யாரோ ஒருவன்
கொஞ்சம் கடல் அள்ளிகொண்டைக் கடலையாக்க
யாரோ ஒருவன்கொண்டைக் கடலையானஅந்தக் கொஞ்சம் கடலை சுண்டலாக்க
யாரோ ஒருவன்சுண்டலானஅந்தக் கொஞ்சம் கடலைஒருவாளியில் அடைக்க
கடல் பார்க்கப்போன நான்
பத்து ரூபாய்க்கு வாங்கியஒரு பொட்டல்ம்சுண்டலெனும் கொஞ்சம் கடலை
தின்னுவதாபருகுவதாகுழப்பத்தில் நிற்கிறேன்
Published on January 25, 2024 18:52