More on this book
Community
Kindle Notes & Highlights
வாழ்வு என்பதும், மனிதர்கள் என்பதும், மனிதரைப் புரிதலே வாழ்வினைப் புரிவது என்பதும்தானே அடிப்படையான உண்மை.
கதிரேசனை, ‘ஒரு முத்தம்தான் கேட்டான். தராமல் விட்டுட்டேன்’ என்று காற்றில் கைவீசிப் புலம்பும் ஸ்டான்லி மருத்துவமனைப் பெரியம்மாவை.
தொடர்ந்து பொருள்வயிற் வாழ்வுக்கும் அதிகாரத்துக்கும் எதிரான மனநிலையிலேயே வாழும் ஜீவன் நான். அப்படியான உலகத்தில் ஒட்டாமல் எளிய மனசுகளை நோக்கியே ஓடிக்கொண்டு இருக்கிறது என் மனம். அதுதான் உண்மையான சந்தோஷமாக இருக்கிறது. எழுதுவதும், பேசுவதும், சினிமா எடுப்பதும் அந்த சந்தோஷத்துக்காக மட்டுமேதான். சக மானுடர்களின் அன்பும் அரசியலும்தான் எனது ஜீவனம்... இலக்கியம்... திரைப்படம்... எல்லாமே.
பசி... காலத்தையும் கோலத்தையும் அரித்துக்கொண்டு, அழுகைக்கும் சிரிப்புக்கும் நடுவே ஊர்ந்துகொண்டே இருக்கும் நிதர்சனக் கரையான்!
‘திண்ணையில் உட்கார்ந்து மாமா கத்தும்போது, கொல்லையில் மீன் ஆய்ந்துகொண்டு இருந்த அத்தையா இது?!’ என, இப்போதும் ஆச்சர்யமாக இருக்கிறது.
‘‘நான் பிறக்கவும் இல்லை; இறக்கவும் இல்லை. இந்தப் பூமிக்குச் சில காலம் வந்து தங்கிப் போகிறேன்னாரு... இதுலேர்ந்து என்னா தெரியுது?’’
‘‘நாமெல்லாம் கெஸ்ட்டு சார். நீயும் நானும் சீஃப் கெஸ்ட்டு!’’
உண்மையில் காலம் ஒரு மெகா சீரியல் மாதிரிதான் இருக்கிறது. கண்ணெதிரே எதையெதையோ கலைத்துப் போட்டுவிட்டு, ஒன்றும் அறியாத சிறுபிள்ளை மாதிரி ஓடி ஒளிந்து விளையாடிக் கொண்டே இருக்கிறது அது. எதை வெறுத்தோமோ, அதை விரும்புகிறோம். எதை விரும்பினோமோ, அதை வெறுக்கிறோம்.
எல்லாவற்றையும் நினைத்துத் தேம்பும்போது காலம் கைகளில் தருவது இன்னொரு தலைமுறையைத்தான். நாம் தொலைத்ததை மகனிடம், மகளிடம் தேடுகிறோம்.
அதற்கு அம்மா சொல்வாள், “போடா... ரெண்டு வருஷமாத் தினமும் இதைத்தான் செய்றேன்...”
கனவுக்கும் யதார்த்தத்துக்கும் நடுவில் அனுதினமும் அலைந்து திரியும் ஆயிரமாயிரம் நண்பர்களில் நானும் ஒருவன்.
அறைக்கு நடக்கும்போது தோன்றுகிறது. இந்தப் பெருநகரத்தின் மீது ஒவ்வொரு நாளும் எத்தனைக் கனவுகள் பொழிகின்றன.
லிங்குசாமி சார் அடிக்கடி சொல்வார், ‘‘முருகன்... இது நம்ம கையில கிடைச்ச விளக்கு. மழை, புயல், வெள்ளம்னு எது வந்தாலும், இதை அப்பிடியே பொத்திப் பாதுகாத்து அணையாமக் கொண்டுபோய்ச் சேர்த்துரணும்!’’
அது தப்பு... கடவுள், மனுஷன் ரத்தத்துலயே கொஞ்சம் சாராயத்தைக் கலந்துவிட்டு இருக்கான். பணம், காதல், புகழ், படைப்பு, அதிகாரம், ஆன்மிகம்னு ஒவ்வொண்ணும் போதைதான்.
போட்டா, பாதையே மாறிப்போகும். உன் போதையை சாராயத்துல இல்லை... நல்ல விஷயத்துல போடு!’
உண்மைதான். இந்த உலகத்தின் ஒவ்வோர் அணுவிலும் போதை இருக்கிறது. ஒற்றைக் கோவணத்தோடு கரடு முரடான மலைப் பாதையில் அடிவானம் நோக்கி ரமணர் நடக்கிற ஒரு புகைப்படத்தில் மகத்தான போதை நிரம்பி வழிகிறது. பல ஆண்டுகள் அதிகார வெறியர்களின் வீட்டுக் காவலில் இருந்து வெளியே வந்து மக்களுக்குக் கை க...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
‘‘மனசே சரியில்லை பீச் போலாமா? பார்க் போலாமா? பார் போலாமா? பேசாம, வூட்டுக்குப் போ நைனா!’’
