அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம், ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை
Rate it:
0%
Flag icon
திராவிடர் கழகம் திராவிட உணர்வுகளைப் பரப்பத் தொடங்கியபோது, இராவணன், இரணியன், நரகாசுரன், கம்சன் ஆகியோரைப் பற்றிய கதைகளையெல்லாம் எடுத்துச் சொல்லி, இம்மாந்தர்கள் அந்நாளைய திராவிட உணர்வோடு திகழ்ந்த திருவினர் என்றும், இவர்களை இழிவாக எடுத்துக் காட்டுவது தமிழினத்தைத் தகர்ப்பதற்கான சமுதாயச் சாடல் என்றும் பெரியார் மேடைதோறும் இடிமுழக்கம் செய்து வந்தார். இராவண காவியம் என்றே புலவர் குழந்தை இராவணனைத் தலைமகனாகக் கொண்டு ஒரு காவியப் பனுவல் பாடினார்.
0%
Flag icon
தமிழர்கள் அசுர இனத்தவர்கள் இல்லை என்ற தலைப்பிலேயே தமிழறிஞர்களும் இராவணன் வித்தியாதரனா, இராவணன் ஆரியனா என்றெல்லாம் அந்நாளில் மறுப்புகள் எழுதி வந்தனர்.
0%
Flag icon
‘கீமாயணம்’ என்ற நாடகத்தை நடிகவேள் எம்.ஆர்.இராதா, தமிழகத்தின் சிற்றூர்களிலெல்லாம் நடத்திச் சீர்திருத்தப் புயலை எழுப்பினார்!
0%
Flag icon
பேரறிஞர் அண்ணாவும் தன்மான இயக்கத்தின் தலைவராக இருந்த நிலையில், இராம காதையை இழை இழையாகப் பிரித்துத் தம் எழுத்தழகோடு இணைத்து, இலக்கியத் திறனாய்வு நாடகமாக, இராவணன் பெருமை காட்டும் ‘நீதிதேவன் மயக்கம்’ என்ற ஒரு நாடகத்தைத் தாமே நடித்தும் காட்டினார்!
1%
Flag icon
சமூகமும் அரசும் எல்லா இடங்களிலும் ஒன்றில்லை. அது ஒன்றுபோல இருக்கும், ஆனால் ஒன்றில்லை என்பதுதான் உண்மை. ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு பகுதியிலும் அரசுமுறை, பண்பாட்டு நெறிப்பாடு, நீதிமுறை, ஒழுக்க விதிகள் ஆகியவை மாறுபட்டு இருக்கின்றன.
1%
Flag icon
பாரம்பரிய இந்தியத் தத்துவஞானமானது, ஒருவர் தனது அடிப்படை உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. அதோடு அறிவு மட்டுமே ஒப்புயர்வற்றது என்றும் அது முழங்குகிறது. கோபம், கர்வம், பொறாமை, மகிழ்ச்சி, வருத்தம், பயம், சுயநலம், தணியாத விருப்பம், லட்சியம் ஆகிய ஒன்பது அடிப்படை உணர்ச்சிகளை வெறுத்து ஒதுக்குமாறு மகாபலிப் பேரரசன் ராவணனுக்கு போதிக்கிறான். அறிவு மட்டுமே வணக்கத்துக்கு உரியது என்றும் அவன் எடுத்துரைக்கிறான்.
1%
Flag icon
தான் இந்தப் பத்து முகங்களைக் கொண்டிருப்பது தன்னை ஒரு முழுமையான மனிதனாக ஆக்குவதால், தான் அவை குறித்துப் பேருவகை கொள்வதாக மகாபலி அரசனுக்கு ராவணன் பதிலளிக்கிறான்.
