காணாமல் போன தேசங்கள்: What makes and breaks a Nation? (Tamil Edition)
Rate it:
53%
Flag icon
இந்த புரட்சி ரஷ்ய சாம்ராஜ்யம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ரஷ்ய சாம்ராஜ்யத்தில் ரஷ்யர்களைத் தவிர்த்து பல இனக்குழுக்கள், மொழிக் குழுக்கள் இருந்தனர். ஆனாலும் அனைவரும் மொழி மறந்து, இனம் மறந்து, வேற்றுமைகள் மறந்து,  உழவர்கள் நாம், தொழிலாளர்கள் நாம் என ஒன்றிணைந்து வென்றெடுத்த புரட்சி இது. இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்த நிலப் பகுதியே சோவியத் யூனியன். கிட்டதட்ட 15 மாநிலங்கள் கொண்ட ஒன்றியம் இது.15 மாநிலங்கள் என நாம் கூறினாலும் உண்மையிலேயே இவை அனைத்தும் ஒவ்வொரு நாடுகளுக்கு சமம். ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி, கலை, உணவு, கலாச்சாரம், உடை வேறுபாடுகள் உண்டு. மத நம்பிக்கையிலும் வேறுபாடுகள் உண்டு. ரஷ்ய ...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
55%
Flag icon
இந்த நேரத்தில்தான் இந்த சோவியத் யூனியனில் புதிய மறுமலர்ச்சியைக் கொண்டு வர அதிகாரத்துக்கு வந்தார் கோர்ப்பசேவ் எனும் ரஷ்ய அதிபர். இவர் 1985ல் பதவி ஏற்றப் பின் படிப்படியாக பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். வெளிப்படைத் தன்மை, தனியார் நிறுவனங்கள் போன்றவற்றைக் கொண்டு வந்தார். விளைவு, இதுவரை அடக்குமுறைக்குள் இருந்த மக்கள் இந்த மாற்றங்களைப் பயன்படுத்தி எதிர் அரசியல் செய்தார்கள். குறிப்பாக, இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியும், ரஷ்யாவும் ஏற்படுத்திக் கொண்ட ரகசிய ஒப்பந்தத்தை வெளிக் கொண்டு வந்தனர். இரண்டாம் உலகப்போரின் துவக்கத்தில் ரஷ்யாவும் - ஜெர்மனியும் தங்களுக்குள் ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டனர். ...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
57%
Flag icon
சோவியத் கூட்டமைப்பின் அங்கமான ரஷ்யாவில் போரிஸ் எல்ட்சின் வெற்றிப் பெற்றார். ரஷ்ய மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தலைவரான போரிஸ் எல்ஸ்ட்சின் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகினார். ரஷ்யா சோவியத் கூட்டமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ரஷ்யாவோடு சேர்ந்து மற்ற நாடுகளும் இணைந்து சோவியத் கூட்டமைப்பிலிருந்து விலகினார்கள். எந்த நாடும் இல்லாத ஒரு அமைப்பானது சோவியத் யூனியன். அதன் தலைவராக இருந்தார் கோர்ப்பசேவ். இந்த நிலையில்  22 டிசம்பர் 1991ல்  சோவியத் யூனியன் முடிவுக்கு வந்தது என அறிவித்து தன் பதவியை ராஜினாமா செய்தார் கோர்பச்சேவ். 70 ஆண்டுகளாக உலகத்தில் பலமான நாடாக, பொதுவுடமை தத்துவத்தையும், ...more
