"அரச்சிடலாம் துவையல்இருக்குபழைய பாக்கிக்காய்
வசவிக்கொண்டேஅய்யாத்துரை தந்தவறுகடலைகொஞ்சம் சுள்ளியோடுஇருக்குராமாயி தந்த குருனையும்காய்ச்சிடலாம் கஞ்சியும்எதிர் வீடு போன மகநனச்சிராம கொண்டு வரணும்கங்க”என்று இருபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினேன்.எதிர்த்த வீட்டு துர்க்கா அம்மாயி வீட்ல கங்கு வாங்குவதற்காக கரண்டியத் தூக்கிக்கொண்டுபோன அனுபவம் எனக்கு உண்டு.இப்ப அதெல்லாம் அவுட் டேட்டட் ஆயிடுச்சுபோல என்று நினைத்திருந்தேன்.தோழர் செஞ்சி தமிழினியன் எழுதிய “ஊத்தாம் பல்லா” நாவல் குறித்து நான் பேச வேண்டும் என்பதற்காகாக அந்த நாவலை தோழர் லார்க் பாஸ்கரன் அனுப்பியிருக்கிறார்.செமையான நாவல்.நூல் குறித்து பேசிவிட்டு எழுதுகிறேன்.அதில் ஒரு இடம்,மலையனூரம்மா கிழவி அடுப்பை பத்த வைக்கிறாள். கங்கு கேட்டு இருளாயி வருகிறாள் கரண்டியோடு. இருவருக்கும் இடையேயான உரையாடலைக் கேளுங்கள்.“ஏண்டி இருளாயி, யாரு அடுப்ப பத்த வைப்பாங்கன்னு பாத்துகினே இருந்து கலகலன்னு புடிச்சு எரிய ஆரம்பிச்சதும் வந்தீர்ர, தாலிக்கிற கர்ண்டியையும், ஒரு கொக்காணையும் கையல் எடுத்துக்கீனு”சிரித்துக்கொண்டே மலையனூரம்மாவிற்கு பதில் சொல்கிறாள் இருளாயி,“இன்னா சித்தி பண்றது?” இந்த வாரம் தனியா வத்திப்பெட்டி வாங்கியாந்து போட்டேன். எந்த இடத்துல சில்லறை இருக்கும், எந்த இடத்துல வத்திப்பெட்டி இருக்கும்னு தினுசா தெரிஞ்சு கரைட்ட அத தூக்கி இடுப்புல சொருகிக்கிட்டு போய்ட்டா நான் என்ன பண்றது”எவ்வளவு நுட்பம்கஞ்சி காய்ச்ச கம்பு, சோளம் குருணை பிரச்சினைதான் பொதுவா பேசப்படும்பத்த வைக்க வத்திப்பெட்டிக்கே பிரச்சினை தோழர்களேபுருஷனுக்கு பயந்து வத்திப்பெட்டியை ஒளிச்சு வைக்க வேண்டிய நிலையை எவ்வளவு நாசுக்கா வைத்திருக்கிறார் செஞ்சி தமிழினியன்1970 பக்கமா கரண்டியோட அலைஞ்ச அனுபவம் உண்டுஇப்பவும் இருக்கு போலமுத்தம் செஞ்சி தமிழினியன்
Published on May 28, 2025 01:32