3%
Flag icon
எங்களது தர்மம் எளிய விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது: ‘ஒரு மனிதன் தனது சொல்லுக்கு உண்மையாக இருக்க வேண்டும். அவன் தனது இதயத்திலிருந்து பேச வேண்டும். தான் தவறு என்று கருதும் எந்தவொரு விஷயத்தையும் அவன் செய்யக்கூடாது. தான் தோற்கப் போவது உறுதி என்ற நிலையிலும்கூட அடுத்தவரை ஏமாற்றக்கூடாது. பெண்கள் மதிக்கப்பட வேண்டும். யாரையும் ஏளனம் செய்யக்கூடாது. நியாயமின்மை இருந்தால், எந்த விலை கொடுத்தாவது அதை நாங்கள் எதிர்த்தாக வேண்டும். பண்டைய அசுரர்கள் அல்லது தேவ ரிஷிகளின் மாபெரும் போதனைகள் எதுவும் எங்களுக்கு ஒருபோதும் தெரிந்திருந்ததில்லை. நாங்கள் எந்தப் பாரம்பரியத்தையும் பின்பற்றவில்லை. நாங்கள் ...more
4%
Flag icon
வேலையற்றச் சில பிராமணர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு அவற்றை உருவாக்கினர். தங்களைப் பயனுள்ளவர்களாக ஆக்கிக் கொள்வதற்குப் பதிலாக, இந்த பிராமணர்கள், தாங்களாகவே கண்டுபிடித்தக் கடவுளிடம், மழை, சூரியன், குதிரைகள், பசுக்கள், பணம், மற்றும் பிற பொருட்களை வேண்டிப் பிரார்த்தனை செய்தனர். எப்பேற்பட்டச் சபிக்கப்பட்ட இடங்களிலிருந்து அவர்கள் வந்திருந்தாலும் சரி, அந்த இடங்கள் மிகவும் குளிராக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், அவர்கள் ஏன் தவளைகளைப்போலக் கொக்கரித்துக் கொண்டு, தீயில் பல்வேறு வகையான சருகுகளை நூற்றுக்கணக்கில் போட்டபடி கடவுள்களிடம் மன்றாட வேண்டும்?
4%
Flag icon
நம் தலைகளிலுள்ள பாவ எண்ணங்கள் அனைத்தையும் களைகின்ற ஒரு பூசையை இந்த பிராமணர்களால் ஏன் நடத்த முடியவில்லை?
4%
Flag icon
கடவுள் இல்லை என்று கூறுபவன் அல்ல நான். நான் கடவுள்மீது வலிமையான நம்பிக்கை கொண்டுள்ளேன். எனது பௌதீக முன்னேற்றத்திற்காகவும் ஆன்மீக முன்னேற்றத்திற்காகவும் பிரார்த்தனை செய்ய நான் எப்போதுமே தயாராக இருக்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை, கடவுள் என்பவர் மிகத் தனிப்பட்ட ஒரு விஷயம், பிரார்த்தனையானது என் இதயத்திற்குள் அமைதியாக நடத்தப்பட வேண்டிய ஒன்று.
4%
Flag icon
நாசக்காரர்களின் தலைவனின் பெயர் இந்திரன். தனது அக்கிரமக் காரியங்களின் மூலமாகப் ‘புரேந்திரன்’ என்ற பட்டப்பெயரை அவன் சம்பாதித்திருந்தான். ‘நகரங்களைச் சீரழிப்பவன்’ என்பது அதன் பொருள்.
6%
Flag icon
“கோபம்தான் மிகவும் கீழான உணர்ச்சி. உன் அறிவைக் குழப்பி, உன்னை முட்டாள்தனமான காரியங்களைச் செய்ய வைக்க அதனால் முடியும். காரண காரியத்தை ஆராய முடியாத அளவுக்கு உன் பார்வையை அது மட்டுப்படுத்திவிடுகிறது. நீ எதையும் சிந்திக்காமல், உன் உடலை மட்டும் கொண்டு செயல்விடை அளிக்கிறாய். இது ஒவ்வொரு பகுதியிலும் தோல்விக்கு வழிவகுக்கிறது. இத்தீவினையை உன்னிலிருந்து வேரோடு பிடுங்கி எறி.
6%
Flag icon
“மகிழ்ச்சியும் வருத்தமும் பகலையும் இரவையும்போல வெறுமனே இரண்டு நிலையான உண்மைகள்.
6%
Flag icon
“சுயநலத்தைவிட அதிகமாகக் கண்டிக்கத்தக்க விஷயம் வேறொன்றும் இல்லை. தன்னைப் பற்றி மட்டுமே நினைக்கும் ஒரு மனிதன்தான் எல்லோரையும்விட மிகவும் துரதிர்ஷ்டமானவன். ஒருவன் ஏன் பிறக்கிறான்? வெறுமனே சாப்பிட்டு உடலைப் பருமனாக வளர்ப்பதற்கா? அல்லது சந்ததியினரை உருவாக்கிப் பன்றிகளைப்போல இனப்பெருக்கம் செய்வதற்கா? இந்த அழகான பூமியை உடற்கழிவுகளால் அசுத்தப்படுத்தவும், பிறகு, சொல்லிக் கொள்ளும்படியாக எந்தவிதமான மாற்றத்தையும் இவ்வுலகில் ஏற்படுத்தாமல் வெறுமனே மடிந்து போவதற்குமா? நம் மக்களை நசுக்கிக் கொண்டிருக்கின்ற இருளில் ஒரு சிறு விளக்கையாவது ஏற்றாமல் போனால் அவனது வாழ்விற்கு என்ன மதிப்பு இருக்கிறது?