58%
Flag icon
வரலாறு இன்றி வரலாறு படைத்த எஸ்தோனியா 
58%
Flag icon
ஆதிகாலம் முதல் இன்றைய எஸ்தோனிய நிலப்பரப்பில் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த நிலப்பரப்பை மாவால் (Maavaald) என்றும் அங்கு வாழுகிறவர்களை  மாரவஸ் (Maarahvas) என்றும் அழைக்கப்பட்டனர். Maa மா என்றால் அம்மா, தாய் என்கிற அர்த்ததில் அதுவே  நிலம் நாடு என்கிற அர்த்தத்தையும் தரக்கூடிய வகையில் தாங்கள் வாழ்ந்த நாட்டையும் அழைத்தனர். அவர்களுக்குள் பல குழுக்களாய் பிரிந்து சண்டையும், சமாதானமுமாய் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களின் கடவுள் யார் என்பதை குறித்து இன்னும் ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.  13 ஆம் நூற்றாண்டு வரை இவர்களின் வரலாறு குறித்த எந்த விவரமான குறிப்புகளும் இல்லை. இவர்களுக்கென தனியாக ...more
59%
Flag icon
இந்திய தேசத்தின் ஒரு மாநிலம் போல சோவியத் யூனியனின் ஒரு ஒன்றியமாக இருந்தது இந்த  நிலப்பரப்பு. 1990களில்  சோவியத் சோஷியலிச ரிபப்ளிக் முடிவுக்கு வந்த பொழுது  தன்னை தனி நாடாக உலகுக்கு அறிவித்தது.  எஸ்தோனியா !! ஆச்சர்யம், அதிசயம் என இதைவிட வேறு எதைச் சொல்ல முடியும்.  ஆள்கிறவன் யாராக இருந்தாலும், எத்தனை இடர்பாடுகள் மத்தியிலே பிறந்து இறந்திருந்தாலும், விடுதலை, நம்பிக்கை என்கிற அர்த்தம் புரியாமலேயே வாழ்ந்திருந்தாலும்,   இவர்களை ஆண்டவர்களாலும், அவர்களின் மொழியாலும், மதத்தாலும், தத்துவத்தாலும், படையாலும், அதிகாரத்தாலும்,  “நாம் எஸ்தோனியர்கள்” என்கிற உணர்வை மட்டும் இவர்களிடமிருந்து எடுக்கவே முடியாது ...more
61%
Flag icon
இன்றைய எஸ்தோனிய நிலப்பரப்பை ஜெர்மானியர்கள் லோவேனியா என அழைத்தனர். பூர்வ குடிகளை people of land/ country என்றே அழைத்து வந்தனர். இதை ஏன் குறிப்பிட்டு சொல்ல வேண்டியிருக்கிறதென்றால் இப்படி வெளியிலிருந்து வந்தவர்கள் பூர்வ குடிகளுக்கு, அவர்களுக்கு புரிந்ததை வைத்து ஏதாவது பெயர் கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்கள், பின்னர் அதுவே நிலைத்து நிற்கும். அது கூட எஸ்தோனியாவை பொருத்தவரை இல்லை என்பதைச் சொல்லத்தான்.
62%
Flag icon
