More on this book
Community
Kindle Notes & Highlights
என்றார் வினோபா பாவே.
‘இனி எப்படி இருக்கப்போகிறோம்’ எனக் குலைத்துப் போட்ட மரணங்களும் பிரிவுகளும் கடந்துபோய், நம்முன் புதிய மனிதர்களோடும் கனவுகளோடும் விடிந்துகொண்டே இருக்கின்றதே நாளை.
அந்த வரவேற்பறையில் இருந்த தொட்டியில் அலைந்துகொண்டு இருந்த கலர் மீன்கள், சட்டென்று குதித்து தங்களுக்கான நதிக்குப் போய்விட்ட மாதிரி இருந்தது எனக்கு.
‘இதுவும் கடந்து போகும்’ என்ற வார்த்தைகளில் இருந்து ஓர் எழுத்து நொறுங்கித் தூளாகி, இன்னோர் எழுத்து இறுகிச் சேர்ந்துகொண்டது... ‘எதுவும் கடந்து போகும்!’
இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல், பண வேட்கை... எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது! வாழ்க்கையை அதன் உண்மையோடும் அன்போடும் கொண்டாடுபவர்கள் இந்த மாதிரியான எளியவர்கள்தான்.
வாசலில் மாஞ்செடிகளும் தென்னங்கன்றுகளும் வைத்து குழந்தைகள் மாதிரி தினமும் அவற்றுடன் பேசுபவர்கள், தெருக் குழந்தைகள், எல்லோருக்குமாக ஃப்ரிஜ்ஜில் கேக் வாங்கி வைப்பவர்கள், ஆஸ்பத்திரியில் படுத்துக்கிடக்கும்போது, பக்கத்து பெட்காரருக்கும் சேர்த்து மணத்தக்காளி ரசம் செய்துவரும் குடும்பம், ஏதோ சண்டையில் பேசாமல் போனவரை அப்பன் செத்துப்போய்க் கிடக்கிற எழவு வீட்டில் பார்த்ததும் கையைப் பற்றிக்கொண்டு கதறி முன்னிலும் நெருக்கமாக ஆகிவிடுகிறவர்களை,
அவசரத் தேவைக்கு கல்லு வைத்த வளையலை அடகு வைத்துவிட்டு, ‘இதுக்கென்ன... ஏங்கைக்கு எடுப்பாத்தான இருக்கு...’ என ரப்பர் வளையல்கள் வாங்கிப் போட்டுக்கொண்டு, கணவனிடம் சிரிப்பவர்களைப்போல் இருந்துவிட்டால்... அதைவிட வேறென்ன வேண்டும் இந்த வாழ்வில்?
அறியாமையைவிடவும் பெரிய சந்தோஷம் எதுவும் இல்லை. இந்த வாழ்க்கையை அதன் போக்கில்
அனுபவிக்க, அறிவுதானே பெரிய தடையாக இருக்கிறது? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ஜோதி மாதிரி நிம்மதியான வாழ்க்கையை வாழவிடாமல் என்னைத் துரத்தி அடிப்பது இந்த அறிவு முகமூடிதான் எனத் தோன்றுகிறது. எதையேனும் அடையத் துடிக்கிற மனம்தான் இந்த வாழ்வின் சாபம் என நினைக்கிறேன். இந்த வாழ்வை, சமூகத்தை, அரசியலைச் சிக்கலாக்குவதும் குழப்பியடிப்பதும் சிதைப்பதும் அறிவாளிகள், லட்சியவாதிகள் எனப் பெயரிட்டுக்கொண்டவர்களின் மூளைகள்தான். அன்பை, கருணையை, ஈரத்தை, கோபத்தை அதன் போக்கில் வெளிப்படுத்தாமல், ‘அறிவு’ தரும் முகமூடிகள்தான் இருப்பதிலேயே குரூரமானவை.
சாகும்போது குழந்தைகளிடம் மன்னிப்புக் கேட்கும் ஒரு மனம் ஓர் எளிய மனிதருக்குத்தான் வாய்க்கும்.
அவரைப் போன்ற அன்பனாய், அற்புதனாய், லட்சியவாதியாய் ஓர் புத்திசாலியால், அறிவாளியால் ஆகவே முடியாது என்பதும் உண்மைதானே!