7%
Flag icon
நான் உயிரோடு இருப்பதால் நான் நேசிக்கிறேன். நான் நேசிப்பதால் நான் உயிரோடு இருக்கிறேன். நான் என்னை நேசிக்கிறேன்.
12%
Flag icon
முதலில் அறிவு கைவரப் பெற்ற பிரம்மா படைப்பாளராகக் கொண்டாடப்பட்டார். அமைப்புமுறையின் பாதுகாவலராக விஷ்ணு கருதப்பட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால், ஓர் ஒட்டுமொத்த சாம்ராஜ்யத்தைக் குழிதோண்டிப் புதைத்த இந்திரனை விட்டுவிட்டு, ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பிய சிவன், அழிப்பவராகப் பார்க்கப்பட்டார். இந்தியாவின் மூன்று கடவுள்கள், அதாவது, மும்மூர்த்திகள் அவர்கள்தாம். இக்குடும்பங்களின் முதல் உறுப்பினர்களும் கடவுள்களாகக் கொண்டாடப்பட்டனர். தேவர்கள் இன்றும் அவர்களை அவ்வாறே போற்றுகின்றனர். நாம் சிவனையும் பிரம்மனையும் கடவுள்களாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் தேவர்களின் படைத்தளபதியாகவும், ஒரு தேவ அரசனின் வெறும் ...more
16%
Flag icon
நான் எனது உயர்மட்டக் குழுவினரிடம் சென்று, எனது யோசனையை, அதாவது, பத்ரனின் யோசனையை முன்வைத்தேன். ஆனால் அது என் யோசனை என்பதுபோல இப்போது நான் சிந்திக்கத் துவங்கியிருந்தேன். எனக்குக் கீழே உள்ள ஒருவனின் யோசனையைத் திருடி, அதற்கு நான் உரிமை கொண்டாடுவது எனக்கு மிகச் சுலபமாக வருவதற்குக் காரணம், என்னோடு பிறந்த தலைமைத்துவப் பண்புகளாக இருக்கலாம். அவை இன்னும் ஆரம்ப நிலையில் இருந்ததால், அந்த யோசனைகள் யாருடையவை என்பது எனக்கு நினைவிருந்தது. பின்னாளில், நான் ஓர் உண்மையான தலைவனாக ஆனபோது, அனைத்து நல்ல யோசனைகளும் என்னிடமிருந்து வெளிவந்தன என்பதிலும், மோசமான மற்றும் முட்டாள்தனமான யோசனைகள் வேறு யாருக்கோ சொந்தமானவை ...more
20%
Flag icon
மாரீசன் கூறிக் கொண்டிருந்தவை, விஷயங்கள் நவீனமாகவும் சிக்கலாகவும் இல்லாத, எண்ணங்கள் தூய்மையாக இருந்த, வாழ்க்கையை அனுபவிப்பதற்கு மக்களுக்கு நேரமிருந்த, வாழ்வதற்குச் சிறந்த ஓர் இடமாக உலகம் இருந்த ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த கதைகள்.
27%
Flag icon
“அரசர்களுக்கு நண்பர்கள் உண்டா?”
30%
Flag icon
உனது மரணம் ஒரு புழுவின் மரணத்தைவிடக் குறைவான மதிப்புக் கொண்டதுதான். ஒரு புழு ஒரு பறவைக்கு உணவாகிறது அல்லது இந்த மண்ணுக்கு உரமாகிறது. ஆனால் நீ இறந்தால், உன் உடல் எரிக்கப்படும், அந்தப் புகை வளி மண்டலத்தில் சென்று கலக்கும். இயற்கையைப் பொறுத்தவரை, உனது போராட்டங்களும் துன்பங்களும் வெற்றிகளும் பிறப்பும் மரணமும் அற்ப நிகழ்வுகளே. அவை, காலச் சக்கரங்களின் கீழே நொறுக்கப்படுகின்ற சிறு கற்களே. நீ வாழ்ந்தால், தவிர்க்க முடியாத உனது மரணத்தை நீ ஒருநாள் தள்ளிப் போடுகிறாய். நீ இறந்து விட்டாலும் இப்பிரபஞ்சம் தொடர்ந்து இப்படியேதான் இருக்கும்.
