More on this book
Kindle Notes & Highlights
விஞ்ஞானம் கடவுளை இல்லையென்று சொல்வதில்லை. அதற்கு கடவுள் தேவையில்லை.
வாழ்வில் அற்புதங்கள் நிகழ நம்பிக்கை தேவைப்படுகிறது. இல்லையேல் வாழ்க்கையிலேயே என்ன இருக்கிறது.
‘ஒதெல்லோ’ பிரபல சித்திரக்காரரான ஆஸ்கார் ஜராதே
ஒவ்வொரு வாரமும் எதாவது கவிதை படியுங்கள். அது உங்களுக்குப் பிடித்ததாக இருந்தால் ஒரு வாக்கியத்தில் கவிதை என்பது என்ன என்று எழுதுங்கள்.
உயிர் என்பது மூச்சுக்காற்றல்ல. ஞாபகம்தான்.
‘ஃப்ராங்க் ஓ கானர்’, ‘‘சிறுகதை, சமூகத்தின் விளிம்பில் இருக்கும் மனிதர்களின் தனிமையைப் பற்றியது’’ என்றார்.
தின வாழ்வின் அலுக்கத்தக்க விவரங்களை விலக்கிவிட்டு, அதன் காலம் கடந்த சமாசாரங்களைக் கண்டுபிடிப்பதுதான் இதன் சூட்சுமம்.
‘இன்டர்நெட் என்பது கங்கை நதிபோல. அதில் பூக்களும் மிதக்கும்; பிணங்களும் மிதக்கும்’ என்று அதன் பயன்பாட்டில் இருக்கவேண்டிய எச்சரிக்கைகளைப் பற்றி பேசினேன்.
அன்பு செய்ய யாருமில்லை, வெறுக்கவும் ஆளில்லை. தற்செயல், விதி, துரதிர்ஷ்டம் எதுவும் இல்லை. இந்த ஆதர்ச தானியங்கி தேசத்தில் உணர்வில்லை; உயர்வில்லை. - ஈவ் மெர்ரியம்
மலைராணி மானுட பலாத்காரத்தால் விரைவில் அழகிழந்துகொண்டிருக்கிறாள்.
பாதசாரிகள், மாடுகள், கார்கள் இவைகளையெல்லாம் கார்கள் தானாகவே கண்டுபிடித்து ப்ரேக் போடும். மழை வந்தால் தானாகவே
பாகிஸ்தான், இந்தியா வெடித்த உடனே ஏன் அணுகுண்டு வெடிக்கவில்லை, பதினைந்து நாட்கள் எதற்கு ஆயிற்று? சீன மொழியில் இருந்த மேன்யுவல்களை மொழி பெயர்ப்பதற்கு.
அமெரிக்காவில் இருக்கும் இந்திய கம்ப்யூட்டர் இளைஞர்களின் முக்கியமான பொழுதுபோக்கு இன்டர்நெட்டில் தமிழ் சினிமா, தமிழ்நாட்டு அரசியல், வாழ்வு முறை, வசதிக்குறைவுகள் போன்ற விஷயங்களை சகட்டு மேனிக்கு சாடி, நம் அத்தனை உபாதைகளுக்கும் தீர்வு கொடுப்பது, எதைப் பற்றியும் எப்படி வேண்டுமானாலும் கருத்து சொல்வது.
ஏறக்குறைய ஜீனியஸ்கள் உலகில் பலர் இருக்கிறார்கள். லட்சத்தில் ஒருவர்தான் வெற்றி பெறுகிறார்கள். மற்றவர்களிடமிருந்து புதிய எலிப் பொறிகளுக்கு பேட்டன்ட் விண்ணப்பங்கள் வந்து கொண்டே இருக்கும்.
அறிவுமதி 1984-ல் கொண்டுவந்த ‘புல்லின் நுனியில் பனித்துளி’ என்கிறதுதான் தமிழில் முதல் நிஜ ஹைக்கூ தொகுப்பு என நினைக்கிறேன்.
One Digital Day என்னும் மிக அருமையான விஸ்தாரமான புத்தகத்திலிருந்து மேற்கோளினேன்.
‘நாடு இதை செய்யலை, அதை செய்யலை’ன்னு சும்மா பேசிக்கிட்டே இருக்காதீங்க! நாடுங்கறது நீங்கதான். ஏதாவது செய்யுங்க சார்’
ரபிபெர்னார்டின், ‘இந்த வாரம் சந்தித்தேன்’ ஒரு நல்ல நிகழ்ச்சி.
