அவர்கள்
வாயில் காவலர்களை
வாடகைக்கு அமர்த்தினார்கள்
அவர்கள் சல்யூட்டை
தலையசைத்து ஏற்றுக் கடந்தேன்
நான்காவது வீட்டில் இருந்துதான்
ஒருவர்
வாயில் காவலராயிருக்கிறார்
பேச எனக்கு ஏதுமிருந்ததாக
உணரவில்லை நான்
மூன்றாவது வீட்டில்தான்
ஒரு கௌரவ விரிவுரையாளர்
எனக்கென்ன பேச இருந்தது
அரசுப் பேருந்து கனவில் இருக்கும்
தனியார் பேருந்து ஓட்டுனர்
அடுத்த வீட்டில்
அடுத்த வீடு
என்னுடையதாகத்தான் இருக்கவேண்டுமென்ற
அவசியமில்லை
இதைப் படித்துக் கொண்டிருக்கும்
உங்களுடையதாகவும் இருக்கலாம்
Published on April 07, 2025 20:08