12ம் நூற்றாண்டில் எஸ்தோனியாவை கைப்பற்றிய ஜெர்மானிய பிரபுக்கள், மற்ற ஐரோப்பிய நிலப்பரப்பில் இருக்கும் முறை போலவே எஸ்தோனியாவிலும் நிலப்பிரபுத்துவ முறையை நுழைத்தனர். இதில் பண்ணை ஆட்களாகவும், அடிமை கூலிகளாகவும் எஸ்தோனியர்களை ஆக்கினார்கள். நிலத்தின் கூலி தொழிலாளிகள் யஸ்தோனியர்கள் எனும் நிலை 12ஆம் நுற்றாண்டு துவக்கத்திலிருந்து அடுத்த 700 ஆண்டுகள் இருந்தது. இந்த 700 ஆண்டுகளில் எஸ்தோனியா மீது டென்மார்க், ஸ்வீடன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் பலமுறை படையெடுத்திருந்தாலும் எஸ்தோனிய ஜெர்மன் நிலப்பிரபுக்கள் அந்நாட்டின் மீதான தங்களின் ஆதிக்கத்தை இழக்கவே இல்லை. ஜெர்மானியர்கள் எஸ்தோனியாவை உருவாக்கினார்கள் ...more
65%
Flag icon
இப்படியான மாற்றங்கள் ஐரோப்பா முழுக்க நடந்து கொண்டிருந்தது. புதிய தேசங்கள் உருவாகின. மொழி, கலாச்சாரம் என்கிற பெயரில் ஒன்றிணைந்து தேசமாக்கினார்கள். பல்வேறு தேசங்கள் இனம் மொழி அடிப்படையில் உருவாகிக் கொண்டிருந்த வேளையில் எஸ்தோனியாவோ எந்த அடையாளமும் இன்றி the country people என்றே அழைக்கப்பட்டனர். பண்ணை முறை மெல்ல மெல்ல மாறிய பொழுது, கிடைத்த உரிமைகளை வைத்து கல்வியும், நிலங்களை உடமையாக்கிக் கொள்ளவும் துவங்கினர் எஸ்தோனியர்கள். மெல்ல மெல்ல சிறிய  நடுத்தரவர்கம் உருவாக ஆரம்பித்தது. இவர்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கினார்கள். மொழியால் இனத்தால் ஒன்றாகி தேசங்களாகிய ...more
66%
Flag icon
19வது நூற்றாண்டு நவீன காலத்தின் ஆரம்பம். எஸ்தோனியர்களுக்கு அவர்களின் நிலம் சரியான நேரத்தில் அவர்கள் கைகளுக்கு கிடைத்தது எனலாம். நவீனமயமாக்கல் காலத்தில் அடிமையாக இருக்காமல் மெல்ல மெல்ல மீண்டு வரும் காலமாக அமைத்துவிட்டது. அதுவரை வேளாண்மை சமூகமாக இருந்த எஸ்தோனியா நிலப்பிரபுத்துவ காலத்து அதிகார அடுக்குகளை தானே கலைத்தது. அதற்கு முன்னுதாரணமாக பல ஐரோப்பிய நாடுகள் இருந்ததும் காரணமே. இப்படியான சூழல் இந்தியாவுக்கு என்றுமே ஏற்படவில்லை என்பது  வருத்தமே. நவீன காலத்திலும் அடிமைத்தனமாகவே இருந்திருக்கிறோம். இந்த காலத்தில் ஐரோப்பா முழுவதும் பல தேசங்கள் தோன்ற ஆரம்பித்தன. மொழியால், மொழி குடும்பத்தால், இனத்தால் ...more
67%
Flag icon
பல ஆண்டுகள் அடிமைத்தனத்திலிருந்து மீண்ட எஸ்தோனியர்களின் முதல் தலைமுறை பட்டதாரிகள், கிறிஸ்துவ பாதிரியார்கள், நில உடமை பெற்றவர்கள், அரசு அதிகாரிகள், வியாபாரிகள், கலைஞர்கள், தங்களுக்கென நவீன தேசம் உருவாக்கக் கூடிய பல செயல்களை செய்ய ஆரம்பித்தனர். முதல் செயல் அவர்களின் தேசத்தை கட்டுப்படுத்தி வரும் ரஷ்ய மற்றும் ஜெர்மன் எதிர்ப்பு. ஆதிக்கத்தை எதிர்ப்பதன் மூலம் எஸ்தோனியர்களை ஒன்றுபடுத்தினர்.   தங்களுக்கென கலை கலாச்சார பாரம்பரியம் அவசியமென உணர்ந்தனர். அடிமைத்தனமே எஸ்தோனியர்களின் வரலாறாக இருந்தது. அடிமைத்தனமில்லாத சுதந்திர எஸ்தோனியா பண்டைய காலத்தில் இருந்தது என்பதை கட்டமைக்க ஆரம்பித்தனர். பண்டைய ...more
