More on this book
Community
Kindle Notes & Highlights
நிமிர்ந்து கண்களை மூடிக்கொண்டிருந்த தர்மகர்த்தா கண்களைத் திறந்தால் எங்கே மறைந்து நிற்கும் கண்ணீர் வெளிப்பட்டு விடுமோ என்று பயந்து மேல் துண்டால் முகத்தை மறைத்துத் துடைத்துக்கொண்ட பிறகு ஹென்றியைப் பார்த்தார்.
ஒண்ணு நியாயமாகவும் இன்னொண்ணு அநியாயமாகவும் இருந்தாக்க தீர்ப்பு சொல்றது நமக்குச் சுளுவு. ரெண்டு நியாயத்துக்கு நடுவிலே போய்த் தீர்ப்பு சொல்லவே கூடாது.
எழுதிக்காம இருக்கறதுதான் ஒறவு.
ஹென்றியைப் பார்க்கும்போது, அவனுடைய மூக்கைத் தவிர, அவன் அப்படியே தன் அண்ணனை உரித்து கொண்டு வந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அதை அவன் வாய்விட்டுச் சொன்னபோது, தேவராஜனும் ஹென்றியும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை செய்து கொண்டனர்.
என் பசங்களுக்கெல்லாம் அவங்க அண்ணனை இட்டுக்கினு போய்க் காட்ட வேண்டாமா?
“அப்போ நம்ப வூட்டுக்குப் போலாமா?” என்று அழைத்தான் துரைக்கண்ணு.
பின்னர் தேவராஜனிடம் அனுமதி கோருவது மாதிரி பார்த்தான்.
“அம்பேல் என்பது (I am on bail) ஐ யாம் ஆன் பெய்ல் - வேகமாகச் சொல்லி பாருங்க ஐயம் ஆம்பேய்ல் அய்ம்பேல் - அம்பேல்”
‘ஐ ஸ்பை’ விளையாட்டும் இப்படித்தான் I Spy தான்…
“நீங்கள் ரொம்பவும் அதிசயமான மனிதர். நீங்கள் வந்த அன்றைக்கே சொன்னீர்கள், எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால் என் குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவுமென்று…
முதலில் அக்கம்மாளிடம் போய் இந்த மகிழ்ச்சிகரமான செய்தியைச் சொல்லுங்கள்” என்று அவனைப் பிடித்துத் தள்ளாத குறையாக அங்கிருந்து கிளப்பினான் ஹென்றி.
அப்போது அவள் பேசியதில் ஹென்றிக்குப் புரிந்து ‘வெங்கடாஜலபதி’ என்கிற ஒரு பெயர் மட்டும் தான்.
என்னைப் பொறுத்தவரைக்கும் டுடே இஸ் எ க்ரேட் டே!
இந்த ஊரிலே, ஏன் மனுஷங்க எல்லோருமே… பார்க்கற மாதிரிப் பார்த்தா பெரிய மனுஷனாகத்தான் இருப்பான் போல இருக்கு.
நீங்க பெருந்தன்மையா இருந்ததுதான் இதுக்கெல்லாம் காரணம். சாதாரணமா ஒருத்தன் இந்த மாதிரி சொத்து மேலே சொந்தம் கொண்டாடிக்கிட்டு வரதுன்னா கோர்ட் மூலமாகத்தான் வருவான். அப்படி வந்தாலே மத்தவங்களுக்கு வரவன் மேலே ஒரு எதிர்ப்பும் வெறுப்பும் வந்துடும். நீங்க அப்படிச் செய்யாததுதான் உங்க பெருந்தன்மை.
இங்கேயும் ஹரிஜன்ஸ் மத்தியில் ஜாதிப் பஞ்சாயத்துதான்.