அன்பை, அவஸ்தையை, பிரியத்தை, பிரிவை, நினைவை அள்ளி அள்ளி இறைத்தபடி பெய்கிறது மழை. கோடம்பாக்கத்தில் தங்கியிருக்கும் நண்பனுக்கு, இலங்கை மாணிக்ஃபார்ம் அகதிகள் முகாமில் இருக்கும் அவனது அம்மாவிடம் இருந்து வந்திருக்கும் ஒரு கடிதம் இப்படித் தொடங்கியிருந்தது,
‘நானும்கூட ராஜாதானே நாட்டு மக்களிலே அட, நாணமென்ன வெட்கமென்ன காசு கேட்பதிலே...’
‘ஒவ்வொருவர் வாழ்க்கையும் அரசியல்தான்... நாம் ஒவ்வொருவரும் அரசியல்வாதிதான்... ஒவ்வொரு நாளும் போராட்டம்தான்... ஒவ்வொருவரும் போராளிதான்... போராட்டம் இல்லையென்றால் வாழ்க்கையா... இதை அறியாதவர் யாரும் மனிதரா..?’
இதுதான் பயணங்களின் பேரற்புதம். மறுபடி கண்டடைய முடியாத மனிதர்கள், முகங்கள், சொற்கள், நினைவுகள், காட்சிகள்! நம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு முறையும் மீள் உருவாக்கம் செய்பவை பயணங்கள்தான்.
மரக்கிளை தூளியாவதும், சுவர்களின் கிறுக்கல்கள் ஓவியமாவதும் குதப்பித் துப்பும் ஒரு சொல் காவியமாவதும் குழந்தைகளால்தானே?
‘அந்தக் குட்டிப் பாப்பா விடும் பேப்பர் கப்பலில் கரை சேர்ந்துவிடக்கூடும் இந்த மானுடம்!’
பல நேரங்களில் அறிவும், கோபமும், ஈகோவும் நமது குழந்தைமையின் மேலே ஏறி நின்றுகொள்கின்றன பெரிய மனிதர்களின் வேஷத்தைப் போட்டுக்கொண்டு!
எல்லோருக்குமான பிரார்த்தனைகளைச் சுமக்கும் கடவுளின் பிரார்த்தனை என்னவாக இருக்கும்? ‘ஆளை விடுங்கடா சாமீ...’ என்பதா?
இருக்கும்? ‘மனிதர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்று... மதங்களை நானே பார்த்துக்கொள்கிறேன்’கிறதா இருக்கும்.’’
‘‘கெட்ட பழக்கங்கள் நல்ல பாம்பைப்போல... பட்டெனத் தூக்கி வீசிவிடு’’ என்கிறார் பரமஹம்சர்.
‘‘நாம பண்ண சீனுக்கு தியேட்டர்ல ஆடியன்ஸ் கை தட்னாங்கன்னா... அப்ப ஜிவ்வ்வுனு இருக்கும் பாருங்க... அதான் உண்மையிலேயே போதை...’’
என்பார் லிங்குசாமி சார். ‘‘உதவி பண்றதே ஒரு போதைதாங்க... யாருக்காவது எதாவது பண்ணிட்டா கிறுகிறுனு சந்தோஷமா இருக்கும். யாராவது வாழ்த்திட்டா பொசுபொசுனு பூத்துக்கும். அதை உணர்ந்துட்டா நாலு பேருக்கு எதாவது பண்ணிக்கிட்டே கெடப்போம்ங்க!’’ எனத் தோழர் அருளானந்தம் ஒரு
முறை சொன்னபோது, ‘அடடா... இதெல்லாம்தானே போதை!’...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
இந்த மனசையும் மனிதர்களையும் இருமுடியாகக் கட்டிக்கொண்டு ஆயுசுக்கும் பரதேசியாக வாழ்வதே ஆகச் சிறந்த போதைதான்!
‘‘சுரண்டல் அரசே சுரண்டல் அரசே... அந்நிய சந்தையில் மக்களை விற்காதே...’’ எனத் தகிக்கும் தார் சாலையில் கோஷம் போட்டுத் திரும்பும்போது வரும் ஒரு சின்ன நிறைவும், போதைதான்.
மிக நுணுக்கமாக நுழைந்து சாதி பார்ப்பதும், ஆள் அம்பு பார்த்து அன்பு வைப்பதும், எளியவர்களிடம் அரசியல் செய்வதும், அடுத்தவன் உழைப்பில் தனக்கான நாற்காலியைத் தயாரித்துக் கொள்வதும், விருப்பமில்லா இதயத்தை எடுத்துக்கொள்வதும், சிரிக்கச் சிரிக்க வதந்தியும் சீரியஸுமாகப் பொரளி சொல்வதும்... எல்லாம் எவ்வளவு பெரிய கெட்ட பழக்கங்கள்? புகை, குடி மாதிரி மனதின் எல்லா அழுக்குகளையும் தூக்கி தூர வீசி விடுகிற ஒரு தருணம் ஆயுசுக்குள் வந்துவிடுமா?
