எவ்வளவு உயரமானாலும்
மேலேயும் கீழேயும்
ஏறி இறங்கும் மின் ஏணிகள்
மனிதர்களை நசுக்கிவிடாததும்
வழிவிடுவதுமான
நுண் உணர்வுக் கருவிகள்
உறுதியான பாதுகாப்பு முறைகள்
ஒழுங்கினையே உயிர்மூச்சாய்க் கொண்ட
இன்னும் எத்தனை எத்தனை பணி இயந்திரங்கள்!
கண்டுகொள்ள முடியாதது எதுவுமில்லை எனும்
கண்காணிப்புக் காமிராக்கள்
கடவுளின் விழிகளென செயற்கைக் கோள்கள்
இத்தனைக்குப் பிறகும்
வறுமையில்லாத
அறமின்மையில்லாத
துயரில்லாத
அழகான
உலகைப் படைக்க முடியாது
தடுத்துக் கொண்டிருப்பது எது?
Published on June 01, 2025 12:30