ஆனால், நம்ப ஊரைப் பொருத்த வரைக்கும் இந்த ஊர்ப் பஞ்சாயத்தை மீறியோ எதிர்த்தோ இந்த ஊர்க்காரன் கோர்ட்டுக்குப் போறதில்லை. நீங்க இதெல்லாம் தெரியாமலேயே இந்த ஊர் வழக்கப்படி நடந்துக்கிட்டீங்க.
“ஓ வாட் எ கல்ச்சர்!” என்றான் ஹென்றி: “தப்புப் பண்ணினவனைக் கூட ஒரு நல்ல காரியம் செய்ய வைக்கிற தண்டனை ஒரு பெரிய நாகரிகம் இல்லியா!”
“ஆனால் எல்லா ஊரிலேயும் அப்படி நடக்கறதில்லை. சில ஊர்லே பஞ்சாயத்துக்காரங்களே அபராதத் தொகையைப் பங்கு போட்டுக்குவாங்க” என்று சிரித்தான் தேவராஜன்.
உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை. ஒரு நல்ல நம்பிக்கையைச் சிதைக்காமலிருப்பதே மிகவும் முக்கியம்’
“துரைக்கண்ணு பிள்ளை நல்லா கேட்டார் இல்லே?
“யார் யாருக்குப் பொறந்தான்னு யாருக்குத் தெரியும்?”
“அதை பாலன்ஸ் பண்ணினாரே… ‘இன்னொருத்தர் சொல்றதை வச்சிதானே எல்லாம்’னு… எனக்குத்தான் அந்த இன்னொருத்தர் கூடக் கிடையாது” என்று சிரித்தான் ஹென்றி.
“டேய் கலப்பை”
நாலாவது பையன் சபாபதி”
கைக்குழந்தைக்குத் தன் அண்ணியின் பெயரை வைக்கப் போவதாகச் சொன்னான் துரைக்கண்ணு. ஹென்றிக்கு அவள் பெயர் தெரியாது. பப்பா அவள் பெயரைச் சொன்னதே இல்லை.
ஹென்றியை அவள் தனக்கு மகனாகப் பாவித்த போதிலும் வயது காரணமாக மரியாதை கருதி அவன் கண்ணில் அதிகம் படாமல் இருந்தாள்; கண்ணில் படுகின்றபோது பளிச்சென்று சிரித்துப் பேசினாள்.
‘வெஜிடேரியன்’ உணவை ஒரு மதத்தின் பெயரால் ‘சைவம்’ என்று அழைக்கிற வழக்கம் இங்கு பரவராக இருப்பதை அறிந்து – அது ஏன் என்று தெரியாமல் - அவன் ஆச்சரியப்பட்டான்.
துரைக்கண்ணு, வீட்டிற்கு வெளியே ‘அசைவ’ உணவுகள் சாப்பிடுவானாம்.
இந்தச் சமூகத்தில் பிறந்து, இந்தச் சைவக் குடும்பத்தின் மரியாதைக்கும் வழிபாட்டுக்கும் உரியவரான பப்பா, எப்படி முழுக்க முழுக்க அந்த ஆங்கிலோ - இந்தியக் கலாசாரத்துக்கு ஆட்பட முடிந்தது?’ என்று அவன் நினைத்துப் பார்த்தான்.
உணவும் உடையும் பேதப்பட்டாலும் இந்தச் சக மக்களின் நல்ல குணங்கள் அனைத்திலும் பப்பாவுக்கு ஒற்றுமை இருந்ததை இவர்களோடு பழகிய இந்தச் சில நாட்களிலேயே அவனால் தன் மனத்துள் ஒத்திட்டு உணர முடிந்தது.
அவன் திட்டுவதை யார் பொருட்படுத்துகிறார்கள்?
சவாதிப்பொறுக்கி’
‘இவர் நிஜமாகவே இறந்து போய்விட்டாரா? – பத்து நாளாச்சா?...’
துரைக்கண்ணு, பப்பாவைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் ஹென்றிக்கு சந்தோஷமாக இருந்தது.
