ஒரு பழம்
பதினெட்டு துண்டுகளாய்
ஒரு தட்டில்!
பதினெட்டு துண்டுகளும்
ஒரு முழுப் பழமாவதற்கு துடிதுடித்ததில்
ஒவ்வொரு துண்டும்
ஒரு முழுப்பழமாகிவிட்டது!
அவர்களிடம்தான் இப்போது
எத்துணை கனிவு!
எத்துணை இனிப்பு!
எத்துணை அழகு!
எத்துணை நிறைவு!
Published on May 20, 2025 12:30