31%
Flag icon
என் வாழ்க்கையை என்னால் மீண்டும் எழுத முடிந்தால், அக்கணத்திலிருந்து துவக்கி, வருணனைத் தூக்கிக் கடலுக்குள் எறிவதற்கு எனக்குக் கை கொடுத்து உதவுமாறு மாரீசனையும் கும்பகர்ணனையும் நான் கேட்டிருப்பேன்.
32%
Flag icon
நான் ஒருசில அடிகள் முன்னே எடுத்து வைத்து, பிறகு திடீரென்று ஆணியடித்தாற்போல நின்றேன். ஒரு தூணின்மீது சாய்ந்து கொண்டு, அதே உணர்ச்சியற்றத் தீவிரமான பார்வையுடன் மண்டோதரி என்னை வெறித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் என்ன கூறுவதென்று எனக்குத் தெரியவில்லை. “போ, போய் அவளது உதடுகளில் முத்தமிடு. வீரதீரச் செயல்களைப் புரிந்த பிறகு, கதாநாயகர்கள் அதைத்தான் செய்வார்கள்.
32%
Flag icon
நான் உன்னதமானவன், மாபெரும் மனிதன் என்று உணர்வதற்கான உரிமை, குறைந்தபட்சம் எப்போதாவதேனும் எனக்கு இருக்கக்கூடாதா?
33%
Flag icon
“நாம் இந்தத் தீவிற்குள் காலெடுத்து வைப்பதற்கு முன்பாகவே உயர்மட்டக் குழு கலைக்கப்பட்டிருந்தது உனக்கு மறந்து போய்விட்டதா? அடுத்த முறை நீ இந்தக் குழுவைப் பற்றிப் பேசுவது என் காதில் விழுந்தால், அடுத்தக் கப்பலைப் பிடித்து இந்தியாவிற்குச் சென்று, அந்த வயதான பேரரசரின் மடத்தனமான முயற்சிகளில் நீ கூட்டுச் சேர்ந்து கொள்ளலாம். அதாவது, நான் நல்ல மனநிலையில் இருந்தால் அது உனக்குச் சாத்தியம். நான் மோசமான மனநிலையில் இருந்தால், நடப்பதே வேறு. அரண்மனையைச் சுற்றி அமைந்துள்ள அகழியில் இருக்கும் முதலைகளுக்கு நீ உணவாவாய். நான் கூறுவது உனக்குப் புரிகிறதா?”
33%
Flag icon
“அது எத்தனை அசுர வழக்கங்களையும் விதிகளையும் மீறினாலும் அது பற்றி எனக்குக் கவலையில்லை. என் சொந்த வழக்கங்களை நானே உருவாக்குகிறேன். நான் உருவாக்குகின்ற விதிகளின்படியே நான் நடப்பேன். இந்த ஆயிரம் வருடப் பழைய சம்பிரதாயங்கள் எனக்குச் சலிப்பூட்டுகின்றன. நான் என்ன கூறுகிறேன் என்று உனக்கு நிரூபிப்பதற்காக, குபேரன் விட்டுச் சென்றுள்ள இந்த அரியணையின்மீது நான் உட்காரப் போகிறேன். எந்தவிதமான விழாக்களைப் பற்றியும் எனக்கு அக்கறையில்லை. அசுர மூடநம்பிக்கைகளுக்கு எனது ராஜாங்கத்தில் எந்த இடமும் கிடையாது. இது ஒரு புதிய உலகம், ஒரு நவீன உலகம். பழைய இந்தியாவின் பழக்கங்களும் மூடநம்பிக்கைகளும் முன்னேற்றத்தை நோக்கிய நமது ...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
33%
Flag icon
ஆனால் வரலாற்றிலிருந்து யாருமே பாடம் கற்றுக் கொள்வதில்லை.
34%
Flag icon
எனக்காக நான் பரிதாபப்பட்டேன். எந்த வகையான திருமணம் இது? இதில் அன்போ, காதல் களியாட்டமோ, நிலவுக்கு அடியில் கிசுகிசுப்புகளோ, திருட்டுத்தனமான முத்தங்களோ இருக்கவில்லை. பெயரளவுக்கு மட்டுமே இது திருமணமாக இருந்தது. எனது வளமான கற்பனையால்கூட மண்டோதரியுடன் ஒரு காதல்மயமான உறவை உருவாக்க முடியவில்லை.
