றாமல் தடுப்பது என்பதைக் குறித்து செயல் திட்டம் தயாரிக்கப்பட்டது. Treaty of Versailles என்கிற ஒப்பந்தம் ஜெர்மனியர்கள் மீது திணிக்கப்பட்டது. அதன் மூலம் ஜெர்மானியர்கள் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பொருளாதாரத் தடை, ராணுவத் தடை என பல தடைகள் போடப்பட்டது.    ஜெர்மனியின் ஆப்பிரிக்க காலனிகளை பிரான்சும் இங்கிலாந்தும் பிடிங்கிக் கொண்டன. இதைத் தவிர போருக்கான செலவு
  
  ...more
ஒருவிதத்தில் முதலாம் உலகப் போரின் முடிவில் போடப்பட்ட Treaty of Versaillesசே அடுத்த உலகப் போருக்கு காரணமாக இருந்தது. பொய்களை மிக நேர்த்தியாக சொல்வதும், அந்தப் பொய்களை ஊடகங்கள் மூலம் மீண்டும் மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதும்தான் ஹிட்லரின் உத்தி. கிட்டத்தட்ட நம்மூர் பணமதிப்பிழப்பு விவகாரத்தை ஊடகங்கள் எப்படி கையாண்டதோ அதைப் போலத்தான் இதுவும். பணமதிப்பிழப்பு, இந்தியாவை வல்லரசாக்குமென அறிவாளிகள் பலர் எப்படி இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்களோ, அதுபோல் ஹிட்லரின் எல்லாவித கோமாளித்தனத்தையும் ஜெர்மானிய மக்கள் நம்பினார்கள். ஏனென்றால் அந்த சூழலுக்கு ஏற்ற பொய்கள் அவை.
எந்த நாட்டிலும் அவசரச் சட்டமென்பது மக்களாட்சிக்கு எதிரானது. எந்த ஒரு காரணங்களைக் கொண்டும் அதிகாரம் முழுவதையும் தனி நபர் எடுத்துக் கொள்ளக் கூடிய சூழலை  சந்தேகத்தோடுதான் பார்க்க வேண்டும். 
இந்த இரண்டாம் உலகப் போரின் வெற்றிக் கூட்டணி  நாடுகளில் ரஷ்யா சித்தாந்த ரீதியாக மற்ற மூவரைக் காட்டிலும் வேறுபட்டு கம்யூனிஸம் மற்றும் சர்வாதிகார ஆட்சி முறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது. மற்றவர்கள் சந்தை பொருளாதாரம், முதலாளித்துவம் மற்றும் மக்களாட்சியை தேர்ந்தெடுத்துக் கொண்டனர். இரண்டாம் உலகப் போருக்கு முன் பாசிசமும், நாசிசமும் ஒருங்கிணைந்து செலுத்திய அதிகாரம் ஒருபுறமும், அவற்றை எதிர்க்கும் நாடுகள் மறுபுறமும் இருந்து கொண்டு ஆதிக்க போட்டி நடத்தினர். ஆனால்  இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு பிறகு நாசி ஜெர்மனியும், பாசிச இத்தாலியும் தங்கள் ஆதிக்கத்தை இழந்தனர். உலக அரசியலில் இனி இவர்களை வீழ்த்திய
  
  ...more
இந்த பொருளாதார தேக்க நிலை சோவியத் யூனியன் எனப்படும் கூட்டமைப்பில் பல பிரச்சனைகளைக் கொண்டு வந்தன. இந்த நேரத்தில்தான் மிகேல் கோர்ப்பசேவ் எனும் தலைவர் சோவியத் ரஷ்யாவிற்கு தலைமை பொறுப்பேற்றார். கோர்ப்பசேவ் சோவியத் ரஷ்யாவின் சோஷியலிச முறையில் சீர்திருத்தம் கொண்டு வந்தால் மீண்டும் சோவியத் யூனியன் பலம் பெறும்  என நம்பியவர். குறிப்பாக, அணு ஆயுதம் மற்றும் பனிப்போரைக் குறைக்கக் கூடிய பல முடிவுகளை எடுத்தார். 1989ல் வார்சாவ் உடன்படிக்கை செய்து கொண்ட நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் இனி சோவியத் யூனியன் தலையிடாது, அவரவர்கள் நாட்டின் தலைவிதியை அவர்களே எழுதிக் கொள்ளலாம் என்கிற முக்கிய மாற்றமும் வந்தது.
அன்று  கிழக்கு ஜெர்மானிய அதிகாரி ஒருவர் கலந்து கொண்ட ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த பயணத் தடையைக் குறித்துக் கேள்வி கேட்கப்பட்டது. அவரும் 'பயணத்தடை தளர்த்தப்படும், கூடிய சீக்கிரத்தில்' என பதில் சொல்லிவிட்டார். இந்த பதில் காட்டுத் தீ போல் கிழக்கு ஜெர்மனியெங்கும் 'இனி பயணத்தடை கிடையாது' எனப் பரவிவிட்டது. அவ்வளவுதான், கிழக்கு பெர்லின் நகரத்தில் வாழும் ஜெர்மானியர்கள் கும்பல் கும்பலாக நகரத்துக்கு நடுவில் இருந்த சுவற்றை நோக்கி படையெடுத்தனர். காவலுக்கு இருந்த காவலாளிகளிடம் 'இனி எந்தத் தடையும் கிடையாது, கதவைத் திற' எனக் கூவினார்கள். காவல் துறைக்கும், ராணுவத்தினருக்கும் அப்பொழுது என்ன
  
