More on this book
Kindle Notes & Highlights
"மனுஷனாலே முடியாதது எது சரசு. மனுஷனுக்கு நூறு முகம். தகப்பன், புருஷன், பிள்ளை, பேரன், சிநேகிதன், வேலைக்காரன், யூனியன் லீடர், வோட்டு போடறவன்னு நூறு முகம். ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருந்து ஒண்ணோட ஒண்ணு கலக்காத முகம்.''
அத்தனையும் செய்துட முடியும். ஒரே நேரத்துல கூட செய்துட முடியும். தெளிஞ்சவனுக்கு உறவுப் பிரச்சனையே இல்லை. தெளியறதுதான் பிரச்னை'-
"என்னாலே உன்னாலேன்னு எதுவும் இல்லை. கை புடிச்சு யாரோ எங்கேயோ கூட்டிக்கிட்டுப் போறாங்க. நடக்கிறோம். அவ்வளவுதான்.''
வெறுப்பா... இது நிதானம்.''
"பட்டுத் தெரியறது உசத்தி."
தலைவனுக்குத் தொழிலாளியின் சொந்த வாழ்க்கை தெரிவது அவசியம். அவனின் குடித்தனப் பாங்கை வைத்து குணம் சொல்ல முடியும்.
முள் கிளையாகி, கிளையில் பிஞ்சு விட்டு பிஞ்சு காயாகி, சிவந்து, வெடித்த பிறகு இலவம் பஞ்சாய் பிரச்சனை பறந்துவிடும்.
ஸிக் வண்டிகள் என்பது, தயாரித்தவுடனே தயாரிப்பில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட வண்டிகள். ப்ரேக் சரியில்லை. வலது பக்க டயர் ஆடுகிறது, ஸ்டியரிங் திருப்புதல் கடினம், இன்ஜின் உயர்வேகத்தில் சலசலக்கிறது. கியர்கள் சிக்குகின்றன என்று பல்வேறு விதமான கோளாறுகளினால் ரிஜெக்டட் என்று சிவப்பு லேபிள் கட்டி ஓரமாய் நிற்க வைக்கப்பட்டிருக்கும். இவற்றை அஸெம்பிளி ஆட்கள் மறுபடி கவனித்து சீர்செய்து ஓட்டிக் காட்டிய பிறகே க்வாலிடி கண்ட்ரோல், மேலே கூடு செய்ய அனுப்பும். இதற்குப் பிறகே கூரையும் கதவும் சீட்டுகளும் கண்ணாடிகளும் பொருத்தப்பட்டு முழு வேனாக வெளியே வரும். அதுவரை வெறும் சேஸிஸ்... அதாவது, "ட்ரைவர் ஸீட்
...more
பசித்தபோது உணவு கிடைப்பது பெரிய வரம், அந்தப் பதினைந்து நிமிடம்கூடப் பொறுக்க முடியவில்லை. சிறிது உண்ட பிறகு வயிறு கூச்சல் அடங்கியது. உறக்கம் தழுவியது.
சரி... யாரையும் நம்பியாரும் இல்லை. பாண்டி வரவே முடியாது என்றால், பிரச்னையைத் தீர்க்கவே முடியாமலா போகும்.
எல்லாம் நீங்களா இழுத்துப் போட்டுக்கிட்டது தானே. ஜூரம்... தலைவலி... நல்லது, கெட்டதுக்குக் கூட லீவு போட முடியாத எதுக்கு இது?
