More on this book
Community
Kindle Notes & Highlights
நீ கிருஷ்ணராஜ புரத்திலே நம்ப வீடு கட்டி முடிக்கிற வரைக்கும் இங்கேயே இருந்துக்கினு நெதம் ஒரு தபா அங்கே போயிட்டு வர மாதிரி வெச்சிக்கினா என்னா?
இப்ப நம்ப வூடு… இங்கே இருக்கறப்போ… நீ யோசனை பண்ணிப் பாரு… எப்படித் தோணுதோ அப்படியே செய்யலாம்”
“போடா போடா மம்ட்டி… மம்ட்டி!
‘சாவுன்னா என்னான்னு தெரியாமல் அதுக்கு நாம்ப என்னாத்துக்கு வருத்தப் படறது’ன்னு?”
ஆனாலும் அவர் இங்கே நிரந்தரமாக வராமலிருந்ததற்குக் காரணம் அவனுக்குத் தெரியவில்லை.
‘இவ்வளவு ஆசையை மனசிலே வச்சிக்கிட்டு இருக்கீங்களே. போயி உங்க தம்பியைப் பாருங்க’ன்னு சொல்ல உனக்கு ஏன் தொரை தோணலே?”
“ஆமாம். அவர் அதெல்லாம் அப்பிடியெல்லாம் சொல்லமாட்டார்..”
எனக்கு மதம் இல்லே.”
அதுக்கென்னா?சாமிக்கும் மதத்துக்கும் என்னா சம்பந்தம்?”
இருவரும் இருளில் உட்கார்ந்து இருந்தனர். ஹென்றியின் குரல், தன் அண்ணனின் குரல் போலவே துரைக்கண்ணுவிற்குக் கேட்டது.
“நான் ஒரு ஹிந்து. என் மூதாதையர்கள் எல்லாம் சைவ மதத்தை நம்பி என்னென்ன மாதிரி வாழ்ந்து எப்படி சிவலோகப்பதவி அடைந்தார்களோ, அப்படியே போக விரும்பறவன் நான். நான் இறந்து போனால் ஹிந்து வைதிக முறைப்படி என்னைத் தகனம் செய்ய வேண்டியது. என் பேராலே ஒருபிடி சாம்பல்கூட இருக்கக்கூடாது. ‘நான்’ என்கிறது இந்த சபாபதிப் பிள்ளையோ இந்த உடம்போ இல்லை. அதனாலே இந்த சபாபதிப் பிள்ளைக்கு அல்லது எனக்குச் சொந்தம்னு இருக்கிற அப்படி யாராவது இருந்தால், அவுங்க அந்தச் சொந்தத்தை அவுங்க கையாலேயே அழிக்கறதுக்கு அடையாளமாக அவுங்க கையாலேயே கொள்ளி வைக்க வேண்டியது. இது ஒரு கட்டாயமோ என் இஷ்டமோ கூட
இல்லை. இது ஒரு வழக்கம், இதைச் செய்ய வேண்டியவன் என் ஸ்வீகார புத...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
“என்னோட வளர்ப்பு மகன் ஹென்றியை நான் என் மதத்துக்கும் என் நம்பிக்கைக்கும் பலவந்தமாகக் கொண்டு வர இஷ்டப்படலே. அவனுடைய வளர்ப்புத்தாய் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்களா இருக்கிறதனாலே அவன் ஒரு வேளை கிறிஸ்தவ மார்க்கத்துக்குப் போனாலும் போகலாம். அப்படி நிலைமை ஏற்படுகிற பட்சத்தில் எனக்குச் செய்ய வேண்டிய ஈமக்கடன்களை ஹிந்துக்களின் சடங்குகளில் நம்பிக்கையுள்ள யாரேனும் ஒரு பரதேசியைக் கொண்டு செய்து இந்தக் கர்ம காரியத்துக்காக அவருக்கு ஆயிரம் ரூபாய் தரவேண்டியது.
“இதுக்கெல்லாம் ஒண்ணும் முக்கிய அந்தஸ்து கிடையாதுன்னு நான் அறிவேன். எங்கேயோ பர்மா யுத்த முனையிலே நான் செத்துப் போயிருந்தால் இதற்கெல்லாம் அர்த்தம்
இல்லை. கடவுள் எனக்கு வாழ நல்ல சந்தர்ப்பமும் வசதியும் கொடுத்திருக்கிறதாலே இதையெல்லாம் எழுதி வெச்சிக்கிறேன். அதன் பிறகு எல்லாம் அந்தக் கடவுளின் சித்தம...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
இப்படி ஒரு சந்தர்ப்பத்திற்காக இரண்டு நாட்களாய்க் காத்துக் கிடந்தது அவளுக்கல்லவா தெரியும்!
அவருகொணம் வருமா?... இதோ இருக்குதே… என் மருமவப் புள்ளை… ஒரு கொரங்கு! ஆமா, கொரங்கு கொணம்,
பொண்ணாப் பொறந்தவ ‘எங்கம்மாவை அப்படியெல்லாம் பேசாதே’ன்னு சொன்னாத்தானேப்பா?
நான் பெத்த பொண்ணுதான் இந்த நவநீதம். அவளெக்கூட நம்பாதே.
“உங்கப்பன்தான் சம்பாதிச்சானோ…? இது எங்க தாத்தா வூடுதானே?” என்று கிழவிக்கு வெறி ஏற்றினான் பேரன்.
