”பொன்முடியோட வக்கீல் கணக்கா பேசறியே” என்பதுமாதிரி தொடர்ந்து விசாரிக்கப்படுகிறேன்
ஒருபோதும் இல்லைஇது மாநில அரசின் முடிவின் மீதான ஆளுனரின் அடாவடித்தனம் மீதான எனது கோவமும்அதை மிகச் சரியாக எதிர்கொண்ட முதல்வர்மீதான மகிழ்வும்ஒன்று சொல்ல வேண்டும்பொன்முடியின் பதவி பறிக்கப்பட்டபோது நான் அதுகுறித்து எதுவுமே அலட்டிக் கொள்ளவில்லைஎன்னை விடுங்கள், விழுப்புரம் திமுக தோழர்களே அதுகுறித்து அலட்டிக் கொள்ளவில்லைஅவரது தெருவில்கூட கடையடைப்பு இல்லைஆ.ராசா கைதானபோது பெரம்பலூர் கொந்தளித்துக் கிடந்ததுஇப்போதும் பொன்முடி அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சம்பாரிக்கவில்லை என்றும் நாம் சொல்லப் போவதும் இல்லைஅதுகுறித்து பேசுவதற்கு யாருக்கும் உரிமை உண்டுபேசட்டும்அதற்கு பதில் சொல்ல வேண்டியது பொன்முடிஆனால் ஆளுனர் இதை பேசக்கூடாதுஒருவேளை உச்சநீதிமன்றம் அவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தால்அவர் உள்ளே போவார், பதவி இழப்பார்ஆனால் அப்போதும் அதுகுறித்து கருத்து சொல்ல ஆளுனருக்கு உரிமை இல்லை
Published on March 25, 2024 20:10