‘‘படைச்சு அனுப்பிட்டா மட்டும் போதுமா முருகா? என்னை எப்பிடி வெச்சிருக்காங்கனு அவங்களுக்கு உறைக்க வேணாமா..? அதான் எல்லோரையும் கொண்டுவந்து உக்காரவெச்சிருக்கேன்.’’
‘காலை இளவெயிலின் காட்சி - அவள் கண்ணொளி காட்டுகின்ற மாட்சி நீல விசும்பினிடை இரவில் சுடர் நேமி யனைத்துமவள் ஆட்சி’ - என்ற பாரதியின் வரிகள் அசரீரியாக ஒலிப்பதுபோல் ஒரு பிரமை தோன்றியது.
‘உலகின் பெரும் பிணி... உறவுகளும் பற்றுகளும்தான்’ என்றாள். ‘எந்தச் சூழ்நிலையில் உன்னை வைத்திருந்தாலும் மனம் உடைந்துபோகாமல், அதற்காக கடவுளுக்கு நன்றியுடன் இரு. நடப்பவை எல்லாம் அவரின் ஆசீர்வாதம்’
‘‘மார்க்சிய சிந்தனைகளைப் படிச்சுத் தேறின பின்னாடி, இயற்கைதான் உலகம். கடவுள்னு ஒரு விஷயம் கிடையாதுனு உறுதியா நம்ப ஆரம்பிச்சுட்டேன்
முருகன்.
‘ஒரு கணம் கண் மூடினால், ஒரு கோடி மின்னல் மின்ன வேண்டும்’
‘‘நாத்திகன் என்று சொன்னால், கடவுள் இல்லை என்று சொல்கிறவன் இல்லை. நான் கடவுள் இல்லை என்று சொல்கிறவன் இல்லை, இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளவும் இல்லை. புராண, இதிகாச, வேத சாஸ்திரங்களை ஒப்புக்கொள்ளாதவர்களையே பார்ப்பனர்கள் ‘நாத்திகன்’ என்று குறிப்பிடுகின்றனர்’’ என்கிறார்.
‘‘சாதி உள்ளிட்ட குரூரங்களையும், மூடநம்பிக்கைகளையும், மத துவேஷங்களையும் கடப்பதுதான் இறைவழியின் முதல் படி’’ என்கிறார் பரமஹம்சர்.
‘முழுமையின் உள்பக்கம்தான் கடவுள் என்பது. ஆனால், ஒருவர் தன்னுள் இருக்கும் நுழைவாயில் வழியாகத்தான் அதனுள் நுழைய முடியும்’ என்கிறார் ஓஷோ. ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்பதும் ‘அன்பே சிவம்’ என்பதும் கருணை என்ற சொல்லின் எச்சம். கடவுள் என்பது கருணை என்ற சொல்லின் உச்சம்!
நம்பிக்கை இன்மை நிறைந்த மனித உறவுகளை மனதளவில் துரத்தியவர்கள், பிராணிகளின் பேசா அன்பை நிழலாக்கிக் கொள்கிறார்கள்!
டேய்... தோட்டத்துக்கு வந்தப்ப நீ நட்டுவெச்ச தேக்கு இப்போ மரமாகிருச்சுரா...’’ என மொபைலில் சௌபா அண்ணன் வருகிறார். திடீரென்று மனசு சந்தோஷமாகிறது. இனம் புரியாத உற்சாகமாகிறது. பெரும் நம்பிக்கை உள்ளே தழைக்கிறது. சில
வார்த்தைகள்தான்.... ஒரு செயல்தான்... ஒரு விடியல். இந்த மழைக் காலத்தில் யார் யாரோ வைத்த எத்தனையோ செடிகள் வளரும் என்கிற நம்பிக்கைதான் இன்னொரு கோடையைக் கொண்டுவருகிறது. செடிகள் என்பது செடிகள் மட்டுமே அல்ல!
ஒரு சமூகத்தின் முதல் நீதி பள்ளிக்கூடத்தில்தான் பிறக்கிறது. டீச்சர்களிடம் இருந்துதான் ஒவ்வொரு சமூகமும் முதல் ஒளி வாங்கிக்கொள்ள முடியும்!
‘கடலோரக் கவிதைகள்’ படத்தை இதுவரை அம்பது, அறுபது தடவை பார்த்-திருப்பேன். ஒரே காரணம், ஜெனிஃபர் டீச்சர். பாதி நிழலும் பாதி வெயிலுமாய் ஓர் ஒளி விழுந்திருக்க, சர்ச்சுக்கு வெளியே நின்று, ‘டீச்சர்... டீச்சர்... எனக்காக கடவுள்ட்ட பிரார்த்தனை பண்ணுவீங்களா டீச்சர்’ என சின்னப்பதாஸ் கெஞ்சுவது மாதிரிதான் நாமும். நமக்கான பிரார்த்-தனைகள் எப்போதும் அவர்களிடம்தான் இருக்கின்றன.
