மனம் பறிகொடுத்த
வியப்புக் களியுடன்தான்
அவன் அந்தப்
புதிய பென்சிலைப் பார்த்தான்
ஒரு நுனியில் எழுதும் கரி
மறு நுனியில்
தவறு நேர்கையில் அதை அழிக்கத்
தயாராய் இருக்கும் அழிப்பான் துண்டு
எழுதக் குவிகையில்
கவனத்தின் உச்சியிலிருக்கிறது அழிப்பான்
கண்ட பிழையை அழிக்கக் குவிகையில்
அதன் உச்சியிலிருக்கிறது
அணையாத தயார்க் கனலுடன் எழுதுகரி
Published on May 27, 2025 12:30