More on this book
Kindle Notes & Highlights
Read between
July 10 - July 11, 2025
பார்க்கப் போனால் கற்பு என்பதே ஓர் ஆணாதிக்க நுண்ணரசியல் தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாய் பெண்களுக்கு எதிரான அச்சித்தாந்தத்தை மிகுந்த பிரேமையுடன் முன்னெடுத்துச் செல்வதே பெண்கள் தான் – கற்புக்கரசியாய்த் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் நம் வீட்டுப் பெண்கள்.
Harshni Chandrasekaran liked this
இரு உறுப்புக்களின் சில நிமிட உராய்வு எப்படி ஒருத்தியின் ஒழுக்கவியல் அந்தஸ்தைத் தீர்மானிக்கிறது என்பதை நினைக்க நினைக்க ஆச்சரியத்தின் சுகந்தமே தேங்கி நிற்கிறது. ஆந்த்ரபோலஜியின் அடிப்படையில் பார்த்தால், இன்னாரை இன்னார் மட்டுமே புணரலாம் என்கிற ஆதாரக் கோட்பாட்டுடன் நாகரிக மனிதன் தொடங்கி வைத்த நமது பாரம்பரிய குடும்ப அமைப்பு முறை தான் முதல் வேசி ஜனிக்கக் காரணமாய் இருந்திருக்கக் கூடிய ஆணி வேர் எனத் தோன்றுகிறது.
அதிலும் இளமையே பிரதானம் (“The profession of a prostitute is the only career in which the maximum income is paid to the newest apprentice” – William Booth). இதனாலேயே உலகின் வறுமையண்டிய பிரதேசங்கள் பலவற்றிலும் பூப்படையாத சிறுமிகள் அல்லது just now பூப்படைந்தவர்கள் கூட என்ன நடக்கிறது என்கிற புரிதல் சிறிதுமற்று விபச்சாரத்தில் ஈடுபடத் தொடங்குகிறார்கள்.
தேவரடியாள் இறந்தாள்; தேவடியாள் பிறந்தாள்.
தன் கணவனுடன் மட்டும் கூடி, அவனில்லாத போழ்து (அவனிருக்கும் போதும்!) மனதால் கூட பிற ஆடவனை நினையாத பதிவிரதைகளான உரைசால் பத்தினிகளை உயர்ந்தோர் ஏத்தினர். கதையில் இங்கு தான் சிக்கல் ஆரம்பம் – ஒன்றை ஏற்றினால் மற்றொன்றை இறக்கித்தானே ஆகவேண்டும்.
மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் – நம்மிடையே ஆழப்பதிந்திருக்கும் வேசிகள் குறித்த கோபமும், வெறுப்பும் எவ்வளவு தூரம் நியாயமானது, எத்தனை சதவிகிதம் நிஜமானது. யோசித்துப்பார்த்தால் வேசி என தனித்து ஓரினமும் கிடையாது. நாம் ஒவ்வொருவருமே ஏதாவதொரு கணத்தில் விபச்சாரியாக நடந்து கொள்கிறோம் – மனதாலும் உடலாலும்.
நாம் எல்லோரும் தேவையேற்படும் போது மட்டும் செய்யும் விஷயத்தை வேசிகள் தொழிலாகவே செய்கிறார்கள் என்பது தான் பிரதம வித்தியாசம்.
புணர்ச்சி தான் அவர்களுக்கு நாமளிக்கும் உச்சபட்ச மரியாதை. தீண்டலால் அவர்கள் அடையும் தீண்டாமை இது.
நளினி ஜமீலா தனது ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை நூலில் சொல்வது போல் – “இங்கே விற்பனை செய்யப்படுவது அன்போ, காதலோ அல்ல. ஒரு நபருடன் குறிப்பிட்ட நேரத்தைச்செலவிட ஒரு சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான அப்போதைய மன அமைதியையும் பரிவையும் அளிக்கிறோம். இதை விற்பனை செய்யக் கூடாது என்று சொல்வதை விட தேவைப்படாதவர்கள் வாங்க வேண்டாம் என்று முடிவு செய்து கொள்வது தான் நல்லது”. இது மிக முக்கிய, முதிர்ச்சி வழி வந்த ஒரு நிலைப்பாடு.