35%
Flag icon
“உனது பிராமணத் தகப்பனை நீ ஏன் பின்தொடர்ந்து செல்லவில்லை? அனைத்து விதமான மந்திரங்களையும் உனக்குக் கற்றுக் கொடுத்து, மிக உயர்ந்த வகுப்பைச் சேர்ந்த ஒரு திருடனாக அவரால் உன்னை உருவாக்க முடியும்.
35%
Flag icon
இனி வரும் நாட்களில், நான் மீண்டும் மீண்டும் கனவு காண்பேன். இளமையின் அமுதத்தை நான் கண்டுபிடித்திருந்தேன். நான் தொடர்ந்து மிகவும் பிரம்மாண்டமாகக் கனவு கண்டுகொண்டிருக்கும்வரை அந்த அமுதம் ஒருபோதும் தீராது. எனது கனவுகள் எனது கதையாக ஆயின.
36%
Flag icon
அசுர நாகரீகத்தை மீட்டெடுத்து மறுசீரமைப்பதென்று ராவணன் கொண்டிருந்த பிரம்மாண்டமான முன்னோக்கோ, சமதர்மச் சமுதாயத்தை அமைத்து, அதில் தான் கடவுளாக இருப்பதென்று வித்யுத்ஜீவன் கொண்டிருந்த கனவோ எனக்கு இருக்கவில்லை.
36%
Flag icon
ஒரு சாதாரண மனிதனின் தத்துவத்தை நான்கே வார்த்தைகளில் தொகுத்துக் கூறிவிடலாம்: எனக்கு அதில் என்ன இருக்கிறது? ஒரு சமதர்மச் சமுதாயத்தை நான் வரவேற்கிறேன். எனக்கு அதிலிருந்து பலன் கிடைக்கும் என்றால், ஒரு பிரம்மாண்டமான அசுர நாகரீகத்தைக்கூட நான் வரவேற்கிறேன். எனக்குத் தேவையெல்லாம் பழிக்குப் பழி, இரண்டு வேளை உணவு, கூடலின்பம் ஆகியவையே. முடிந்தால், மற்றவர்கள் இப்போது எவ்வாறு என்னை வெறுப்போடு நடத்துகிறார்களோ, அதேபோல நான் அவர்களை நடத்துவதற்குத் தேவையான செல்வத்தையும் பதவியையும் அடைவதற்கான ஒரு வாய்ப்பையும் நான் விரும்புவேன்.
37%
Flag icon
அவனுக்கே உரிய பண்புநலன்களான அமைதியும் சமநிலையும் ஒரு முகமூடியே என்றும் நான் எப்போதுமே சந்தேகித்து வந்திருந்தேன்.
41%
Flag icon
“சூத்திரனே, விஷ்ணுவின் பெயரில் நான் உன்னைச் சபிக்கிறேன். நீ என்னை அசுத்தப்படுத்துவதற்கு எனது வம்சாவழியினர் உன்னைப் பழி வாங்குவார்கள். அவர்கள் உனது நகரத்தையும் உனது குலத்தையும் உன் மனைவியரின் மானத்தையும் உனது மகன்களையும் அழிப்பார்கள். அவர்கள் உனது . . .” ராவணன் ஒரே வீச்சில் அயோத்தி அரசன் அனர்னியனின் தலையைச் சீவினார்.
42%
Flag icon
வெகு காலத்திற்குப் பிறகு, இந்த அவலமான இடத்தைச் சேர்ந்த ஓர் இளவரசன் எனது உலகைத் தலைகீழாக மாற்றுவான் என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.
42%
Flag icon
“வேதவதி,”
44%
Flag icon
மிதிலை நாட்டு அரசனான ஜனகன்
44%
Flag icon
‘சீதை’
44%
Flag icon
வாழ்க்கையைப் பற்றித் தான் தெரிந்து கொள்வதற்கு முன்பே தன்னைக் கொலை செய்ய விரும்பிய, அகங்காரம் கொண்ட, இதயமற்ற ஓர் இனத்தின்மீதான, ஓர் அசுர இளவரசியின் பழி வாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம்.