  ...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
ஹெல்மெத் ஹோல், பெர்லின் சுவர் இடிபட்டதும் எப்படி இரு நாடுகளையும் இணைப்பது என்பது குறித்த திட்டங்களை  உருவாக்கி வைத்துவிட்டார். அடுத்தடுத்து அந்த திட்டத்தை மிக நேர்த்தியாக செய்து முடித்தார். குறிப்பாக இந்த இணைப்பிற்கு இரண்டாம் உலகப் போரில் வென்ற நேசப்படையினரின் ஒப்புதல் மிக அவசியம். மேலும் அதிகமான நிலப்பகுதியைக் கொண்ட ஜெர்மனி, ஐரோப்பாவை அச்சுறுத்தும் சக்தியாக மீண்டும் எழுந்து வரக் கூடும். எனவே அனைவரும் ஜெர்மானிய இணைப்பை ஆதரிக்க வேண்டிய அவசியமுமில்லை. எனவே நேசப்படையினரில் யாரேனும் ஒருவர் முட்டுக்கட்டை போட்டால் கூட இந்த இணைப்பு அமைதியாக நடக்காது. அது ஜெர்மனியின் நிலையை மிக மோசமாக்கி விடும்.
  
  ...more
அமெரிக்காவிடம் பொருளாதார நேசக் கரம், பிரெஞ்சுக்காரர்களின் ஒன்றிணைந்த ஐரோப்பிய கனவுக்கு ஆதரவு, பொருளாதார நெருக்கடியில் இருந்த சோவியத் ரஷ்யாவுக்கு பொருளாதார உதவி, இங்கிலாந்திடம் மென்மையான போக்கு மற்றும் கிழக்கு ஜெர்மனியில் நேட்டோ படைகளை நிறுவுவதில்லை என்கிற வாக்குறுதி என, அனைத்து நேசப்படை நாடுகளையும் திருப்திப்படுத்தி, பெர்லின் சுவர் வீழ்ந்த அடுத்த வருடம் 3-அக்டோபர்-1990 அன்று கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் ஒன்றாகின. 1945ல் பிரிக்கப்பட்ட ஜெர்மானிய நிலப்பகுதி 1990ல் ஒன்றாகியது. முதலாம் உலகப் போருக்கு பின் ஜெர்மனியை வெற்றி பெற்ற நாடுகள் கையாண்ட விதமும், இரண்டாம் உலகப் போருக்கு பின் அவர்கள்
  
  ...more
சோவியத் யூனியன்- வல்லரசுகளும் காணாமல் போகும்
கார்ல் மார்க்ஸின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட லெனின் புதிய மார்க்ஸிய கொள்கையை முன்னிறுத்தினார். நன்கு தொழில்மயமாக்கப்பட்ட நிலையில்தான் சமுதாயம் சமத்துவத்தை நோக்கி  நகரத் துவங்கும். அதுவே அடுத்து அடுத்து மாற்றமடைந்து, ஏற்றத் தாழ்வு இல்லாத கம்யூனிச சமூகமாகவும், எல்லோருக்கும் பொதுவான சமூகமாகவும் மலரும் என்பது மார்க்ஸின் கருத்து. ஆனால் லெனின் மார்க்ஸின் அனைத்து தத்துவங்களையும் உள்வாங்கிக் கொண்டு, பொதுவுடமை சர்வாதிகாரத்தின் மூலமாகக் கூட இப்படியான ஒரு பொதுவுடமைச் சமூகத்தை கட்டமைக்க முடியும் என நம்பினார்.
இந்த நம்பிக்கையில் தான் அக்டோபர் 17, 1917ல் போல்ஸ்விக் புரட்சி என்னும் ரஷ்யப்புரட்சி தோன்றியது.இப்புரட்சியின் விளைவாக அந்நாட்டில் பொதுவுடைமை தத்துவம் மலர்ந்தது. ஒரு வரியில் இந்த நிகழ்வை நாம் எளிதாக கடந்துவிட முடியாது - ஏனெனில் ரஷ்யப் புரட்சி என்பது மொத்த உலகையும் மாற்றி அமைக்க கூடிய வல்லமை கொண்ட நிகழ்வு. இன்றுவரை அதன் தாக்கம் இருக்கிறது. அது இன்னும் வருங்காலங்களிலும் இருக்கும். உழவர்கள்  நிலக்கிழார்களுக்கு அடிமையாக இருக்கும் நிலை, உழைப்பவர்களுக்கு நிலமற்ற நிலை,  பொருளாதார ஏற்ற தாழ்வு, ஆண்டான் -அடிமை முறை என்கிற அனைத்து முறைகளையும் நீக்கி புதிய சமுதாயம் படைத்த புரட்சிஅது.  மார்க்ஸின் மூலதனம்
  
  ...more





