மொழிபெயர்ப்பு பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். நானும் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன். ஊரின் மிக அழகான பெண் என்ற என்னுடைய மொழிபெயர்ப்புத் தொகுதி இன்றைய மொழிபெயர்ப்பாளர்களின் முன்மாதிரி நூலாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும். இதை யாரும் சொல்லாததால் நானே சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. என் பெருமைக்காக அல்ல. மொழிபெயர்ப்பாளர்களின் நன்மைக்காக. தருண் தேஜ்பாலின் The Valley of Masks நாவலை நானும் தாமரைச்செல்வியும் காயத்ரியும் மொழிபெயர்த்தோம். அதுவுமே மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு வழிகாட்டி நூல்தான். மொழிபெயர்ப்பு எப்படி வந்திருக்கிறது என்று தருண் என்னைக் கேட்டபோது ...
Read more
Published on May 15, 2024 23:52