சிரித்துக்கொண்டே வந்து அந்தப் படத்தை வாங்கிப் பார்த்த நவநீதம் கண்கலங்கி அழுது முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு போனாள். அம்மா அழுததைப் பார்த்த பிள்ளைகளுக்கு முகம் மாறிப் போயிற்று.
நாலு வயதான நடராஜன் மட்டும் சிரித்துக்கொண்டே, “அப்பா, அம்மா அழுவுது” என்றான்.
‘நியாயமாகப் பார்த்தால் இந்தக் குடும்பமே இப்போது துக்கம் கொண்டாடிக் கொண்டிருக்க வேண்டும். ஒரு வருஷத்திற்கு எந்த நல்ல காரியமும், பண்டிகை விசேஷங்களும் இந்த வீட்டில் கொண்டாடக்கூடாது.
அவர் போன வாரம்தான் இறந்தான் என்ற செய்தியை அவன் சொன்னபோது வீட்டில் உள்ள எல்லோரும் தலை முழுகினார்கள்; வீட்டைக் கழுவி விட்டார்கள். அன்று மட்டும் துக்கம் அனுஷ்டித்தார்கள்.
கடைசியில் அன்று இரவு சாப்பிடப் போகுமுன் பப்பாவும், மம்மாவும் இருக்கிற அந்தப் படத்தை நடுக்கூடத்தில் வைத்து இரண்டு பக்கமும் குத்து விளக்குகள் ஏற்றி, பூ போட்டு அந்த வேளைச் சாப்பாட்டை நிவேதனம் பண்ணி, வீட்டில் உள்ள எல்லோரும் விழுந்து வணங்கினார்கள். கைக்குழந்தையைக் கூட நவநீதம் படத்தின் முன்னால் வந்து குப்புறப் படுக்க வைத்துத் தூக்கிக்கொண்டு போனாள்.
அவன் ‘கல்லார்க்கும் கற்றவர்க்கும்’ என்கிற திருவருட்பா பாடலை இனிமையாகப் பாடினான். ஹென்றி இதற்கு முன்னால் இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறான். பப்பா பாடுவார்.
அவன் மடியிலிருந்த குழந்தையும் கைதட்டிச் சிரித்தது.
நம்பல்லாம் அவுங்க அப்பாரோட மனுஷாளு இல்லையா? நம்பளோட இருக்கிறதுக்காகத்தான் இங்கே வந்திருக்குது. அவுறு மேலே இருக்கிற ஆசையினாலே தானே…
எனக்கு என்னமோ அண்ணாரு இல்லாத கொறையே இப்பத் தீந்த மாதிரி இருக்குது - இது வந்தப்பறம்…”
“இந்தக் கெழவி ஏதாவது வெஷமம் பண்ணி வெக்கப் போவுது! யாராவது வந்தா மனசு தாங்காதே” என்று பஞ்சவர்ணத்தம்மாளைப் பற்றி எச்சரித்தான் துரைக்கண்ணு.
வணங்கியபோது தானும் விழுந்து வணங்கி நெற்றியில் விபூதி வாங்கி வைத்துக்கொண்ட ஹென்றியை நினைத்துக் கொண்டு சொன்னான். “இது நம்ப மதந்தான். கழுதை… நீ கவனிக்கலியா சாயங்காலம் - நெத்தியிலே துண்ணூறு வெச்சிக்கிச்சே” என்றான்.
“ஆமாம் - உங்கப்பா ஆனை மேலே வரான்” என்று பஞ்சவர்ணத்தம்மாள் சலித்துக் கொண்டாள்.
‘கல்லா-மண்ணா’
தன்னையே அவமதிக்கும் பொருள் உள்ள கெட்ட வார்த்தை ஒன்றைச் சொல்லி அந்தப் பையன்களைத் திட்டினான்…
சேரிகளில் வாழ்கிற பறைச்சனங்கள்