அவள் என்பதே இந்தக் கவிதைக்கு அவள் பெயராகட்டும்***********************************அவள் தனது பெயரை இழப்பதற்குமுன்யாரோ
ஒருவர் இறுதியாய் அவளை பெயர் சொல்லி அழைத்திருப்பார்தான்பெயரென்னவென்று அவளிடமே கேட்கலாமென்றால்மொழி புரியவில்லைஅவள் என்பதே இந்தக் கவிதைக்குஅவள் பெயராகட்டும்அந்தப் பேருந்து நிலையத்தில்தூங்குகிறாள்மீதிநேரம் கத்திக் கொண்டிருக்கிறாள்அவளது சத்தம் பலருக்குஅருவெறுப்பாகவும்சிலருக்கு எரிச்சலாகவும்இருக்கிறதுஎன்ன பேசுகிறாள் என்றுயாருக்கும் புரியவில்லைபுரிந்துகொள்ள மெனெக்கெடவும் இல்லைஒரு கையில் பிஸ்கெட் பாக்கெட்டையும் மறு கையில் அம்மாவையும் பிடித்தபடி அவளைக் கடந்த அந்தக் குழந்தைக்கும் அவள் சத்தம் கேட்கிறதுஅம்மாவின் கை உதறி ஓடுகிறாள்இரு கன்னங்களிலும் கைகளை வைத்தபடி தலையை அப்படியும் இப்படியும் ஆட்டுகிறாள்அவளும் அப்படியும் இப்படியும் தலையை ஆட்டுகிறாள்பிஸ்கெட் பாக்கெட்டை நீட்டுகிறாள்ஒரு கையால் பாக்கெட்டைவாங்கியவள்மறுகையால் தலைநீவி நெட்டி .முறிக்கிறாள்டாட்டா இருபுறத்திருந்தும் பறக்கிறதுஅவளது சத்தம்பசியின் வலிச் சத்தம்குழந்தைக்குப் புரிகிறதுகுழந்தைக்கு மட்டும் புரிகிறது
Published on August 07, 2024 03:31