அப்பனையும், ஆத்தாளையும் மிஞ்சிடும் இது”
தன் மருமகன் ஒரு நாளாவது இப்படித் தனக்கு ஏதாவது கொண்டு வந்து கொடுத்ததுண்டா? என்று எண்ணி மனதிற்குள் துரைக்கண்ணுவைத் திட்டிக் கொண்டாள்.
தூக்கி வச்சிக்க ஆளு இருந்தாப் போதாதா, கெழவி கொண்ணாந்து உட்டுடுமே”
சும்மா பேருக்குச் சாமி கும்பிடுகிற மாதிரியான பாவனையில் - சற்றுக் கண்ணை மூடி நின்றுவிட்டுப் பக்கத்திலிருக்கிற கண்ணாடியின் முன்னால் போய் தலைவாரிக் கொண்டான்
“ஒரு அனுபவம் இன்னொரு அனுபவத்திற்குத் தடையாகிப் போகும்.”
“தொரை சொல்றது சரிதான்” என்று துரைக்கண்ணு அதைப் புரிந்து கொண்டது மட்டுமல்லாமல் அதை அங்கீகரிக்கவும் செய்தது இருவருக்கும் ஆச்சரியம் தந்தது.
நம்ப பப்பாவைப் பார்க்கற மாதிரிதான் இருந்திச்சி எனக்கு…
‘ரீஸன்ட்’
“அதெல்லாம் இந்தப் போலீஸ்காரங்களே நம்பக் கூடாதுங்க…
குடிக்கறது கெடுதலுதாங்க… ஆனா, அதுக்காக இது ரொம்ப அக்குருமம் இல்லீங்களா? அவங்களை அடிக்கறது… இம்சை பண்றது… ஜெயில்லே போடறது… மானம் மரியாதையில்லாம நடத்துறது – இதுவாங்க காந்தி சொன்னாரு?”
மனுஷாள் தராதரம் தெரியலேன்னா என்னாடா, உங்க சட்டம்!
செல்லரித்துப்போன அந்தக் கதவுகளை ஹென்றி விரியத் திறந்தபோது தெருப்பிள்ளைகள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். தேவராஜனும் கைதட்டினான்.
ஹென்றி தவிர மற்ற மூவரும் கஞ்சா புகை குடித்தார்கள்.
தேவராஜனுக்குப்பக்கத்தில் ஒரு குழந்தை மாதிரி ஒண்டிக்கொண்டு இருந்தான் ஹென்றி. அவன் உட்கார்ந்தால் அவனோடு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அவன் எழுந்தால் அவனோடு எழுந்து நின்று கொண்டு, அங்கே நடக்கிறவற்றைப் பார்த்தவாறு அந்தக் கும்பலில் ஒருவனாய்த் தனிமை கொண்டு இருந்தான் ஹென்றி.
“உனக்கு மானம் இருக்குதா? ஈனம் இருக்குதா? இதுதான் ஒரு பெரிய மனுஷன் பவுசா? வெக்கங்கெட்ட மூளிக்கி முக்காடு வேறயா?’ன்னு
“பேபி… ஹேய்… பேபி”
ஆனால் இப்போது ஹென்றி சிரித்தான். அந்தச் சிரிப்பு அவனது வழக்கத்துக்கு மாறானதாக இருந்தது. சற்றுமுன் அவள் சிரித்தாளே, அது போலவும்… அல்லது அவனுக்குள்ளே இருந்து அவளே சிரிப்பது போலவும் அது இருந்தது.
“நம்ம கிட்டே இருக்கிற பீடியெல்லாம் நம்ம பீடிதான்”
“பைத்தியக்காரிச்சினு சொல்லாதேடா, பாவம்!”
“என்… ஐயாவே… இப்படிப் பண்ணிட்டுப் போவீங்கன்னு நானு நெனைக்கிலியே சாமீ…’ன்னு
“அடியே ஆம்படையான், பொண்டாட்டிக்குள்ளே நாயம் என்னா? அநியாயம் என்னா?
தேவராஜனின் பள்ளிக்கூடத்தில் இடைவேளை மணியடிக்கிறபோதெல்லாம் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் கும்பல் கும்பலாய் இங்கே தண்ணீர் குடிக்க வருவார்கள்.
நகரத்தைவிட மின்சாரம், ரோடு, டிரான்ஸ்போர்ட் எல்லாம் கிராமத்துக்குத்தாங்க ரொம்ப முக்கியம். பயிர்த்தொழில் முழுக்கவும நவீனமாகணும்… மில் தொழிலாளிங்க மாதிரி இவங்களுக்கு டிரஸ், எட்டு மணிநேர வேலை, குடியிருப்புக் காலனி, ஹாஸ்பிடல் வசதி, பென்ஷன், பிராவிடண்ட் பண்ட எல்லாம் குடுக்கணும்..
‘கிராமத்து எளிமை’ அது இதுன்னு பேசி நகரமும் அங்கேயிருக்கிற ஆடம்பரமும் கிராமத்தை கொள்ளையடிக்குது.”
செம்பில் தண்ணீரும் வெற்றிலைப் தட்டும் கொண்டு வந்து திண்ணையின்மீது வைத்தார்.
“நான் சொன்னேனே மிஸ்டர் ஹென்றிப் பிள்ளை மை ஃபிரண்ட், ஃபிலாசபர், அண்ட் கய்டு”