44%
Flag icon
கார்த்த வீர்யார்ஜுனன்மீதும்
45%
Flag icon
விந்திய மலைத்தொடரின் தெற்கு அடிவாரங்களில், அரைச்சாதியினனான வாலி ஆண்டு வந்தான். பேராற்றல் வாய்ந்த அவனை எல்லோரும் வானர அரசன் என்று இழிவாக அழைத்தனர். அவனது மக்கள் வானரர்கள் என்று அழைக்கப்பட்டனர். அசுர மற்றும் தேவ இனங்களின் கலப்பு அவர்கள். ஆனால் இரு இனங்களுமே அவர்களை வெறுத்து ஒதுக்கி வைத்தன. வானர இனத்தோருக்கு இடையேயான சச்சரவுகளைத் தகர்த்து, வானர இனத்தை வாலி ஒன்றுசேர்க்கும்வரை, அவர்கள் அவ்விரு நாகரீகங்களின் விளிம்பின்மீது வாழ்க்கை நடத்தினர். கிஷ்கிந்தையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட வானர இனத்தினர், வடக்கிலிருந்த தேவ சாம்ராஜ்யங்களுக்கும் தெற்கிலிருந்த அசுர சாம்ராஜ்யங்களுக்கும் ஓர் அச்சுறுத்தலாக ...more
45%
Flag icon
வானர அரசனான வாலியின் இளைய சகோதரன் சுக்ரீவன், வாலியின் எதிரி என்ற விஷயமும், அனுமானைப் போன்ற மதிப்புவாய்ந்த மிகப் பெரிய வீரர்கள் வாலியைக் கைவிட்டுவிட்டு சுக்ரீவனுடன் போய்ச் சேர்ந்து கொண்ட விஷயமும்,
46%
Flag icon
இப்போது எங்களுக்கு ஒரு குறிக்கோள் இருந்தது. ஒரு தனிமனிதனின் புகழுக்கான ஓர் அர்த்தமற்ற யுத்தமல்ல இது. எங்களுடைய சகோதர சகோதரிகளையும், எங்கள் மனைவியர் மற்றும் குழந்தைகளையும் ஒரு கொடுங்கோலனின் கைகளிலிருந்து விடுவிப்பதற்கான ஒரு யுத்தம் இது. நான் மாலாவைப் பற்றிக் கவலைப்பட்டேன்.
47%
Flag icon
எதிர்காலத்தின் பொன்வீதிகள்
49%
Flag icon
நாம் வளர்ந்து பெரியவர்களாக ஆன பிறகு, நமது குழந்தைப்பருவத்துக் கனவுகளை அடைவதுதான் வாழ்வின் மாபெரும் சீரழிவு.
50%
Flag icon
அதிகாயன்
51%
Flag icon
மேகநாதன்
51%
Flag icon
துவக்கத்தில் விபீஷணனை எல்லோரும் விரும்பினர். எல்லோரும் மறந்துவிட்ட, தெருவில் அமைந்த சிவன் கோவில்களையும், கீழ்நிலையில் இருந்த கடவுள்களுக்கான கோவில்களையும் மறுசீரமைக்க அவன் மேற்கொண்ட முயற்சிகளையும், கோவில் நிர்வாகத்தைச் சீரமைக்க அவன் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் கண்டு பலர் பிரமித்தனர். ஆனால் விரைவில், அவன் பல சிறிய விஷ்ணு கோவில்களை நிர்மாணித்து, வினோதமான தேவ வழக்கங்களை அறிமுகப்படுத்தத் துவங்கினான். அவன் சில பிராமணர்களையும்கூட அழைத்து வந்தான். அவர்கள் தங்களது கேடுகெட்ட தேவப் பாரம்பரியமான சாதி அமைப்புமுறையை அசுரச் சமுதாயத்திற்குள் மெல்ல மெல்ல அறிமுகப்படுத்தத் துவங்கினர். விபீஷணனைக் கண்டு பிரமித்த ...more
52%
Flag icon
பார்த்துப் பார்த்து என் கண்கள் காயப்படும் அளவுக்கு
55%
Flag icon
ஒரு நண்பன் இன்னொரு நண்பனுக்குச் செய்யும் பெருந்தன்மையான காரியத்தை ஒரு நட்பால் பொறுத்துக் கொள்ள முடியுமா? நட்பால் நம்பிக்கைத் துரோகத்தைப் பொறுத்துக் கொள்ள முடியும், ஆனால் இப்படிப்பட்ட அசாதாரணமான அன்பான செயலையும் உன்னதமான இதயத்தையும் அதனால் தாங்கிக் கொள்ள முடியுமா?
« Prev 1