அத்தியாயம் ஒன்று ஏழு ஆண்டுகளாக இருந்த வீட்டை ஏன் மாற்றினீர்கள் என்று பல நண்பர்கள் பெருமாளைக் கேட்டார்கள். ஏழு ஆண்டுகள் என்ன, பத்து ஆண்டுகள் தனிக்காட்டு ராஜாவாக மைலாப்பூரில் வசித்த தனி வீட்டையே மாற்றிக்கொண்டு வரவில்லையா? என்ன அற்புதமான வீடு! மைலாப்பூரில் ஒரு தனி வீடு. சுற்றி வர மரங்கள். தோப்புக்குள் இருப்பது போல் இருக்கும். பத்துப் பன்னிரண்டு மரங்கள். அது போதாதென்று பெருமாள் கடம்ப மரம் வேறு வைத்தான். அது வேறு ஆலமரம் போல் பெருகி ...
Read more
Published on September 15, 2024 08:20