அடிக்கடி கேட்கப்படுகிறதுஏன் கவிதை எழுதுகிறீர்கள்நெரூதாவிடமும் கேட்கப்பட்டதுநானா கவிதையைத் தேடிப் போனேன்கவிதை என்னைத் தேடி வந்ததுஎன்றார் அவர் ஒரு பத்திரிகைக்குக்கவிதை அனுப்பினேன்எடிட்டர் கேட்டார்ஏன் கவிதை எழுதுகிறீர்கள் எனக்குத் தெரியவில்லைஎன்றேன் வெகுளியாய் மாரத்தன் ஓட்டத்தைப் போல்இன்று ஒரு ஆறு கவிதை எழுதினேன் படித்து விட்டுஏனிந்த வெறிஏனிந்தப் பித்தநிலைஎன்ன செய்தால் அடங்கும்எனக் கேட்டாள்கவிதைக்கு உரியவள் சிசு வெளியேற ஒன்பது மாதம்வெளியே வந்தால் உயிரின் மலர்ச்சிஉள்ளே இருந்தால் மரணத்தின்காரிருள்கவிதைக்கு எத்தனைக் காலம்என்பதை யாரறிவார்வெளியே வந்தால் உயிர்உள்ளே இருந்தால் மரணம்என்றேன் இன்னொரு பதிலும் உண்டுசொர்க்கம் ...
Read more
Published on July 24, 2025 07:15