ஆண்டன் செகாவ் பற்றி, தஸ்தயேவ்ஸ்கி பற்றி, மாப்பஸான் பற்றி, ப்யூகோவ்ஸ்கி பற்றி, மற்றும் பல மேற்கத்திய இலக்கிய மேதைகள் பற்றியெல்லாம் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் ரோமாஞ்சனம் பெருகப் பேசும்போதெல்லாம் எனக்கு அசூயையாக இருக்கும், நம்மிடையே இருக்கும் மாமேதகள் பற்றி யார் ஐயா பேசுவது என்று. பேசாவிட்டாலும் பரவாயில்லை, அந்த மாமேதைகள் மீது மூத்திரமும் அடித்தால் அந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல? அதிலும் என் மாணவரே அப்படிச் செய்யும்போது மனம் பதறுகிறது. இது அராத்து: “லா.ச.ரா வின் அபிதா ...
Read more
Published on July 26, 2024 22:39