More on this book
Community
Kindle Notes & Highlights
துறவை நாடுகிறவன் பயணிக்கலாம். ஆனால் வழிகாட்டியாகவோ பாதுகாவலனாகவோ இருக்கக் கூடாது. வாழ்வின் மீதான இச்சைதான் ஒரு மாலுமிக்கு எப்போதும் அவசியம். அந்த இச்சைதான் அவனையும் அவனோடு கப்பலில் பயணிக்கும் மற்றவர்களையும் பாதுகாப்பாய் வைத்திருக்கிறது.
இரா ஏழுமலை liked this
மனிதன் தன் சந்தோசங்களை அனுபவிக்க முதலில் அவனுக்கு பாதுகாப்பானதொரு சூழல் தேவைப்படுகிறது, பறவைகளும் விலங்குகளும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் நோக்கி தேவைகளுக்காக இடம் பெயர்ந்தபடி இருந்தாலும் ஆக இறுதியாய் கூட்டை அடைவதை நோக்கமாகக் கொண்டிருக்கக் காரணம் கூடுதான் பாதுகாப்பு. அந்த பாதுகாப்பின் வெம்மையில் தான் அவை தங்களை சந்தோசமாய் உணர்கின்றன.
இரா ஏழுமலை liked this