அக்கறையுள்ளவர்கள் எங்காவது கூடுவோம் என்பது மூன்று

 இன்றைய (17.05.2024)“The Hindu" வில் “class X1 public exam wasn't launched keeping welfare of students in mind" மேக்னா என்பவர் எழுதியிருக்கிறார்கள்

மிகவும் மெனெக்கெட்டு சரியான தரவுகளோடு தந்திருக்கிறார்குழந்தைகளின் கல்வி குறித்து அக்கறையோடும் ஆழத்தோடும் நல்ல ஹோம் வொர்க்கோடும் உரையாடுபவர்களின் எண்ணிக்கை அருகிவிட்டது என்ற வகையில் அப்படி ஆழமான உரையோடு வருபவர்களைக் கண்டால் அப்படி ஒரு மகிழ்ச்சி வருகிறதுஅதும் +1 வகுப்பு தேர்வு குறித்து இத்தனை மனக்கெடல்களோடு தந்திருப்பமைக்காக +1 தேர்வு குறித்து 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கத்திக் கொண்டிருப்பவன் என்ற வகையில் அவரது கரங்களைப் பற்றிக் கொள்கிறேன்அவரது இந்தக் கட்டுரை இன்னும் இதுகுறித்து உரையாடல் தேவைப்படுகிறது என்பதையே குறிக்கிறதுஒரு கருத்தாய்வுக் கூட்டம்தோழர் பிரபஞ்சன், எழுத்தாளர் இமையம், பாராளுமன்ற உறுப்பினர் தோழர் ரவி, பேராசியர் கல்யாணி அய்யா அவர்களோடு நானும் கலந்து கொள்கிறேன்அன்றைய பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் உதயசந்திரன் சார், அன்றைய பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் கார்மேகம் சார், அன்றைய இயக்குநர் இளங்கோவன் சார் இவர்களோடு இன்னும் சில இணை இயக்குநர்கள் பங்கேற்கிறார்கள்அய்யா கல்யாணி அவர்களும் நானும் +1 வகுப்பிற்குப் பொதுத் தேர்வு வைக்க வேண்டும் என்றும் செமஸ்டர் முறை அவசியம் என்றும் மன்றாடினோம்உதயசந்திரன் சார் புன்னகைத்தார்நம்பிக்கைப் பிறந்தது”The public exam was not introduced keeping students' welfare in mind. To curb theprivate schools'practice (of skipping class X1 syllabus), the state decided to tax the students"என்ற திரு அருண் ரத்தினம் அவர்களின் கருத்தை தனக்கு ஆதரவாக அவர் வைக்கிறார்இதை அப்படியே ஏற்க இயலாதுஅப்போது +2 கட் ஆஃப் மட்டுமே நேரடியாக மருத்துவம் மட்டும் பொறியியல் கல்லூரிகளுக்கு எடுக்கப்பட்டதுதனியார் பள்ளிகள் +1 மற்றும் +2 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் +2 பாடங்களில் மட்டுமே கவனம் செலுத்தினஅரசு மற்ரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அந்தந்த ஆண்டிற்கு உரிய பாடங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டனவிளைவாகஇரண்டு ஆண்டுகளும் ஒரே வகுப்பு பாடங்களைப் படிக்கும் குழந்தைகள் அதிக கட் ஆஃப் பெறும் வாய்ப்பு இயல்பாகக் கிட்டியதுஇரண்டு வருடங்களும் அந்தந்த வகுப்பு பாடங்களாஇ நடத்த வேண்டும் என்பது இதை மனதில் கொண்டும் கோரப்பட்டதுதான்ஆனால் இதை மட்டுமே கொண்டு அல்ல+1 பாடங்களைப் படிக்காமல் வெளியேறும் குழந்தைகளுக்கு இழப்பு அதிகம் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டதுதான்இந்த ஆண்டு கிட்டத்தட்ட +2 தேர்ச்சி விழுக்காடு +1 தேர்ச்சி விழுக்காட்டைவிடக் குறைவுஇது ஒவ்வொரு ஆண்டும் இப்படி வருவதும் இயல்புதான்ஏன் +1 ஐவிட +2 வில் தேர்ச்சி விழுக்காடு என்பதற்கு மாடரேஷன் உள்ளிட்டு நிறை காரணங்கள் உள்ளனநான்கு செமஸ்டர்களாக நடத்துவது என்பது ஒரு ஆலோசனைமேல்நிலை என்பது இண்டகெரேட்டட் கோர்ஸ்ஆகவே 11 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு என்பதைத் தவிர்க்கலாம் என்பது இரண்டுஇன்னும் உரையாட இதில் நிறைய இருக்கிறது என்ற வகையில்அக்கறையுள்ளவர்கள் எங்காவது கூடுவோம் என்பது மூன்றுமீண்டும் ஒரு முறை மேஹ்னா அவர்களுக்கு என் அன்பும் நன்றியும்#கல்விedn#தேர்வுedn
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 16, 2024 22:24
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.