இக்காப்பியத்தில் பரத்தையே தலைவி. களைத்துறங்குபவன் குறட்டையொலிக்கும், ஓயாது மனதிசைக்கும் சிருங்கார ஒலிக்கும் இடையே இழைக்கப்பட்டவை இக்கவிதையனைத்தும். அழுக்காய் அசிங்கமாய் நாசி பெயர்த்தெறியும் துர்வீச்சத்துடன் இருக்கலாம் பிசுபிசுத்த ஈரச்சீழ் வடிந்துலர்ந்த இந்த யோனியெழுத்து – அது படிப்பவர் மனசு பொறுத்து. என் வரையில் குற்றவுணர்ச்சியோ பாசாங்கோ இல்லாததொரு நனிநெஞ்சம் மிக விரும்பும் இக்கவிதைகளை. அதே போல் இவற்றை நிராகரிக்கும் உரிமையும் தகுதியும் உண்டு உண்மையுணர்ந்த வேசிகளுக்கு.
அவள் உடல் அல்லாது மனமே இதில் நிர்வாணப்பட்டிருக்கிறது.
இருபத்தாண்டு நெடிய பரத்தைமைக்குப்பின்பும் புடவையுடுத்துகையில் மாராப்பைச் சரிசெய்யும் விரல்களின் அனிச்சை.
நனிகண்ணகிக் கனவுகளுடன் மணிமேகலை.
ஒரே நன்மை – புணர்ந்தவன் ஈமச்சடங்கில் அழுது புரண்டு தாலியறுக்கும் வேலையில்லை.
நிர்வாணத்திலென் ஒற்றைச்சிரிப்பு போதும் – ஆண்மைத்திமிரடங்கி நீ அவமானப்பட.
கல்லாய்ச் சமைந்திருக்கும் அகலிகைகளைத் தேடிப் புணரும் கலிகால ராமர்கள்.
மரணக்கொடுங்கனவில் மார்க்ஸ், ஏங்கல்ஸிடம் உணர்ந்தறிய வேண்டும் – உடல் முதல் வாதத்தை.
புணர வரும் நண்பர்களிடையே புறம் பேசி கொஞ்சம் பகை மூட்டி புன்சிரிப்பதுமொரு சுகானுபவம். மொழியறியாத அந்நியனை சைகையில் புரியவைத்துப் புணர்வதுமொரு கலைநுட்பம்.
வேசி தாசி பரத்தை கணிகை அவிசாரி விபச்சாரி விலைமகள் தேவடியாள் – யாவும் ஒரே தெய்வத்தின் பற்பல நாம கரணங்கள்.
கண்களும் காம்புகளும் பெரிதாயிருக்க வேண்டும் உதடுகளும் பிளவுகளும் சிறிதாயிருக்க வேண்டும் – நேயர் விருப்பம்.
ஓராயிரம் நிசிவென்று ஆண் குறியொன்றேறி நிகழ்த்துவேன் எனது அசுவமேத யாகத்தை.
ஒரே வித்தியாசம் – நீ காசு கொடுத்து கற்பழிக்கிறாய்.
சளி கபம் கோழை பித்தம் எச்சில் ஊளை ரத்தம் எலும்பு நரம்பு தூமை மலம் மூத்திரம் இவற்றாலானதென் தேகம் – இதில் காதலெங்கே காமமெங்கே சொல்.
ஓரிரவுக்கு ஒரேயொருவனுக்குத் தொகைபேசி வருமுன்னை வன்முறையாய்ப் பகிரும் பஞ்சபாண்டவர்களிடம்
அன்பாய் மிக அன்பாய்க்கேள் – அவர்கள் என்ன ஜாதியென.
புணர்ந்திருக்கும் புகைப்பொழுதில் திருமணம் செய்து கொள்வதாய்
கையடித்து சத்தியம் செய்கிறான் – குறைந்தபட்சம் தினமொருவன்.
புழுவோ மண்ணோ கழுகோ நெருப்போ தின்னப் புகும் முன் நீயும் ருசித்துப் போ.
உந்தன் பதிவிரதைக் கணவனின் அந்தரங்க அடையாளம் சொன்னால் என்ன பரிசு தருவாயடி எமக்கு?
கதவு ஜன்னலடைத்து ஒளிர் விளக்கணைத்து விழி சொக்கிப்புணரும் பத்தினித்தாலி கட்டிய வீட்டுப் பிராணியல்ல – நான் காட்டு ராணி.
குரைக்கும் நாய்கள் குழையும் வளையும் புணர்ச்சி வேளையில்.
மனமொன்றிப் புணர்தலுமொரு தியானம்.
எந்த ஆண்மகனும் இதுவரை நேருக்கு நேர் சந்தித்ததில்லை என் கண்களின் அலட்சியத்தை.
