உல்லாசம் நாவல் வெளிவரும் வரை அது பற்றி ஒரு வார்த்தை எழுதக் கூடாது என்று இருந்தேன். ஆனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. நாவலின் தலைப்பு மாறி மாறி உருண்டுகொண்டே இருக்கிறது. Ullasa: The Erotics of Being என்று ஒரு தலைப்பு சரியாக வரும் என்று தோன்றுகிறது. நாவலின் நாயகி ஸஞ்ஜனாவின் நாட்குறிப்புகளில் நானே ஒரு பெண்ணாக உருமாறிக்கொண்டிருக்கிறேன். ஸ்ரீ பெருமளவுக்கு உதவி செய்கிறாள். ஸஞ்ஜனாவை எழுதிக்கொண்டிருக்கும்போது தவிர்க்கவே முடியாமல் ஸில்வியா ப்ளாத் மற்றும் வர்ஜீனியா வுல்ஃபின் ஞாபகம் ...
Read more
Published on February 20, 2025 02:47