புருஷன் நாவலின் ஒரு பகுதியைப் படித்தேன். பத்தாயிரம் வார்த்தைகள். அரம்யா என்பவளின் கதை. அவளைத் திருமணம் செய்து கொள்ள நிச்சயிக்கப்பட்ட ரகுராம் என்பவனின் பார்வையில் சொல்லப்படும் கதை. இந்த முறை படிக்க ஆரம்பித்த போது கொஞ்சம் கம்மியான எதிர்பார்ப்புதான் இருந்தது. ”என்னத்தெ எழுதிடப் போறாரு, தம்பி கிட்ட மொழி ஆளுமை கிடையாது, மொழிதான் இலக்கியத்துக்கே ஆணி வேர், கதையைச் சொல்வாரு, அது பயங்கரமாத்தான் இருக்கும், பாத்துக்குவோம்” என்றே நினைத்திருந்தேன். ஆனால் என் எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது. ரகுராம் ...
Read more
Published on December 02, 2024 06:43