69%
Flag icon
இருக்கிறது. 1869ல் கொண்டாட ஆரம்பித்த இந்த விழா The Song Festival எனும் பெயரில் இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
70%
Flag icon
எஸ்தோனியாவில் ரஷ்யமயமாக்கல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டு உலகப் போரின் பொழுதும் ஜெர்மானியராலும் ரஷ்யாவாலும் பல முறை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது எஸ்தோனியா. கம்யூனிஸ்ட் ரஷ்யாவின் சோவியத் யூனியனின் ஒரு அங்கமாக்கப்பட்டு தன் சுயத்தை இழந்து நின்றது. தன் லாபத்திற்காக ரஷ்யா, எஸ்தோனியாவை ஜெர்மானியர்களுக்கு பலியாக கொடுக்கவும் செய்தது. அனைத்து வகையான சுய அதிகார மறுப்பு செயல்களை எதிர்கொண்டது எஸ்தோனியா. ஆயுத போராட்டங்கள் மூலம் தன் சுய அதிகாரத்தை நிறுவும் முயற்சியிலும் ஈடுபட்டது எஸ்தோனியா, ஆனாலும் துப்பாக்கியை விடவும் எஸ்தோனியர்களை ஒரே தேசமாக்கியது அவர்களின் பாடல்களே, ஒன்றாய் இணைந்து பாடினார்கள்.... ...more
71%
Flag icon
போட்ஸ்வானா - ஆப்பிரிக்காவின் வைரம்
71%
Flag icon
வளமிக்க தேசங்கள் சபிக்கப்பட்டவை என்பார்கள். மண்ணுக்கடியில் இருக்கும் தாது வளங்கள், எண்ணெய் வளங்கள் போன்றவை அளவுக்கு மீறி ஒரு நாட்டில் இருந்தால், அந்த வளங்களே அந்த நாட்டிற்கு சாபமாகி வளப் போட்டிக்குள் சிக்கி, அந்நாட்டு மக்கள் துயரப்படுவார்கள் என்பதே ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள பல தேசங்களின் வரலாறு. இயற்கை வளங்கள், அதிலும், வைரங்கள் அதிகம் கிடைக்கும் நாடான போட்ஸ்வானா. ஆப்பிரிக்க நாடுகளிலேயே மிக முன்னேறிய நாடாக, ஜனநாயக நாடாக, அமைதியான நாடாக மக்கள் தங்கள் விருப்பப்படி வாழக் கூடிய நாடாகத் திகழ்வது எப்படி?
72%
Flag icon
ஆங்கிலேயர் ஆட்சியின் போது போட்ஸ்வானாவின் முக்கிய எட்டு இனக்குழுக்களே பிரதான குழுக்கள். அவர்களுக்கே போட்ஸ்வானா சொந்தம் என்கிற நடைமுறை இருந்தது. அதே நடைமுறையை சுதந்திரத்திற்கு பிறகு தன் அரசியல் சாசனத்திலும் இணைத்தே புதிய நாட்டை உருவாக்க ஆரம்பித்தார்கள். இந்த எட்டு பெரிய இனக்குழுக்களைத் தவிர்த்து இன்னும் பல சிறுபான்மை இனக்குழுக்களும் போட்ஸ்வானாவில் இருந்த போதும் எட்டு குடிகளுக்கு மட்டுமே முதன்மையான அங்கீகாரம் கொடுத்தது கண்டிப்பாக போட்ஸ்வானா சமூகத்தில் இனக்குழுக்களிடையே போட்டியையும் சந்தேகத்தையும் மற்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போல உருவாக்கியிருக்க வேண்டும்.
