அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம், ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை
Rate it:
55%
Flag icon
ஒரு கருத்தத் தோலுக்கு அடியில் ஒரு பொன்னான இதயத்தைக் கொண்டிருப்பது பாதுகாப்பற்றதாக இருந்தது.
55%
Flag icon
துதிபாடுதல், கொடூரத்தன்மை, உயிர்வாழ்வதற்காக எந்தவோர் எஜமானனுக்கும் சேவை செய்வதற்கான விருப்பம், உள்ளூரப் பொங்கிக் கொண்டிருக்கும் கோபத்தை மறைப்பதற்கான திறன், அதிக வலிமையானவர்களுக்கு முன்னால் பணிந்து போகும் மனப்போக்கு ஆகியவைதான் எங்கள் உலகில் உயிர் பிழைத்திருப்பதற்கான அத்தியாவசியமான கருவிகள்.
55%
Flag icon
எங்களிடம் இருந்ததைவிட அதிகமாக அவரிடம் எதுவும் இருந்துவிடவில்லை. என்னிடம் இல்லாத எது ராவணனிடம் இருந்தது? ஆட்சி செய்வதற்குப் பிறந்தவன் தான் என்ற அமைதியான தன்னம்பிக்கையா? வெறும் அதிர்ஷ்டமா? அல்லது அவர் புத்திசாலியாகவும் ஈவு இரக்கமற்றவராகவும் இருந்தது அதற்குக் காரணமா? அவர் ஈவு இரக்கமற்றவராக இருந்ததுதான் காரணம் என்றால், ருத்ராக்கன்தான் வேறு எவரொருவரைவிடவும் அதிகக் கடுமையானவனாகவும் கருணையற்றவனாகவும் இருந்தான். புத்திசாலித்தனமான உத்தியுடன்கூடிய நீண்டகாலச் சிந்தனைதான் அதற்கான விடை என்றால், பிரஹஸ்தனுக்கு யாரும் அதில் ஈடாக மாட்டார்கள். வீரம்தான் அதற்குக் காரணம் என்றால், வீரம் மிக்க அசுரர்கள் எண்ணற்றோர் ...more
62%
Flag icon
“ராமா, இது உனக்கு அழகுதானா?” நீ சிந்த வைத்துள்ள ரத்தம், நாங்கள் அனைவரும் இறந்து வெகுகாலம் கழித்தும் உன்னையும் இந்த நாட்டையும் பலப்பல வருடங்கள் தொடர்ந்து துரத்தும். நியாயமற்ற வழிகளில் நீ அடைந்த தெய்வீக நிலையை நீ வைத்துக் கொள். நான் எனது ஆண்மைநிலையைத் தக்க வைத்துக் கொண்டு, ஒரு வீரனைப்போல இறக்கிறேன்.
64%
Flag icon
“நான் ஒரு குற்றவாளி அல்ல!” என்று என் மனத்திற்குள் கூறிக் கொண்டேன். ஆனால் நான் ஓர் ஏழை. அதுவே ஒரு மிகப் பெரிய குற்றம்தான்.
68%
Flag icon
சுயநலமும் பேராசையும் மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கான இரண்டு மாபெரும் தூண்கள்
69%
Flag icon
ஜோதிடம் மற்றும் சகுனங்கள் பற்றி, சம்ஹிதம் எனும் நூலை நான் எழுதிக் கொண்டிருந்தேன்.
71%
Flag icon
நான் ராவணனைப்போல வாழ்ந்திருந்தேன், ராவணனைப்போலவே இறப்பேன். கச்சிதமான மனிதனும் கடவுளுமான ராமனாக ஆவது எனது நோக்கமாக இருக்கவில்லை. என் நாட்டில் கடவுள்களுக்கு ஒருபோதும் பஞ்சம் இருக்கவில்லை. என் நாட்டில் மனிதர்களின் எண்ணிக்கைதான் குறைவாக இருந்தது.
73%
Flag icon
கடவுள் உங்களுக்குள் இருப்பதாகக் கூறுங்கள், அல்லது, அதைவிடச் சிறப்பாக, நீங்கள்தான் கடவுள் என்று கூறுங்கள். அப்போது நீங்கள் செய்யும் எதுவொன்றும்,
73%
Flag icon
நீங்கள் செய்யும் எந்தவோர் அதர்மமும் தெய்வீக நாடகம் என்று ஏற்றுக் கொள்ளப்படும்.”
74%
Flag icon
உங்கள் வெற்றியை உங்களது உடன்பிறப்புகளைவிட அதிகமாக வேறு எவரும் வெறுப்பதில்லை.