வீட்டில் இருக்கிற பெண்பிள்ளைடீ. இது புரியாது தான். முதன்மையாய் நின்றவனை விட்டு விட்டு முடங்கிக் கொள் என்று சுலபமாய்ச் சொல்ல முடியுமே தவிர, இதன் கடுமை எத்தகையது என்று புரியாத குணம். ஆயிரம் தொழிலாளிகள் வேலை செய்யும் இடத்தில் முந்நூறு வோட்டு வித்தியாசத்தில் ஜெயித்தவன் உதறிவிட்டு சாதாரணத் தொழிலாளி ஆவது கடினம். பிரச்னைகளையே சந்தித்துச் சந்தித்துப் பழகியவன் பேசாமல் நகர்வது முடியாத காரியம். பட்டயமும் கவசமும் ஏந்திய போர் வீரன் காவித் துணியுடன், கமண்டலத்துடன் நடப்பது லட்சத்தில் ஒருவருக்குத்தான் முடியும். பளுதூக்கிப் பழகுபவனுக்குப் பளுவின் எடை கூடிக் கொண்டே போவதுதான் சந்தோஷம். பிரச்னையே இல்லை என்கிற
...more
கோபப்படுகிறவரிடம் கோபமாய்ப் பேசுவது ஜெயம் தராது.
பதறுகிறவரை இடைவெளி கொடுத்து வீழ்த்துவது எளிது.
தொழிலாளிக்குக் கொடுக்கப்படும் எந்த மானேஜ் மெண்ட் கடிதமும் யூனியன் மூலமாகவே போக வேண்டும் என்பது சட்டம். ஆங்கில அறிவு இல்லாத சட்ட நுணுக்கம் தெரியாத தொழிலாளி எங்கேனும் தவறாய் கையெழுத் திட்டுவிடக்கூடாது என்கிற கவனத்தில் கொண்டுவரப் பட்ட காரியம். ஒரிஜினல் மெமோவைக் கொடுத்து விட்டு, நகலில் சம்பந்தப்பட்டவரின் கையெழுத்து வாங்கித் தருவது யூனியன் லீடர் வேலை.
உளறுவாயன்"
மானேஜரை எந்நேரமும் எதிரி யாகவே நினைக்கும் ஆத்திரம், 'தனக்கு மேல் உள்ளவ னைக் கண்ணுல விரல்விட்டு ஆட்டறேன் பார் என்று பிறர் மெச்ச விரும்பிப் போடும் நாடகம்.
வாழ்க்கையில் நடிப்பவனுக்கு மன உளைச்சல்கள் அதிகம்.
வாழ்க்கை நாடகம் தான். எல்லாரும் எங்கோ ஓரிடத் தில் நடிக்கவேண்டியிருக்கிறது என்பது உண்மைதான். ஒரு சபை உன்னிப்பாய் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்கிற உணர்வு நடிகனுக்கு அவசியம். அந்த உணர்வுக்குப் பெயர்தான் மெண்டல் பேலன்ஸ். சபையின் நாடித் துடிப்பை உணர்ந்தபடியே நடிப்பவன்தான் சிறக்க முடியும்.
நரி. குள்ள நரி, ஆளுமையின் சுவை தெரிந்து விலகிக் கொண்டு, அதே சமயம் ஆளுமைக்கு ஆசைப்படுகிற நரி. இரவு முழுவதும் ஊளையிடுகிற நரி. எதற்கு ஊளையிடு கிறாய் நரியே என்று மான் கேட்டால், சிங்கத்தின் வருகையை உனக்குச் சொல்ல என்று பதில் சொல்லுமாம். எதற்கு ஊளை என்று சிங்கம் கேட்டால், மான் இருக்கும் இடத்தை உனக்குத் தெரிவிக்க என்று விடை கொடுக்கு மாம்.
புறங்கூறுபவர்களை ஒருவனுடைய வெற்றியே வாயடைக்கச் செய்யும். வலுவிழக்க வைக்கும்.
சொற்களைவிடத் தோற்றமே மக்களை முதலில் சென்றடை கிறது. ஒருவன் தோற்றம் கண்டே மக்கள் முதலில் மயங்குகிறார்கள். நம்பிக்கை கொள்கிறார்கள். நெருங்கிப் பேச, உறவாட வருகிறார்கள்.
பேச்சை மிதமாய், கம்பீரமாய், அதட்டலாய் பயன் படுத்தப் பயன்படுத்த இன்னும் மரியாதை காட்டுகிறார்கள்.
தெளிவில்லாத இந்த முழக்கங்கள் தான் அயர்ச்சியானவை.
