அந்தப் பூங்காவின் மரநிழல் பெஞ்சில்
ஓர் இணையர்.
அவர்கள் நடுவே
கண்ணுக்குத் தெரியாத உருவினனாய்
ஓர் அறிஞன் வந்தமர்ந்துகொண்டு
குறுக்கே குறுக்கே பேசத் தொடங்கினான்
முதலில் நீ இங்கிருந்து போடா வெளியே
என்று அடித்து விரட்டத் தொடங்கினார்
கோபம் கொண்ட அந்தப் பெண்மணி!
Published on May 15, 2025 12:30