More on this book
Kindle Notes & Highlights
வீம்புக்குக் குடிக்கிறவன் தான் கெட்டவன். அயோக்கியன், அல்பன், பொம்பளை மேல மரியாதையே இல்லாதவன்.''
அம்மா திட்டினா கஷ்டமாயில்ல. நீ திட்டி முறைச்சா அப்படியே... அப்படியே...'' - குழந்தை விக்கி விக்கி அழுதது.
கற்பு என்பது பெண்ணுக்குக் கைவிலங்காய் இருக்கலாம். தலையில் ஏற்றப்பட்ட சுமையாய் இருக்கலாம், ஆனால் அதைக் களவாட எவனும் முற்படின், தலைச் சுமையில் கை வைக்கத் துணிந்த பின் தரும் அடி தவறாது விழும். இங்கே பிராது சொன்னவளே பலமான சாட்சி, அவள் புலம்பல் பெரும் சாதகம். அவள் கண்ணீர் முக்கியமான வாக்கு மூலம். அவள் அபயக்குரல் கொடுக்க உடனே போர் மூளும்.
ஒட்டி விளையாடிய உடன் பிறப்புப் பாசம் ஒரு நொடியில் போகும். பாசம் அறுக்கவும் நட்பைக் கலைக்க வும், பிள்ளையையும் தகப்பனையும் பிரித்துப் போடவும் பெண்ணால் முடியும். பேரரசுகள் சாய்ந்திருக்கின்றன என்று சரித்திரம் சொல்கிறது.
தந்திரமற்றவனுக்குத்தான் காயம் படும். அனுபவம் கசப்பாகும், சொல் தாங்காது சோர்வு வரும்.
வெட்கம் உடைய, வெகுளித்தனம். வெகுளியும் மறைய நிர்மலம்."
போவேன். எழுந்து எங்கயாவது போவேன். நீ எங்கு போவாய். போய் விட்டு மறுபடி இங்கு வருவாய், கோபத் தோடு போவாய். கோபம் கரைய வருவாய். மறுபடி கோபித்துக் கொள்வாய்.''
"வாங்கியவன் கை வானம் பார்க்கும். வழங்குபவன் கை பூமியை மறைக்கும்.''
"வாங்குபவன் கை வானம் பார்க்கும். வழங்குபவன் கை பூமியை மறைக்கும். கொட்டி இறைத்திருக்கிறதே... எடுத்துக் கொள்.''
ஆசையின் விளைவு அன்பு.''
இந்த ஓட்டம் அநாவசியம். இந்த உழப்பல் அநாவசியம். நான் யாரையும் தாங்கவில்லை. எவரும் என்னைத் தாங்க வில்லை. அவரவரை அவரவர் தாங்கிக் கொண்டிருக் கிறார்கள். அது அது அதனதன் காரியத்தைச் செய்து கொண் டிருக்கிறது. இதில் எனக்கும் மற்றவர்க்கும் தொடர்பில்லை. தொடர்பிருப்பதாய் நினைத்துக் கொள்கிறேன். இயக்கம் நிரந்தரம். குமிழிகள் உந்தி ஆறு போகவில்லை. ஆறு இயக்கம்... குமிழிகள் நாம்.
மித் ஆகாரம், மித நித்திரை, மிதமான வார்த்தைகள் இது போதும். உனக்குத் தொடர்ந்து போ - தெரியும்.''
சொல்லித் தராதே சொல்லித் தரத் தெரியும் என்று நினைக்காதே. தெரிந்தவையும் மறையும், மறைக்கப்படும்.
"ஒரு சமயம் நீ எனக்கு கடவுள் மாதிரி. உனக்கு இப்ப நான் கடவுள் மாதிரி. நடுரோட்ல உன் குடும்பமே என் வண்டி தள்ளிச்சே.. அப்ப யாரை நான் கடவுள்னு சொல்ல. மனுஷன்தான் கடவுள்... மனுஷன் தான் மிருகம்.''

