என் நண்பர் ரிஷான் ஷெரீஃபுக்கு நேற்று (3.11.2024) பிறந்த நாள். புகைப்படத்தில் பார்ப்பதற்கு இருபத்தோரு வயது இளைஞராகத் தெரிகிறார். நேரில் சந்தித்தது இல்லை. ரிஷான் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். தி.ஜானகிராமனுக்குப் பிறகு என்னை மயக்கி வசியப்படுத்திய மொழி ரிஷானுடையதுதான். எங்கிருந்து இந்த மொழிநடையைக் கற்றார் என்பதுதான் பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. சி. மோகனின் மொழிநடையும் வசியம் செய்வது போல் இருக்கும். ஆனால் மோகன் என் வயதுக்காரர். ரிஷானுக்கோ என் பேரன் வயது. அதனால்தான் ஆச்சரியம். ஃபேஸ்புக்கில் நேற்று ...
Read more
Published on November 03, 2024 21:12