72%
Flag icon
ஐரோப்பியர்களிடமிருந்த அதிகாரத்தை பெற்ற குழுக்கள் தங்கள் நாட்டை தங்களது இனக்குழுவின் கலை, கலாச்சாரம், மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்கிற ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக ஆக்கவே விரும்பினர். ஒற்றைத் தன்மை என்பதே கிட்டத்தட்ட அனைத்து காலனி நாடுகளின் முனைப்பாக இருந்தது. ஒற்றை மொழி, கலாச்சாரம் கொண்ட நாடு பலமான நாடாகவும் இருக்கும் என்கிற   நம்பிக்கையை முன்வைத்தாலும் பெரும்பாலும் இப்படியான ஒரு இனக்குழுவின் ஒற்றைமய முயற்சி பல ஆப்பிரிக்க நாடுகளில், எதிர்ப்பையும் போட்டிகளையும் போர்களையும் கொண்டு வந்தது என்பது வரலாறு. இதே போன்ற ஒற்றை மயத்தைத்தான் போட்ஸ்வானா தலைவர்களும் ...more
75%
Flag icon
கிட்டதட்ட இந்தியாவின் இன்றைய நிலைக்கு காரணமாக கூறும் அனைத்து காரனங்களும் போட்ஸுவானாவிலும் இருந்திருக்கிறது.  போட்ஸ்வானாவின் முதல் பிரதமர் சிரிட்ஸ்சீ காமா (Seretse Khama) அந் நாட்டை அனைவரும் வாழத்தகுந்த, அனைவரும் சம உரிமையோடு முன்னேறக்கூடிய நாடாக உருவாக்கினார். அவன் வெள்ளை இவன் கருப்பு அவன் அந்த சமூகம் இவன் இந்த சமூகம் என்கிற பாகுபாட்டை விட்டொழித்து அனைவருக்குமான விடுதலை இது எனக்கூறி சிறுபான்மையினர் தங்களை குறித்து எந்த பயமும் இல்லாமல் பெரும்பான்மையினரோடு இணைந்துகொள்ளக் கூடிய சூழலை உருவாக்கினார். இதனாலே பெரும்பான்மை குறித்த எந்த பயமும் சந்தேகமுமின்றி இருந்தனர் போட்ஸ்வானாவில் உள்ள மற்ற ...more
77%
Flag icon
தங்களை ஒருங்கிணைக்கவும் நிர்வகிக்கவும் சண்டை சச்சரவுகளை தீர்க்கவும் பன்னெடுங்காலமாக நம்மூர் நாட்டாமை பஞ்சாயத்துகள் போன்ற ஒரு முறையை வைத்திருந்தனர் போட்ஸாவானியர்கள். நம்மூர் நாட்டாமை, கிராம பஞ்சாயத்துகளை விடவும் இன்னும் செறிவோடும் அனைவருக்கும் சம நீதியோடும் செயல்பட்டு வந்த கோத்லோ (Ghotla) எனும் அமைப்பை முற்றிலும் நீக்காமல் அதிலிருக்கும் சம நீதி, அனைவருக்கும் பொதுவான ஜனநாயக உணர்வை பயன்படுத்திக்  கொண்டது போட்ஸ்வானா. இந்த கோத்லா எனும் பஞ்சாயத்து முறை போட்ஸ்வானாவின் அமைதிக்கும் ஜனநாயக உணர்வுக்கும் இனக்குழுக்களிடையே நிலவும் பரஸ்பர நம்பிக்கைக்கும் அச்சாணியாக - அன்றும் இன்றும். கோத்லா தலைவர் ...more
80%
Flag icon
காலனி ஆதிக்கத்திலிருந்து மாறும் பொழுது யார் அதிகாரத்தை கைப்பற்றினார்களோ அவர்களின் ஆதிக்கம் மற்ற இன மொழி பேசும் குழுக்களிடயே முனுமுனுப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.  இந்த முனுமுனுப்பு அந்த தேசத்தின் ஓர்மையோடு முழு ஆற்றலோடு இயங்கும் தன்மையை ஒழிக்கிறது. அதே போல்தான் போட்ஸுவானாவிலும், இப்பொழுது அது என்ன எட்டுக் குழுக்கள், எங்களின் பிரதிநிதித்துவம் எங்கே என்கிற கோரிக்கை மற்ற சிறுபான்மையினரிடம் வலுக்க ஆரம்பித்திருக்கிறது. இப்படியான கோரிக்கைகள் மற்ற நாடுகளில் ஆரம்பித்திருந்தால் இந்த நேரத்திற்கு உலகத் தலைப்புச் செய்தியாகி ரத்த வெள்ளத்தில் மூழ்கியிருக்கும். ஆனால் போட்ஸ்வானாவோவிலோ ...more
81%
Flag icon
பல தேசங்களின் தேசம் -சுவிட்சர்லாந்து
82%
Flag icon
பல தேசியங்களின் ஒன்றியம், ஏழுபேர் கொண்ட கூட்டாட்சி முறையில் நிர்வகிக்கப்பட்டு வரும் நாடு, அந்த ஏழு பேர் கொண்ட குழுவிடமே முழு அரசியல் அதிகாரமும் உள்ளது, அந்த எழுவரில் ஒருவர் சுழற்சி முறையில் அடையாளப் பிரதமராக இருக்கிறார், முழுமையான சுயாட்சி முறை கொண்ட மாநிலங்கள் பல கொண்டது. சுவிட்சர்லாந்தின் பெயர் Confederation Of Switzerland (சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு) என்பதாகும். சுவிட்சர்லாந்தின் அடி நாதம் – கூட்டாட்சி.
