More on this book
Community
Kindle Notes & Highlights
கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை!”
தெய்வத்தைத் தொழாமல் தன் கொழுநனாகிய தன் தலைவனைத் தொழு கின்றவள் மழையைப் பெய்யென்றால் பெய்யும் என்றும்; தன்னைக் கொண்டவன் என்றும் இம்மாதிரியான பல அடிமைக்குகந்த கருத்துகள் கொண்ட வாசகங்கள் காணப் படுகின்றன.
இந்நிலை சட்டத்தாலும், மதத்தாலும் மாத்திரம் ஏற்பட்டதென்று சொல்தற்கில்லாமல் பெண் சமூகமும் ஒப்புக் கொண்டு, இந்நிலைக்கு உதவிபுரிந்து வருவதனாலும் இது உரம் பெற்று வருகிறதென்றே சொல்ல வேண்டும்.
நாம் வேண்டும் பெண்உரிமை என்பது என்னவெனில், ஆணைப் போலவே பெண்ணுக்கும் வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதேயாகும்.
இந்தப்படி சொல்கின்றவர்களை எல்லாம் உலகனுபவமும், மக்கள் தன்மையின் அனுபவ ஞானமுமில்லாதவர்களென்றோ, அல்லது இயற்கைத் தன்மையையும் உண்மையையுமறி யாதவர்கள் என்றோ, அல்லது உண்மையறிந்தும் வேறு ஏதாவ தொரு காரியத்திற்காக வேண்டி வேண்டுமென்றே மறைக் கின்றவர்களென்றோதான் கருத வேண்டியிருக்கின்றது.
ஏனெனில், ஆண்மை என்னும் பதமே பெண்களை இழிவு படுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது என்பதைப் பெண்கள் மறந்துவிடக் கூடாது.

