திராவிட இயக்கத்தினர் இப்போதெல்லாம் context பற்றிப் பேசத் துவங்கி விட்டார்கள். அதாவது பெரியாரைப் பற்றி பேசும்போது context முக்கியம் என்கிறார்கள். நான் முழுவதும் உடன்படுகிறேன். அதை எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறேன்.
பெரியாருக்கே context தேவை என்றால் அறிவியலுக்கும் அகழ்வாராய்ச்சிக்கு அது நிச்சயம் தேவை. முக்கியமாக கரித்துண்டின் காலத்தை கண்டுபிடிக்கும் பொருள் மீது ஏற்றுவதற்குத் தேவை. கீழடிக் கரித்துண்டிற்கும் இது பொருந்தும். சிவகளை போன்ற இடங்களில் கிடைத்த கரித்துண்டுகளுக்கும் பொருந்தும்.
கீழடியில் கரித்துண்டு கிடைத்த உயரம் வேறு, ஓடு இருந்த உயரம் வேறு.
சிவகளையில் மண்சரிந்து இருந்த இடத்தில் கிடைத்த கரித்துண்டை வைத்துக் கொண்டு இரும்பின் காலத்தைக் கணக்கிடுவது அறிவியலுக்குப் பொருந்தாது. இரும்பு உலைகள் கிடைத்து, அவற்றின் காலம் கணக்கிடப்பட்டால் ஒழிய், தமிழகத்தில்தான் முதன்முதலில் இரும்பு கண்டுபிடிக்கபட்டது என்ற கூற்று அறிவியலால் ஏற்றுக் கொள்ளப்படாது. அறிவியல் கறாரானது. இது திராவிட அரசிற்கும் அதற்கு குடை பிடிப்பவர்களுக்கும் புரியாமல் இருப்பது வருந்தத் தக்கது.
Published on January 28, 2025 11:22