82%
Flag icon
ஒவ்வொரு காண்டோன்களுக்கும் தனியாக அரசியல் சாசனம் உண்டு. தனி போலீஸ் படை, தனிக் கொடி, தங்களை தாங்களே நிர்வகிக்கும் உரிமை, நீதிமன்றம், கல்விக் கொள்கை, மருத்துவம், வரி, வருமானம் என பல துறைகளிலும் தங்களுக்கு ஏற்ற சட்டத்தை தாங்களே உருவாக்கிக் கொள்ளலாம். தங்களுக்கென வெளியுறவு கொள்கையைக் கூட ஒரளவுக்கு ஏற்படுத்திக் கொள்ளலாம்
83%
Flag icon
அங்கும் மத்திய அரசு உண்டு. ஒவ்வொரு காண்டோனின் மக்கள் தொகைக்கு ஏற்ப பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். கூடவே மேலவை என்கிற Upper Houseக்கும் ஒவ்வொரு காண்டோன்களும் தலா இரு உறுப்பினர்களைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள். (இதில் ஒரு உறுப்பினர் மட்டும் கொண்ட மிகச் சில காண்டோன்களும் உண்டு) இதிலும் இவர்களுக்குள் ஒரே முறை இல்லை பாருங்கள். இது தவிர உள்ளாட்சி நிர்வாகமும் உண்டு. இந்த இரு அவையிலுள்ள தேர்ந்தடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களுக்குள் ஏழு பேரை நான்கு பெரிய கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கிறார்கள். இங்கு ஆளும் கட்சி, எதிர் கட்சி என எதுவும் கிடையாது. நான்கு கட்சியிலிருந்து ...more
84%
Flag icon
எல்லா பிரச்சனைகளுக்கும் Consensus Politics (பொதுக்கருத்து எட்டப்பட்ட அரசியல்) எனும் அடிப்படையில் அனைவரும் ஒத்துக் கொள்ளும் முறையில் தீர்வு காணப்படுகிறது. இங்கு கூட்டாட்சி முறையில் அரசாட்சி மிளிர்கிறது இது போக, Direct Democracy (நேரடி ஜனநாயகம்) என்கிற முறை இருக்கிறதாம். Direct Democracy முறையில், மக்கள் நினைத்தால், இந்த அவைகளில் நிறைவேற்றிய சட்டங்களுக்கு எதிராக பொது வாக்கெடுப்புகள் (Referendum) நடத்தலாம், தீர்மானம் கொண்டு வரலாம், கையெழுத்து இயக்கம் மூலம் சட்டங்களை கேள்விக்கு உட்படுத்தலாம். இங்கே மக்களென்றால் ஆளும் ஆட்சியாளர்களின் சட்டங்களுக்கு வளைந்து, நெளிந்து, சமாளித்து வாழ வேண்டிய ...more
« Prev 1 2 Next »