74%
Flag icon
பகட்டையும் முட்டாள்தனத்தையும் நினைத்து நான் புன்னகைத்தேன். மனிதனின் சாதாரணப் பகுத்தறிவிற்குள் அடக்க முடியாத, அதை மீறிய ஏதோ ஒன்று உண்மையில் இருக்கத்தான் செய்கிறது. நமது ஆசான்கள் நமக்கு போதித்த மன உறுதி, கடின உழைப்பு மற்றும் பல விஷயங்கள் அனைத்தும், தன்னிச்சையான விஷயங்கள் நிகழ்ந்தபோது நாம் எவ்வாறு நடந்து கொள்ள
74%
Flag icon
வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கு மட்டுமே பயனுள்ளவையாக இருந்தன. ஆனால் விஷயங்களில் நான் ஓர் ஒழுங்கைப் பார்த்தேன். இரவும் பகலும் மாறி மாறி வருகின்ற விதத்தையும், பிறப்பு, வாழ்க்கை, இறப்பு என்று உயிரினங்களிடம் நிலவும் ஒரு சுழற்சியையும் அதற்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். ஆனாலும், பல விஷயங்களை வெறும் விதி என்று மட்டுமே நம்மால் விளக்க முடியும்.
74%
Flag icon
“ஓ! அரசர்களுக்கெல்லாம் அரசனே, அசுரர்களின் பேரரசனே . . . என்னைப் பார்த்துவிட்டுப் போக வந்தாயா? ராவணா, உன் நேரத்தை எண்ணிக் கொள். உன்னையும் உன்னுடைய தீய சாம்ராஜ்யத்தையும் ஒழித்துக்கட்டுவதற்காக என் ராமன் வந்திருக்கிறார். உன்னைப் போன்ற ராட்சஸர்களும், நீ உருவாக்கியுள்ள அனைத்தும், நீ பெருமிதம் கொள்ளும் அனைத்தும் விரைவில் சாம்பலாகப் போவது நிச்சயம். என்னை இங்கிருந்து மீட்டுச் செல்வதற்காக என் கணவர் இங்கு வந்துள்ளார். உனது தீய சாம்ராஜ்யம் நிலைகுலைந்து கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. உன் குடும்பத்தினரின் உயிர்களை நீ மதித்தால், போய் என் கணவரின் பாதங்களில் விழு. ஆனால் நீ அப்படிச் செய்ய மாட்டாய் ...more
74%
Flag icon
நான்தான் என்னுடைய சொந்த எதிர்காலத்தைத் தீர்மானித்தேனே தவிர, அக்கறையற்ற ஒரு வானத்தின் மையிருட்டில் எங்கோ மூழ்கிக் கிடந்த ஏதோ சில நட்சத்திரங்கள் அதைத் தீர்மானிக்கவில்லை.
75%
Flag icon
நாளைக்கு நீங்கள் இறந்து போகக்கூடும் என்ற நிலை இருந்தபோது, துணிகளைத் துவைப்பதற்கு என்ன அவசியம்?
75%
Flag icon
தரும காரியங்கள் உட்பட, பணக்காரர்களும் அதிகாரம் படைத்தவர்களும் செய்த அனைத்தும் சுயநலத்தால் தூண்டப்பட்டவைதான்.
78%
Flag icon
ஆர்வத்தைவிட அதிகமாக ஊக்குவிக்கக்கூடிய ஏதேனும் ஒன்று உள்ளதா என்ன?
79%
Flag icon
இப்படிப்பட்டத் தேர்ந்தெடுப்புகளில்தான் அவரது மகத்துவமும் அவரது பலவீனமும் அடங்கியிருந்தனபோலும்.
80%
Flag icon
ஒரு குழந்தை பிறந்தபோது ஒரு மாமரத்தை நடுவது எங்களது அசுர வழக்கமாக இருந்தது. குழந்தையோடு சேர்ந்து அந்த மரமும் வளர்ந்து, அனைத்து உயிர்களுக்கும் அது தன் கனிகளைக் கொடுத்து, இவ்வுலகத்தை ஒரு சிறந்த இடமாக ஆக்கியது. அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகும்போது, அவனும் இதைப்போலவே செய்ய வேண்டும் என்று அவனிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டது. அவனது இறுதிப் பயணத்திற்கான நேரம் வந்தபோது, அந்த மரம் தனது இறுதித் தியாகத்தைச் செய்து, தனது தோழனோடு சேர்ந்து, சிதையின் தீயில் கருகிப் புகையாக மாறிக் காற்றோடு காற்றாக மறைந்தது.
82%
Flag icon
அரச பதவியில் இருக்கும் ஆபத்துக்களையோ அல்லது அதிகாரம் எப்படி ஒருவனது ஆன்மாவை மாசுபடுத்தி அரித்துவிடுகிறது என்பதையோ நீ அறிய மாட்டாய்.