அலட்டலா பேசறத நிறுத்து, பிரச்னையைப் புரிஞ்சுக்க. ஒன்னு கத்திட்டா உனக்கு எல்லாம் தெரியும்னு ஆயிடாது.
மூக்கிருக்கிற வரைக்கும் சளி இருக்கும். தொழிலாளி இருக்கிற வரைக்கும் பிரச்னை இருக்கும்.
"அக்கறைப் பச்சை சார்.''
இது இழப்பு நிச்சயம் கம்பெனிக்கு இழப்பு. ஆனால், கம்பெனி என்கிற ஸ்தாபனம் எந்தத் தனி மனிதனையும் நம்பியில்லை. எந்தத் தனி மனிதனும் தவிர்க்க முடியாதவன் இல்லை. பி. எஸ். இல்லாவிடில் ஒரு கே.எஸ்., ஒரு ஆர். எஸ். வருவான். யந்திரம் விடாது சுழலும்.
இரண்டு கை இருக்கு. உடம்புல உரம் உருக்கு பார்ப்போம்.''
மனசே வாழ்க்கை. எதை நினைக்கிறோமோ அதுவாக மாறுகிறோம். தொலைநோக்கு உள்ளவனுக்குத் துயர மில்லை. வரும் துயரமும் நீடிப்பதில்லை.... அடி விழாத வாழ்க்கை எவருக்குண்டு. வலியிலிருந்து மீள ஆசைப்படுபவனுக்கே வலியைத் துடைத்துக் கொள்ளத் தெரியும். வலியே சுகமாகிப் போனவனுக்குத்தான், புலம்பலே பேச்சாகிப் போனவனுக்குத்தான் துயரம் தொடர்கதை.
இப்படி ஏதாவது கழட்டிவுடலேன்னா செக்குமாடா ஒரே இடத்துல சுத்திக்கிட்டிருப்பேன். அடிபட்டு கயிறு அறுத்த பிறகுதான் உலகம் ரொம்பப் பெரிசுன்னு புரிஞ்சுட்டுது.
எந்த மரியாதையும் பொய். பயம்தான் மரியாதை. மரியாதைக்கு மகிழ்ந்துடக் கூடாது சரசு."
சுத்தி வந்துக்கிட்டிருந்தா எந்தக் கவலையுமில்லை. எவனுக்கு வேணா அடிமையா மண்டி போட்டு இருந்துடலாம். மேல மேலன்னு போற வனுக்கு இடறத்தான் செய்யும். கை புடிச்ச பிடி நழுவி ரத்தம் வரும், சறுக்கின இடத்துலேர்ந்து நகரணும், பல்லைக் கடிச்சுக்கிட்டு மேல ஏறணும். மலையேறி நிக்கறதுதான் வாழ்க்கைன்னு வந்துட்டா சறுக்கலுக்குப் பயப்படக்கூடாது சரசு.''
சில பிறவி வேற மாதிரி, எங்கேயும் மொத ஆளா நிக்கணும்னு உள்ள ஒண்ணு கிண்டிக்கிட்டே இருக்கும். கஷ்டம்னு தெரிஞ்சதும் தலை கொடுக்கும். தோள் கொடுத் துத் தனியாளா பாறை புரட்டும். புரட்டவே பொறந் திருக்கறதா நினைப்பு வரும். நான் அப்படி ஒரு பிறவி.''
தலைவனைத் தொண்டனாகக் கூட எங்கேயும் சேர்க்க மாட்டார்கள். அரசனை அடிமையாய் யாரும் சேர்க்க மாட்டார்கள். ஒருநாள் இல்லையெனினும் ஒரு நாள் அடிமையாய்ச் சேர்ந்த அரசன் ஆளுமைக்கு வந்து விடலாம். சிங்கத்தைக் கூண்டில் அடைத்து வளர்த்தாலும் சீறும். சற்று பிடி நெகிழ சிதற அடிக்கும். வேலியில் அமர்ந்த ஓணானை விலைக்கு வாங்குவானேன்.
