01.05.1924 அன்று திருவனந்தபுரத்தில் குஞ்சு கிருஷ்ணாபிள்ளை அவர்கள் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ”எடபாடம்” என்ற ஒரு ஊரைக் குறித்து பேசுகிறார்
அந்த ஊர் முழுமையான காங்கிரஸ் ஊர்
முழுமையான கதர் கிராமம்
யாரும் மது அருந்துவதில்லை
காவலர்கள் மட்டுமே மதுக்கடைக்கு போகிறார்கள்
யாரும் ஒருவரோடு சண்டை போடுவதில்லை
அஹிம்சையைக் கடைபிடிக்கும் அமைதியான ஊர்
மது விற்பனை ஆகாதது சிலரை உறுத்துகிறது
காரணத்தை அலசுகிறார்கள்
அமைதியை குலைத்தால் மது ஊருக்குள் வந்துவிடும் என்று உணர்கிறார்கள்
ஒரு அடாவடியான காவலரை அந்த ஊருக்கு மாறுதலில் அனுப்புகிறார்கள்
அவர் அந்த ஊரின் பழைய முரட்டு மனிதன் ஒருவரிடம் வம்பிழுக்கிறார்
அவர் காவலரை பிய்த்து எடுக்கிறார்
காவல்துறை ஊரை சூறையாடுகிறது
ஊர் பழையபடி கலவர பூமி ஆகிறது
இதை சொல்லி வைக்கம் யுத்தத்தை கலவரத்திற்கு இடம் கொடுக்காமல் அமைதியாக நடத்த வேண்டும் என்கிறார் பெரியார்
ஆமாம் எடப்பாடம் எங்கு இருக்கிறது?
09.03.2025
Published on March 10, 2025 01:16