உனக்கது களிப்புறுப்பின் உச்சங்கள்
எனக்கோ கழிப்புறுப்பின் எச்சங்கள்; நான் சகித்துப்புணர்வது உன் பணம் நீ சுகிக்கப்புணர்வதோ என் பிணம்.
உறக்கத்தின் அருமை கேள் – கறைபடாத இரவொன்றில் கம்பளி போர்த்தித் துயிலும் நிம்மதியின் சுகஸ்பரிசத்தைப் பெருங்கனவாய்த் தரிசிக்கும் ஓர் இளம் தேவடியாளிடம்.
எல்லாருடனான புணர்ச்சியிலும் ஒருவனையே புணர்கிறேன் நான்; ஒருவனுடனான புணர்ச்சியில் எல்லாரையும் புணர்கிறாய் நீ.
பார்வைகள் சில எய்து பரஸ்பரம் விரலுரசி வெட்கத்தின் சூடேற நிகழும் புணச்சியொரு நுண்கலையென்பேன்.
முதுகெலும்புச் சரமுடைத்து முழிபிதுங்கிய முகங்காணும் வெறியது தோன்றி மறையும் விரும்பிப் புணர்ந்த எவனும் திரும்பிப்படுக்கும் அக்கணம்.
காந்தியின் நான்காம் குரங்கு குறிபொத்தி அமர்ந்திருக்கும்.
பரஸ்பரம் என்ற பதத்தின் அர்த்தம் அறிவாயா நீ?
பணம் புணரும் அதிகாரம் புணரும் ஆசை புணரும் ஆணவம் புணரும் அரிதாய் சில சமயம் காதலும் புணரும்.
மார்புரசி மனசுறுத்துகிறது ஜாக்கெட் செருகிய கரன்சி அறைக்குள்ளே அவனும் நேற்றுச்சமைந்த மகளும்.
காசின்றிப் புணரத்தேவை – காதல்.
திரைக்கதாநாயகியாகும் கனவில் ரயிலேறிய சிலர் வட்டி கட்ட வக்கில்லாது அசலுக்கு பதிலான சிலர் நெடுஞ்சாலைக் கொடுஞ்சாவில் நாதியிழந்த சிலர் கணவன் / காதலனால் களவாடி விற்கப்பட்ட சிலர்.
அரசியல் பிழைத்தோரது Ex-ஆசை நாயகிகள் சிலர் பாலியல் வண்புணர்வில் பிய்த்தெறியப்பட்ட சிலர் பரம்பரைப் பழக்கமாய்த் தொழில் தொடரும் சிலர் பகட்டாய் வாழ்ந்திருக்கப் பொருள் தேடிவரும் சிலர்.
ஆணுறை அணிய மறுத்த படித்த பட்டிக்காட்டான் ஃபோர்ப்ளேயிலேயே உச்சமடைந்த குடும்பஸ்தன் மாதவிலக்கன்று நிண நாற்றம் ரசித்துப்போனவன் புணர்ச்சியினூடே ஸ்பஷ்டமாய் வாயு பிரித்தவன்.130 * தொட்டவுடன் வெளியேற்றிய அரும்பு மீசைச்சிறுவன் ஆடை களைந்து நிர்வாணங்கண்டு கரம் புணர்ந்தவன் ஆறு முறை ஓரிரவில் புணர்ந்து தள்ளாடிப்போனவன் நூறு முறை யோனியில் முத்தமிட்டு அழ வைத்தவன்.
தன்னைப்பெண்ணாக்கி என்னை ஆணாக்கிக்கிடந்தவன்
புணர்ந்த நினைவுக்கு யோனிமயிர் பிடுங்கிப்போனவன் குருதி கசிய முலைக்காம்பு கடித்துக் கதறச்செய்தவன் மதுவருந்திக் கலந்து முகமெங்கும் வாந்தியெடுத்தவன்.132 * தீட்டுப்படாதிருக்க பூணூல் கழற்றிப்புணர்ந்த அந்தணன் வயாக்ராவில் மூச்சிறைத்துத் தோற்ற பெருங்கிழவன் ஈடுதரவியலா நிறைமாத கர்ப்பிணியால் நாடி வந்தவன் மனைவியின் அவிசாரித்தனம் கூறி மடி சாய்ந்தழுதவன்.133 * விரை துலங்கித் தொங்கின ஓட்டை உள்ளாடைக்காரன் விடிய விடிய கதை கவிதை சொல்லிக்கழுத்தறுத்தவன்
பாலியல்நோய்க்கு புணர்ச்சியையே மருந்தாயளித்தவன் முற்றுந்திறந்து மோகஞ்சுகித்த ...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.