"ஆத்திரம் ஆறாயிரம், ஏழாயிரம் சம்பாதிக்கணும்னு ஆத்திரம், ஒரு ஆளுக்கு அத்தினி காசு எதுக்குய்யா. வீடியோ பெட்டி, டி. வி. செட், சென்ட் பாட்டில், புடவை கொண்டாந்து கொட்டணுங்கற ஆத்திரம். ஏன், நூல் புடவை கட்டினா நிக்காதா. நம்மூர் டிவில படம் தெரியாதா. ஊர்ல கால் ஊன்றத்துக்கு கத்துக்கணும்யா ஒருத்தன்."
பசியற்று, தூக்கம் அற்று, பலமற்று அந்த வீட்டுத் தலைவன் சுருண்டு கிடந்தான்.
இப்போது சரசு வேலைக்குப் போகிறேன் என்கிறாள் குழந்தைகளுக்கு டப்பாவில் அடைத்துக் கொடுத்துவிட்டு. ஆறு மணிக்கு சூரியன் சரிகிறபோது வந்து சமையல் துவங்கப் போகிறாள். பசித்துத் தவிக்கிற குழந்தைகளை பத்து நிமிஷம் உக்காருங்க, என்று அதட்டி விட்டு அது களைத் தட்டோடு காத்திருக்க வைத்து, அடுப்பிலிருந்து அரைவேக்காடாய் இறக்கிப் பரிமாறப் போகிறாள். சாயந் திரம் பசிச்சா, ஆளுக்கு நாலணா பிஸ்கட் சாப்பிடுங்க என்று முடித்து விடப் போகிறாள். குழந்தைகள் பசிக் கடுப்பில் மோதிக்கொள்ளும். ஒன்றையொன்று பிறாண்டும். ஆத்திர மாய் வளரும். இப்படிக் குழந்தைகளை வளர்ப்பதற்குப் பதில் கொன்று போடலாம்.
''நீ பாட்டி வீட்ல இருந்து படி'' என்று பிரித்துப் போடலாம்.''
மூலைக்கு ஒருவராய்ப் பிரிந்து ஒருவரையொருவர் நொந்து கொள்ளலாம். குற்றம் சாட்டலாம். பிரிந்து நெடுநாளைக்குப் பிறகு கூடுகிறபோது கூடப் பொருமல் தாங்காமல் குறை சொல்லி அழலாம். வாழ்க்கை அழுகையாய்,...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
தகப்பனும் தாயும் மூலைக்கு ஒன்றாய் ஓட, குழந்தைகள் ஒவ்வொரு செயலுக்கும் இடம் வலம் தேடித் தவிக்கும். குதூகலம் மறைந்து குழம்ப நேரிடும். பாடத்தில் கவனம் சிதறும்.
எவளுக்கோ தாலி கட்டின கை, எவரையோ கும்பிட்ட கை, எதற்கோ கரகோஷம் செய்த கை, எந்தக் குழந்தையையோ தடவி இறுக்கிய கை, அநாதை யாய் மண் புழுதியில் கிடக்கிறது. சற்றுமுன் இது சட்டைப் பித்தான் போட்டிருக்கும், தலை சீவியிருக்கும். முகம் அலம்பியிருக்கும். வேட்டி வரிந்து கட்டியிருக்கும், இப் போது வானம் பார்த்துக் கிடக்கிறது. என்னால முடியாது இனி என்று விரிந்து கிடக்கிறது. மான அவமானமெல்லாம் பார்த்துப் பார்த்து பட்டுப் பட்டுத் தாங்க மாட்டாது தனியே பிரிந்து கிடக்கிறது.
பொச்சரிப்பு.'
பழைய ரவிக்கைதான் கைப்பிடித்துணி என்று நினைவுபடுத்திக் கொள்ளவே சற்று நேரம் ஆயிற்று.
கவனமாய்ச் செய்தால் எந்த வேலையும் செய்ய லாம்.
சீப்பாயிடும். எங்க ஒட்டணும், எவ்வளவு ஒட்ட ணும்னு தெரிஞ்சுக்கிட்டா எல்லார்கிட்டயும் சிநேகிதம் இருந்துடலாம்."