மனித வாழ்க்கையை, ‘துயரங்களின் நகைச்சுவை’ என்றார் சாப்ளின். படித்ததிலேயே எனக்கு மிகவும்
அது சரி... வாழ்க்கையைக் காமெடியாகப் பார்க்காவிட்டால், நம்மில் பல பேர் ஐ.சி.யூ. க்ளைமாக்ஸில்தான் கிடப்போம்!
‘சமூகம்’ என்கிற வார்த்தைதான் இருப்பதிலேயே சூப்பர் காமெடி என்பது என் தாழ்மையான அபிப்ராயம். இந்தச் சமூகத்தால் எதுவெல்லாம் மிக சீரியஸாகக் கொண்டாடப்படுகிறதோ... அது எல்லாமே மிகப் பெரிய காமெடிதான்.
எனக்குத் தெரிந்து, இல்லாதப்பட்டவர்கள்தான் சிரிக்கிறார்கள். காமெடியை அனுபவிக்கிறார்கள். இரவுகளில் பிளாட்ஃபார்மில் எஃப்.எம். கேட்டுக்கொண்டு, கறிக் குழம்பு ஆக்கிக்கொண்டு,
குடும்பமாகக் கூடிச் சிரிக்கிறார்கள். பர்மா பஜாரில் அம்பதுக்கும் நூறுக்கும் உடல் விற்று, பொக்னா சோறு வாங்கித் தின்னும் மங்கைகளும் திருநங்கைகளும் இந்தச் சமூகத்தை எவ்வளவு காமெடி பண்ணிச் சிரிக்கிறார்கள் தெரியுமா?
ஒரு காலத்தில், நாம் துயரங்களோடு கடந்துவந்த ஃபீலிங்குகள் எல்லாமே ஒரு கட்டத்தில் காமெடியாகிவிடுகின்றன. காதலிக்காக கையைக் கிழித்துக்கொண்டது, தூக்க மாத்திரை தின்றது, நண்பனுக்காகச் சண்டை போட்டது, உறவுகளிடம் மல்லுக்கு நின்றது, அலுவலகத்தில் கொந்தளித்தது, எவனுக்கோ சூனியம் வைத்தது, பழிவாங்கத் துடித்தது... எல்லாமே காலத்தால் காமெடியாகி நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றன!
எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கிற தோழர் ஒருவரிடம் எரிச்சலாக ஒரு முறை கேட்டேன், ‘‘உனக்கு எதையும் சீரியஸாவே பார்க்கத் தெரியாதா?
எதுக்கு எப்போ பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டே இருக்கே. இங்கே எல்லாமே உனக்குக் காமெடியா?’’ அதற்கும் அவர் சிரித்தபடியே சொன்னார், ‘‘சீரியஸாப் பார்க்க ஆரம்பிச்சா... செத்துரு...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
‘மைனராக இருந்த மானுடம், புத்தகங்களின் அறிமுகத்துக்குப் பிறகுதான் மேஜரானது’ என வலம்புரிஜான் சொன்னது எவ்வளவு உண்மை?
புத்தகங்களும் வாசிப்பும்தான் நல்ல மனதை, கனவை, தேசத்தை உருவாக்கும்!
சம்பளம், அன்றாடம், சமூகத் தேவைகள் என்பதைத் தாண்டி... வேலை என்பது விருப்பம் சார்ந்த விஷயமாக இருப்பதுதான் இங்கே பெரிய பிரச்னை.
அலைகடலும் அவரே ஆழ்கடலும் அவரே என்றான பின், கரைகளும் நுரைகளும் என்னவாகும்?
எனது 20 வருடங்களை நடத்தியதும் ராஜாதான். அவரைப் பற்றி எழுதவே போரடிக்கிறது. காதலியிடம் முத்தம் கேட்பதைப் போல... மனைவியிடம் திட்டு வாங்குவதைப் போல... அம்மாவைப் பற்றி கவிதை எழுதுவதைப் போல!
பறவைகள் தடயங்களே இல்லாமல் போய்விடுகின்றன. அவற்றின் எச்சங்கள் மரங்களாவதைப் போலத்தான் இந்த இசையும் பாடல்களும்.
‘துன்பம் இனியில்லை சோர்வில்லை தோற்பில்லை...’
யுகங்களின் காத்திருப்பை ஒரு நொடியின் தரிசனம் துடைத்தெறிவது மனித வாழ்வில்தான் நடக்கும். காத்திருப்பின் வலியைச் சுகமாக்கும் உயிர்கள்தான் பிரபஞ்சத்தின் பெருங்கொடை இல்லையா?
‘‘மத்தவங்களுக்காக
ஏதாவது பண்ணும்போதுதான் நாம உயிரோட இருக்கிற ஃபீலிங்கே இருக்கு தம்பி!’’
எனது அன்பு, கோபம், மனிதம் இதை எல்லாம் முழுவதுமாக வெளிப்படுத்த முடியாமல் எந்த அரசியலாவது தடையாக இருந்தால், அது எனக்கு வேண்டாம்"