கேரள சாலைவழிப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு சென்னை திரும்பி விட்டேன். கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அருவிக்குழி என்ற மலைக்கிராமத்தில் தங்கினோம். கடும் மழை என்பதால் ஒரே ஒரு முறைதான் அருவியில் குளிக்க முடிந்தது. முப்பது ரூபாய்க்கு மீன் சாப்பாடு. மூன்று வகை காய்கறியும், இரண்டு வகை துகையலும், ஒரு தேங்காய்ப் பதார்த்தமும் தருகிறார்கள். எனக்குப் பிடித்த உனக்கலரி (சிவப்பு அரிசிச் சோறு.) பொறித்த மீன் வேண்டும் என்றால் விலை இருபது ரூபாய். அளவு சாப்பாடு அல்ல. ...
Read more
Published on June 24, 2024 08:07