அந்த ரயில் நிலைய ஆசாமி எனக்குள் சித்திரமாகிவிட்டார். அவரைப் போலத்தான் இருக்க வேண்டும். வெளிப்படுத்திக் கொள்வது அல்ல... செயல்கள்தான் நல்ல பழக்கம், இல்லையா?
‘பிரித்துப் பிரித்து நிதம் மேகம் அளந்தே பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை’
நம் நினைவுகளோடும் உணர்வுகளோடும் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் உயிர் இருக்கிறது என்று.
உன் வாழ்க்கையிலயும் என் வாழ்க்கையிலயும் ஒளியடிச்சவன் பூராம்
யாருடா? ரத்த சொந்தமா? அங்காளி பங்காளியா? நம்மள நேசிச்சதும் தூக்கிவிட்டதும் எங்கெங்கு இருந்தோ வந்த யார் யாரோதானடா... எவ்வளவு பேரு சேந்துடா நம்மள உருவாக்குறான்? நாம எல்லாருக்கும் சொந்தம்ரா. எல்லாரும் நமக்குச் சொந்தம். அதுக்கு நட்பு... அன்பு... அது இதுனு எதுனா பேர் வையி. ஆனா, எல்லாம் ஒறவுதான்!’’
யார் யாரின் நெஞ்சிலும்
தோளிலும் கிடந்த நாம், அண்ணனாக, மாமனாக, சித்தப்பனாக, அப்பனாக மாறுகிற தருணங்கள் அற்புதமானவை, துயரமானவை, அழகானவை.
‘செத்தா வந்து சேந்துருங்கய்யா... வேல கீலனு ஒருநா பாக்காதீங்க. சீவன் தேடும்யா’ என சத்தி தாத்தா போனில் தழுதழுத்தபோது என்னவோ போலிருந்தது.
இந்த மனசு நமக்கே தெரியாம நிறைய விஷயங்களைச் சேத்துவெச்சுக்கும்... சீழ் பிடிக்கிற மாதிரிதான். அப்புறம் கெடந்து அனத்திட்டே கெடக்கும். ஐ திங்... வெயிட்டிங்தான் உங்க பிரச்னை. காத்திருப்பு... லைஃப்ல நெனச்சது அமையாமத் தள்ளிப்போயிட்டே இருக்கிற தவிப்பு. அது தர்ற அழுத்தம். அதான் பிரச்னை. முதல்ல ஃபீல் ஃப்ரீ...’’
பத்மா... சார் கிளம்புறாங்களாம்...’’ என்றதும் மிக மெதுவாக வந்து வாசலில் சாய்ந்து நின்றார் பத்மா. வெளியே வந்து தெருமுனை வரை நடந்து வந்தவர் விடை பெறும்போது சொன்னார், ‘‘சார்... என்னவோ இப்பிடி ஆயிருச்சு... இப்பிடி அவளப் பாத்துக்கறது எனக்குச் சந்தோஷமாத்தான் சார் இருக்கு. இப்பதான் சார் என்னோட லவ்வ அதிகமாக் குடுக்கறேன். எனக்கு அவ... அவளுக்கு நான். அந்த வாசக்
கோலத்த அவ முழுசாப் போட்டுருவா சார். இங்க பாருங்க சார்... என்னையக் கேட்டா ஒரே வரில சொல்லிப்புடுவேன்... லைஃப் இஸ் பியூட்டிஃபுல் சார்!’’ அந்த இரவின் தெருமுனையில் நின்று அவர் சொன்ன அந்த வார்த்தைகள் எனக்கு விடியலைப்போல இருந்தது.
இசை என்பது ஒரு வடிவம். அதைத் தொடவும் முடியும் என்பதை அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தபோதுதான் உணர்ந்தேன். லைஃப் இஸ் பியூட்டிஃபுல்!
பெருநகரத்தின் இவ்வளவு நெரிசலான சாலையில் இப்படி ஒருத்தி பூங்கொத்து விற்றுக்கொண்டு இருப்பதை யார் அறிவார்? அவள் புன்னகை தரும் ஆயிரமாயிரம் பூங்கொத்துகளை யார் தருவார்?