4. நான்தான் ஔரங்ஸேப்… நாவலை பிஞ்ஜ் என்ற இணையதளத்துக்காக எழுதியபோது சில புதிய விஷயங்களை அனுபவம் கொண்டேன். ஆரம்பத்தில் வாரம் இரண்டு முறை என்ற கணக்கில் அத்தியாயங்கள் வெளிவந்தன. ஆனால் சில தினங்களிலேயே வாசகர்கள் வாரம் மூன்று முறை வேண்டும் என்று கேட்டார்கள். அதனால் ஒன்று விட்டு ஒருநாள் என்ற கணக்கில் அத்தியாயங்களைக் கொடுக்க ஆரம்பித்தேன். ஒரு அத்தியாயம் சுமார் 1400 வார்த்தைகள். ஒரு அத்தியாயத்துக்குப் பத்தாயிரம் ரூபாய் தந்தார்கள். அந்தப் பணத்தில்தான் அவ்ட்ஸைடர் ஆவணப்படம் எடுத்தது. ...
Read more
Published on July 23, 2024 05:43