என்னுடைய முதல் விமர்சனக் கட்டுரை ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலுக்கு எழுதியது. அதற்கு முன்னால் ஃப்ரெஞ்ச் தத்துவம் பற்றி படிகள், இலக்கிய வெளிவட்டம் ஆகிய காலாண்டு இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தேன். அப்பத்திரிகைகளில் நான் தான் பிரதான எழுத்தாளன். நாங்கள் ஒரு குழுவாகவே செயல்பட்டோம். ஆனால் அந்தப் பத்திரிகைகளிலேயே ஜே.ஜே. நாவலுக்கான என் விமர்சனத்தை வெளியிடவில்லை. அப்போதிருந்து தொடங்கி இன்று வரை என் எழுத்துக்கு எதிர்ப்பு மட்டுமே இருந்து வருகிறது. என் எழுத்தைப் பிடிக்காதவர்கள் பற்றி எனக்குக் கவலையே இல்லை. ...
Read more
Published on September 11, 2024 07:25