86%
Flag icon
பரிதாபமான மனிதர்களாகிய நாம், காற்றில் பறக்கும் சருகு போன்றவர்கள் என்பதையும், விஷயங்கள் திட்டமிட்ட முறையில் நடக்காமல் திடீர்த்திடீரென்று நடக்கின்றன என்பதையும்
86%
Flag icon
லட்சியவாதம் என்பது அதிகாரத்திற்கான ஒரு கருவி
92%
Flag icon
மாபெரும் ஞானியான மனு வரையறுத்துள்ள தர்ம விதிகள் நிலையானவை, தெய்வீகமானவை. வாழ்வின் ஒவ்வோர் அம்சமும் இந்த விதிகளில் அடங்கியுள்ளன. பிறப்பிலிருந்து இறப்புவரை, இந்த தர்ம விதிகள் உங்களுக்கு வழிகாட்டும்.
96%
Flag icon
கல்வியினால் ஏற்பட்ட ஆபத்து அதுதான். உண்மையான உலகில் உறுதியாக ஊன்றி நிற்பதற்குக் கால்கள் ஏதுமற்றக் கனவுகளுக்கு அது வித்திட்டுவிடுகிறது.
96%
Flag icon
‘மரணம் என்பது ஆன்மாவின் ஒரு தற்காலிக முகவரி மாற்றமே தவிர வேறெதுவும் இல்லை; தனது ஆடைகள் பழையனவாக ஆனபோதும் கிழிந்து போனபோதும் எவ்வாறு ஒருவன் புதிய ஆடைகளை வாங்கினானோ, அதேபோல, ஆன்மாவும் ஒரு புதிய உடலைத் தேடியது’
97%
Flag icon
அரசி தரையில் காறி உமிழ்ந்துவிட்டு, அரசனைப் பார்த்து, “புனித விதிகள் . . . தர்மம் . . . ஒரு சிறுவனைக் கொலை செய்வதன் மூலம் அவனிடமிருந்து உன் தர்மம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், ஒரு சிறு குழந்தை கூறிய ஒருசில சமஸ்கிருத வார்த்தைகளைக் கண்டு உன் தர்மம் பயப்படுகிறது என்றால், உன்னால் சிந்திக்க முடிந்தால், நீ எப்படிப்பட்ட தர்மத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறாய் என்பதை நினைத்துப் பார். உன்னைக் கட்டுப்படுத்துகின்ற கடிவாளம் யாருடைய கைகளில் இருக்கிறது என்று யோசித்துப் பார் . . .” என்று கத்தினாள்.
97%
Flag icon
உலகிலுள்ள லட்சியவாதிகளிடமிருந்து யாராலும் தப்பிக்க முடியாது. அவர்கள் எலிகளைப் போலப் பெருகி, ஒரு நோய்த்தொற்றைப் போல இவ்வுலகை ஆட்கொள்கின்றனர். அவர்கள் இறக்கும்போது, இன்னும் பல உயிர்களையும் அவர்கள் தங்களுடன் எடுத்துச் சென்றுவிடுகின்றனர்.
99%
Flag icon
தான் மிகவும் நேசித்த இரண்டு உயிர்களை ராமன் தனது தர்மத்திற்காகத் தியாகம் செய்திருந்தான். அவன் மேலும் மேலும் வருத்தமும் மனச்சோர்வும் கொண்டான், எல்லாவற்றிலிருந்தும் விலகி இருந்தான். இறுதியில், சரயு நதியின் இருண்ட நீரில் அவன் நிரந்தரமாக அடைக்கலம் புகுந்தான். வரலாற்றிலேயே மிக அதிகப் புகழ்பெற்ற ஒரு பேரரசனைத் தோற்கடித்திருந்த ஓர் அரசனுக்கு இது ஓர் இழிவான முடிவு. ராமன் தனது ஆகம நூல்களை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பின்பற்றி நடந்தான். அந்த தர்மத்திற்காக, அவன் ஒரு மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழ்ந்தான். தனது மனைவியையும் தனது சகோதரனையும் தனது மனசாட்சியையும்கூட அவன் தியாகம் செய்தான். என் பேரன் சம்புகனைக் ...more
99%
Flag icon
ராமனைப் போன்ற நேர்மையான, வெளிப்படையான மக்களோ, அல்லது ராவணனைப் போன்ற பெருமிதமும் எதிர்ப்புக் குணமும் கொண்டவர்களோ இவ்வுலகை சுவீகரிப்பதில்லை. மாறாக, மதம் மற்றும் ஆகம நூல்களின் பெயரில் மற்றவர்களைக் கொலை செய்யக்கூடிய, ஊனமாக்கக்கூடிய, சண்டையிடக்கூடிய, மனிதத்தன்மையற்ற எந்தவொரு செயலையும் செய்யக்கூடியவர்களே இவ்வுலகை சுவீகரித்துக் கொள்கின்றனர்.
மனிதர்களின் இதயங்களில் ஒளிந்து கொள்ளும் சாத்தியமற்றக் கனவுகளில், வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஓர் அழகு இருக்கத்தான் செய்கிறது.
« Prev 1 2 Next »