என்னைப் பற்றியே எழுதுகிறாய்என் வார்த்தைகளைஎன் காலை மௌனத்தைஅந்த மௌனம் உனக்குத் தரும் துயரத்தைஎன் பூனைகளின் விளையாட்டைஎல்லாவற்றையும் கவிதையாக்குகிறாய் எப்போது ஓய்வெடுப்பாய், கவிஞனே?எப்போதுஉன் கணினியில்தட்டச்சு செய்வதை நிறுத்தி விட்டுஉன் மேசையை விட்டு எழுந்துஉனக்குப் பிடித்தமான காஃபியைக் குடித்தபடிஜன்னல் வழியே மேகங்களைப் பார்ப்பாய்?அல்லதுநீ கவிதையெழுதும் போதெல்லாம்ஜன்னலில் வந்து எட்டிப் பார்த்துச் செல்லும்உனக்குப் பிரியமான மைனாவுடன்பேசுவாய்? ‘நீயே கவிதைஅதனால்நீ பேசுவதெல்லாம் கவிதையாகிறது’என்கிறாய்பல நூறு முறைபல நூறு கவிகளால்சொல்லப்பட்ட தேய்மொழி ‘சரி, கவிதையை நிறுத்தவொருஎளிய வழியிருக்கிறது அன்பே!பயமுறுத்தும் அளவுக்கு எளிதுகாலையில் என்ன சாப்பிட்டாய்?மதியம் ...
Read more
Published on August 16, 2025 01:57