வணக்கம்,
நலமாக இருக்கிறீர்களா?
வாசகசாலை தளத்தில் வெளியான வெளிச்சம் படித்தேன். மெல்லிய அகில் புகை போல வாழ்ந்து மறைந்த சூடாமணி அவர்களின் சித்தரிப்பு சற்றும் மிகையின்றி வந்துள்ளது. என்னுடைய பிரியத்துக்கு உரிய எழுத்து அவருடையது. சாந்தமான நடையால் சலனங்களை ஏற்படுத்தும் தன்மையுடையது. உங்கள் சிறுகதை என்னை ஒரு மீள்வாசிப்புக்குத் தூண்டுகிறது. நன்றி
சூரியன் MR
அன்புள்ள சூரியன்,
நலம்.
நலம் விழைகிறேன்.
எழுத்தாளர் சூடாமணியின் கதைகள் பற்றி நீங்கள் எழுதியிருப்பது குறித்தும், மறுபடியும் அவர் கதைகளை வாசிப்பதற்கு என் கதை தூண்டுகோலாக நீங்கள் உணர்ந்தது குறித்தும் மகிழ்ச்சி.
வாசிங்க.
அன்புடன்,கமலதேவி
வெளிச்சம் கதைக்கான இணைப்பு :
https://vasagasalai.com/velicham-sirukathai-kamaladevi-vasagasalai-92/
Published on April 07, 2024 18:39