வலை மனையை (clicksujatha.com) பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் அணுகியிருக்கிறார்கள்.
அதே இணையத்தில் (இன்டர்நெட்டுக்கு தமிழ் வார்த்தை)
புதிய இசைக் கருவிகளுடன் துல்லியமான ஒலிப்பதிவில் பாட, அதன் பின் ஷோபா மோட்கில் (என்ன குரல்!) பாட, தொடர்ந்து விசாலி கண்ணதாசன் வரிகளை நித்யஸ்ரீ மஹாதேவன் பாட,
சுஜலாம் சுபலாம் மலயஜ சீதளாம்... சச்ய சியாமளாம் மாதரம்...’’ என்பதை, ‘‘இனி நீர்ப்பெருக்கினை, இன்கனி வளத்தினை தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை’’
நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும் குளிர்பூந் தென்றலும் கொழும்பொழில் பசுமையும் வாய்ந்து நன்கிலகுவை வாழிய அன்னை’’
‘நான் கருணாநிதியிடம் சொல்லிவிட்டேன். தமிழ்நாட்டின் விவசாயிகளை நான் பாதுகாக்கிறேன். நீ கர்நாடக விவசாயிகளைப் பார்த்துக்கொள் அது போதும்...’ என்றார். மிக ஆழமான கருத்து!
மற்ற படங்களை விமர்சிக்கும்போது காட்டும் பொறுமையும், டாலரன்ஸும் மணிரத்னத்துக்கு அவர்கள் தருவதில்லை.
மின்னம்பலத்தில் (இன்டர்நெட் அல்லது வெப்புக்கு ஈழத் தமிழர்கள் பயன்படுத்தும் சொல்)
அமைதியாக சுபிட்சமாக இருக்கும் மக்களிடமிருந்து நல்ல இலக்கியம் பிறப்பதில்லை என்று படித்தது நினைவுக்கு வருகிறது.
ஏன் பைல்ஸ் தொந்தரவோ, அவகாசம் இல்லாதிருப்பதோ, பாதிப்பு தெரியாததோ, எதற்கு எழுத வேண்டும் என்கிற சலிப்போ, ஒரு எக்ஸிஸ்டென்ஷியல் தனிமையோ எல்லாமே அவலங்கள்தான்.
‘கிலிமஞ்சாரோ பனிமலை’யில்
காட்டிச் சொல்ல ஆன நேரம் அரைமணி. மெஷினுக்கு எதிராக வழக்குப் போட்டிருந்த கம்யூனிஸ்ட் வேட்பாளர், குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். வென்றது அவரல்ல; எலெக்ட்ரானிக்ஸ்’’.
இருக்கிற அரசை மாற்றிப் போடு என்கிற சித்தாந்தம்தான் பெரும்பாலும் இந்திய மாநிலங்கள் அரசியலை ஆக்கிரமிக்கிறது. மேற்கு வங்காளம் தவிர! இந்த ‘incumbent factor’ செல்லுபடியாகிறது.
இணைத்தல் என்னும் பொருள்படும் இந்த வார்த்தை முதலில் திருமுருகாற்றுப்படையில் பயன்பட்டது (இணைத்தகோதை). சங்ககாலச் சொல் ஒன்று, இன்று இன்டர்நெட்டுக்கு பயன்படுவது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
‘சைபர்ஸ்பேஸ்’ (Cyberspace) என்பதை ‘மின்னம்பலம்’
தமிழில் சொல்வளம் இல்லை என்கிறவர்களை அல் உம்மாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
இறுதியில் அவர்கள் இருவரும் - நிஜாமுதின் தர்காவில் சந்திக்கும் காட்சி வேண்டுமென்றே அமைக்கப்பட்டதா என்று தீபாவைக் கேட்க வேண்டும். இசைவிழாவில் - நித்யஸ்ரீ, உன்னிகிருஷ்ணன் கச்சேரிகள் குறிப்பிடத்தக்கவை.
என் கால்கள் என் நடை என் சதுரம்... எதையும் நிரூபிக்காமல் சும்மா இருங்கள்’’
யாரோ உனக்கு
அனுப்பியிருக்கிறார்கள் புத்தாண்டு வாழ்த்து நீ இறந்துவிட்டது தெரியாமல். சற்று முன்னதாக கிடைத்திருந்தால் ஒருவேளை சாகாதிருந்திருப்பாய் -மனுஷ்ய புத்திரன்