மானுடரோடு பேசுவதில் மனம் களைத்துஅந்தக் கானகத்தின் மௌனத்தில்ஒரு பாறையின் குளிர்ந்த தோளில்என் தனிமையை சாய்த்திருந்தேன். அப்போது ஒரு அணில் குஞ்சுஇலைகளினூடாக நடனமாடியபடிஎன்னருகே வந்துஅங்கே இறைந்து கிடந்த சொற்களைஒளிரும் முத்துக்களெனஒவ்வொன்றாய்ப் பொறுக்கியெடுத்துஅதன் மென்மையான வாலால் துடைத்து,என் முன்னே அடுக்கியது. நான் கேட்டேன், “எதற்கு இந்த முயற்சி,என் சொற்களை நீ ஏன் தேடுகிறாய்?” அது சிரித்து, “உன் மௌனம் பேச,இது எனது சிறிய காணிக்கை” என்றது நான் நன்றி சொல்லும் முன்நிழலென உருண்டு வந்தவொருகாட்டுப்பூனை அந்த அணிலைக்கவ்விக்கொண்டு கானகத்தின்இருளில் மறைந்தது ...
Read more
Published on May 16, 2025 08:46